E P Unny
Lok Sabha Elections 2019 Sivaganga Constituency : 48 வயதான கார்த்தி சிதம்பரம் தேர்தல் களத்தை இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சந்திக்கிறார். ”வாக்களர்களின் பூத் ஸ்லிப் எழுதி கொடுக்க துவங்கியதில் இருந்து, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது, பொதுக்கூட்டங்களின் கால அட்டவணையை தயாரிப்பது, பூத் ஏஜெண்ட்டாக இருப்பது என இந்த தொகுதிக்காக நான் செய்யாதது என எதுவும் இல்லை” என்கிறார் கார்த்தி சிதம்பரம். பெரும்பாலான வேலைகள் அனைத்தும் அவருடைய தந்தைக்காக செய்தது. ஆனால் தற்போது என் தந்தை எனக்காக செய்கிறார் என்று பேச ஆரம்பித்தார் கார்த்தி சிதம்பரம்.
Lok Sabha Elections 2019 Sivaganga Constituency - வேட்பாளர்களின் கருத்து
மூன்று மணி இருக்கும். கட்சி உறுப்பினர்களிடம் காலையில் இருந்து நடந்த பேச்சுவார்த்தையில் சோர்வுற்றிருந்த கார்த்தி “நான் நன்றாக குளித்துவிட்டு சாப்பிட வேண்டும்” என்று கூறினார். ஆனால் அவருடைய தந்தையோ இன்னும் கட்சி உறுப்பினர்களுடன் பேசி வருகிறார்.
காரைக்குடி, மானகிரி கிராமத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் இயங்கி வருகிறது அவர்களின் அலுவலகம். பழங்கால ரெட்ரோ வீடு போல் மிக பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது அந்த வீடு. அவர்களின் பின்பக்க அலுவலகம் நிறைய பிளாஸ்டிக் சேர்கள், ஜெராக்ஸ் பேப்பர்களால் நிறைந்திருக்கிறது. அந்த அறைக்கு வெளியே சமூக வலைதளங்களில் வேகமாக கட்சியின் வேட்பாளரை அடையாளப்படுத்தும் முயற்சியில் சில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஜி.எஸ்.டி, சிறுபான்மையினர் விவகாரம், ஒரே கொளை முறை, கேபிள் டிவி விலை, தலித் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை, பண மதிப்பிழக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பெரிய அளவிலான பாதிப்புகள் என மோடிக்கு எதிராக இருக்கும் கருத்துகள் காரணாமாக வலுவான நிலையை தக்க வைத்துக் கொள்கிறார் கார்த்தி.
இதைப் பற்றி தெளிவாக பேசிய அவர் பிராந்திய கட்சிகளுடன் ஏற்பட்டிருக்கும் கூட்டணி குறித்தும் பேசுகிறார். இந்த மிகப் பெரிய கூட்டணியின் முக்கிய கட்சியான திமுக, இந்த தேர்தல் முடியும் வரை, இந்த கூட்டணியில் வெற்றி வாய்ப்பிற்காக உழைக்கும் என்று கூறியுள்ளார் கார்த்தி.
காரைக்குடியில் இருக்கும் திமுக தலைவர் சந்திரனின் வீட்டில் அமர்ந்து, இணைய சேவைகளுக்கான இணைப்புகள் அனைத்தையும் முறையே சரி செய்து, ஐ.டி.விங் தங்களின் வேலையை அங்கிருந்தே ஆரம்பித்து உள்ளன. அதிமுகவிற்கும், அதிமுகவின் ஓட்டு வங்கியை பிரிப்பதற்காகவே செயல்பட்டு வரும் அமமுகவின் செயல்பாடுகள் மற்றும் கருத்துகளுக்கு உடனே மாற்றுக் கருத்தினை தெரிவிக்க இந்த இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றார்கள் அக்கட்சி உறுப்பினர்கள்.
கார்த்திக்கு எதிராக சிவகங்கையில் களம் இறங்கும் பாஜக வேட்பாளர் எச்.ராஜா கூறுகையில், அவரால் எத்தனை வாக்குகளை பிரிக்க இயலும். ஒரு லட்சம் வாக்குகளை அவர்கள் பிரித்தாலும், இந்த தொகுதியில் நான் தான் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக கூறுகிறார். அதிமுக எம்பியின் வில்லா ஒன்றில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார் எச்.ராஜா. தேவக்கோட்டை நாகடி பகுதியில் அமைந்திருக்கிறது இந்த இடம்.
சிதம்பரத்தை விட அதிக முறை போட்டியிட்டுள்ளேன் என்று கூறிய எச்.ராஜா, 1999ம் ஆண்டு சீனியர் சிதம்பரத்துடன் போட்டியிட்டு தோல்வியடைந்த நாட்களை நினைவு கூறுகிறார். 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எச்.ராஜா இரண்டாவது இடத்திலும், கார்த்தி சிதம்பரம் மூன்றாவது இடத்திலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க்கது.
இங்கு நிறைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது உள்ளது. சிதம்பரம் இங்கு வந்தால் உள்ளூர்வாசி போல் தான் யோசிப்பார். ஆனால் பாஜகவினரோ தேசத்தின் நலனைப் போல் ஒவ்வொரு பிரச்சனையையும் கருதுவோம். டெல்லி எனக்கு இரண்டாவது தாய் வீடு. ஹிந்தியை மிகச் சரளமாக நான் பேசுவேன். ஆனால் சிதம்பரம் குடும்பத்தினரோ ஆங்கிலம் மற்றும் தமிழில் தான் சிறப்பாக பேசுவார்கள் என்று கூறினார் எச்.ராஜா.
மேலும் படிக்க : தேர்தல் 2019 : தமிழகத்தில் உதிக்கும் சூரியனும், உதிரும் நட்சத்திரங்களும்!