Advertisment

பெண்களின் பாதுகாப்பு தான் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை : இன்-யூத் சர்வே

பெண்களின் பாதுகாப்பினைத் தொடர்ந்து, மதங்களை வைத்து செய்யப்படும் அரசியல், கலவரம் மற்றும் ஊழல் ஆகியவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha Elections 2019: InUth-Yuvaa survey

Lok Sabha Elections 2019: InUth-Yuvaa survey

Lok Sabha Elections 2019: InUth-Yuvaa survey :  இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் இளைஞர்களுக்கான இணையம் தான் இன் - யூத் ( InUth) இணையதளம். யுவா என்ற அமைப்புடன் இணைந்து இன் - யூத், முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடம் இருந்து சர்வே ஒன்றை எடுத்துள்ளது.

Advertisment

இந்தியாவில் அவர்கள் பார்க்கும் பிரச்சனைகளில் முதன் மூன்றை பட்டியிலிட்டுள்ளனர். பெண்களின் பாதுகாப்பினைத் தொடர்ந்து, மதங்களை வைத்து செய்யப்படும் அரசியல், கலவரம் மற்றும் ஊழல் ஆகியவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Lok Sabha Elections 2019: InUth-Yuvaa survey

Lok Sabha Elections 2019: InUth-Yuvaa survey

ஜனவரி முதல் மார்ச் வரையில் இந்தியாவில் உள்ள 25 நகரங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டது. 65க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வேயில் இந்த பட்டியலை தந்துள்ளனர் இளைஞர்கள்.

இது தொடர்பான முழுமையான கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

சர்வே எடுக்கப்பட்ட மாணவர்களில் 29% தங்களால் வாக்களிக்க இயலாது என்றும், தங்களின் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றும் கூறினர்.

அரசியல் குறித்த கேள்விகளுக்கான பதில்கள்

சர்வேயில் கலந்து கொண்ட மாணவர்களில் 55.6% பேர், அரசியலை எதிர்மறை எண்ணங்கள் கொண்டே பார்க்கின்றனர். 11.1% நபர்கள் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. 33.3% நபர்கள் பாசிட்டிவாக அரசியலை காண்கின்றனர்.  டையர் 2 நகரங்களில் இருக்கும் மாணவிகளை விட டையர் 1 நகரங்களில் குறிப்பாக மாணவர்கள் அரசியலை நெகட்டிவாக காண்கின்றனர்.

Lok Sabha Elections 2019: InUth-Yuvaa survey

இளைய தலைவர்களை பிரதிநிதிகளாக தேர்வு செய்யாமல் இருப்பது தான் இவர்கள் அரசியலை வெறுக்க காரணமாக அமைகிறது என்று கூறுகின்றனர். அதனை அடுத்து மதக்கலவரங்கள் மற்றும் ஊழல் காரணங்களாலும் மாணவர்கள் இந்த அரசியலை எதிர்மறையாக காண்கின்றனர். மாணவர்கள் அனைவரும் ஒன்று போல், தேர்தலில் பிரதிநிதிகளை மையப்படுத்தியே வாக்களிப்போம் என்றும், கட்சிகளை நம்பி வாக்களிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

முக்கிய பிரச்சனைகள்

20% மாணவர்கள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் தொடர்பான பிரச்சனைகள் தான் இந்தியா சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனைகள் என்று கூறுகின்றனர். பெண்கள் தரப்பில் கூறப்படும் பிரச்சனைகள் பொதுவாக ஊழல், வறுமை, ஆண்கள் தரப்பில் கூறப்படும் பிரச்சனைகள் மதக்கலவரங்கள் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சனைகள் ஆகும்.

Lok Sabha Elections 2019: InUth-Yuvaa survey

டையர் 1 நகரங்களான டெல்லி, கல்கத்தா, ஹைத்ராபாத் மற்றும் பெங்களூரில் வசிக்கும் இளைஞர்கள் பொதுவாக மதக்கலரவங்கள் மற்றும் ஊழல் மிக முக்கியமான பிரச்சனைகளாக பட்டியலிடுகின்றனர். டையர் 2 வில் இருக்கும் மாணவர்கள் சொல்லும் பிரச்சனைகள் உள்கட்டமைப்பு மற்றும் கல்வி ஆகும்.

சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்களில் 74.3% இளைஞர்கள் சமூக வலைதளங்களை நெகடிவாகவும், 11.4% நபர்கள் நியூட்ரலாகவும் காண்கின்றனர்.  போலியான செய்திகளை வைத்து பரப்பப்படும் அரசியல் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் கார்ரணமாக 47.1% நபர்கள் முகநூலை வெறுக்கின்றனர்.

அதே போல் 20.6% நபர்கள் மீம்கள் வன்மத்தை வலியுறுத்தும் ஒரு கலாச்சாரமாகவும் பார்க்கின்றனர். 20.6% நபர்கள் மதக்கலவரங்களை தூண்டும் வகையில் சமூக வலைதளங்கள் இயங்கி வருவதால் அதனை வெறுக்கின்றோம் என்றும் கூறியுள்ளனர்.

மற்ற பிரச்சனைகள்

கிட்டத்தட்ட 68% நபர்கள் நோட்டாவை பாசிட்டிவாக காண்கின்றனர். அவர்களில் பலர் போட்டி ஓட்டு என்றும் அதனை அழைக்கின்றனர். 62% இளைஞர்கள் மாணவர்களுக்கான ஸ்டூடன்ஸ் பாலிடிக்ஸிற்கு ஆதரவு அளிக்கின்றனர். இதன் மூலம் நிறைய இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக கூறுகின்றனர்.  சர்வேயில் கலந்து கொண்ட மாணவர்களில் 86% பேர் மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

அவர் கொண்டு வந்த வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் நாட்டிற்கு பயனளிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர். மோடியை ஆதரித்த அனைவரும் பாஜகவை ஆதரிக்கவில்லை என்பதும் உண்மை தான். மோடி குறித்து நெகட்டிவாக கருத்து கூறிய மாணவர்கள் அனைவரும் பாஜகவை மதக்கலவரத்தை தூண்டும் ஒரு கட்சியாகவே பாவிக்கின்றனர்.

Lok Sabha Elections 2019: InUth-Yuvaa survey

General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment