Maulshree Seth, Milind Ghatwai
Lok Sabha Elections 2019 PM Modi : 7 கட்டங்களாக நடைபெறும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 7வது கட்டமாகவே வாரணாசியில் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக சார்பில் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று அவர் பதோஹியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அப்போது உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்தார் நரேந்திர மோடி. பதோஹி மாவட்டத்திற்கு ரவிதாஸ் நினைவாக ரவிதாஸ் நகர் என்ற பெயரை சூட்டினார் மாயாவதி. அகிலேஷ் யாதவ் மீண்டும் ஆட்சிக்கு வர அந்த பெயரை நீக்கம் செய்தார். இது ரவிதாஸுக்கு ஏற்பட்ட கலங்கம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார் மோடி. ஆனால் இன்றோ ஒரு கட்சியினருக்காக மற்றொரு கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் ஆட்சி காலத்தில், அவர்களின் உறவினர்களுக்கு அதிக அளவில் உதவி செய்தார்கள். நானோ குஜராத் மாநிலத்தில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தேன். பிறகு கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு பிரதமர் அமைச்சராக சேவையாற்றி வருகின்றேன். என்னுடைய பெயரிலோ என்னுடைய குடும்பத்தினர் பெயரிலோ எங்கேனும், வெளிநாட்டில் சொத்துகள் இருப்பதாகவோ, பண்ணை வீடுகள் வாங்கியதாகவோ குற்றச்சாட்டுகள் உண்டா என்று கேள்வி எழுப்பினார் மோடி.
என்னுடைய உறவினர்கள், சகோதரர்கள் என யாருக்காவது அரசியல் மூலமாக ஆதாயம் பெற்றுத்தந்தேனா என்று கேள்வி எழுப்பினார் மோடி. பிறகு இதை விட நாட்டுக்கு என்ன வேண்டும் என்றும் மக்களிடம் கேட்டார்.
காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி - கட்சியின் தலைமைகள் மக்களிடம் சாதிய ரீதியாக வேறுபாடுகளை உருவாக்கிவிட்டு, அதில் ஆதாயம் அடைந்து கொள்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருந்த நிலையையும், இன்றைய நிலையையும் நீங்கள் நன்றாக யோசித்துவிட்டு பிறகு வாக்களியுங்கள் என்று கூறினார் மோடி.
இது தொடர்பான முழுமையான கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
மத்தியப் பிரதேசத்தில் பரப்புரையில் ஈடுபட்ட மோடி
பின்பு மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாகரில் பரப்புரையில் ஈடுபட்டார் மோடி. அப்போது ராகுல் காந்திக்கும், நீர் மூழ்கி கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் துணை இயக்குநராக இருந்தது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். பேக்கோப்ஸ் எனப்படும் அந்த அலுவலகத்திற்கு மோடி சூட்டிய பெயர் போக் ஆஃபிஸ் ஆபரேசன். எப்போதும் திரைகளுக்கு பின்னால் நடைபெறும் வியாபாரம் என்றும் கேள்வி அவர் கூறினார்.
இந்த விசயமும் அம்பலமானதால் உலகநாடுகளே அவர்கள் மீது கோபத்தில் இருக்கிறது. முதலில் போஃபர்ஸ் துப்பாக்கிகள், பிறகு ஹெலிகாப்டர் ஊழல் தற்போது நீர் மூழ்கி கப்பல்கள் ஊழல். தோண்டத் தோண்ட ஆழமாகி வருகிறது அவர்க்களின் ஊழல் கணக்கு என்றும் குற்றம் சுமத்தினார் மோடி.
புதிதாக வாக்களிக்கும் இளைஞர்கள், இந்தியாவை தங்களின் சொத்து என்று நடத்துபவர்களை புறக்கணிப்பார்கள் என்று கூறியுள்ளார். மோடியின் ஆட்சி வேண்டாம் என்றும் அவர்கள் சொல்வதில்லை.
பின்னர் குவாலியரில் பரப்புரையில் ஈடுபட்டார் மோடி. அங்கு அவர், இந்தியாவின் 21ம் நூற்றாண்டிற்கான வளர்ச்சியை மையப்படுத்தியே வாக்களிக்கின்றார்கள் என்று கூறினார்.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரை ஐ.நா. சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதை பற்றி பேசிய அவர், மோடி ஒழுங்காக வேலை செய்கிறாரா என்றும் மக்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.