ஏப். 18-ல் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்: 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் அறிவிப்பு

Lok Sabha Election 2019 Dates, Schedule: வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்தே நடத்தப்படும்

By: Updated: March 10, 2019, 08:55:39 PM

Lok Sabha Election 2019 Schedule, Dates : தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டமன்ற இடைத் தேர்தலும் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

நடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிகிறது என்பதால், அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது. இதை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும். ஏழு கட்டத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டாம் 2ம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது” என்றார்.

Lok Sabha Election 2019: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

08:00 PM –  “ஒருவேளை ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் அதுகுறித்த தகவல் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கி, அவர்கள் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம்” என சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

07:40 PM – தொடர்ந்து பேசிய தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ, “தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம். இனி இலவச திட்டங்கள் அறிவிக்க அனுமதியில்லை. அதுகுறித்து கண்காணிக்கப்படும்” என்றார்.

07:30 PM – 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்தே நடத்தப்படும் என்றார்.

07:05 PM – 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவை தேர்தலோடு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

06:38 PM – இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும் மாநிலங்கள்

அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஓடிஸா, புதுச்சேரி, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம்.

06:33  PM – ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, தேர்தல் இப்போதைக்கு நடத்தப்படவில்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

06:25 PM – 7 கட்டங்களாக தேர்தல்; தொகுதிகள் விவரம்

முதற்கட்ட தேர்தல் – 91 தொகுதிகள்

இரண்டாம் கட்ட தேர்தல் – 97 தொகுதிகள்

மூன்றாம் கட்ட தேர்தல் – 115 தொகுதிகள்

நான்காம் கட்ட தேர்தல் – 71 தொகுதிகள்

ஐந்தாம் கட்ட தேர்தல் – 51 தொகுதிகள்

ஆறாம் கட்ட தேர்தல் – 59 தொகுதிகள்

ஏழாம் கட்ட தேர்தல் – 59 தொகுதிகள்

06:20 PM – ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா, தமிழ்நாடு, உத்தரகண்ட், அந்தமான் மற்றும் நிகோபார், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டயு, இலட்சத்தீவு, புது டெல்லி, பாண்டிச்சேரி மற்றும் சண்டிகார் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

06:10 PM – தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டமன்ற இடைத் தேர்தலும் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

05:59 PM – தமிழகத்தைப் பொறுத்தவரை 2ம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 

வேட்பு மனுத் தாக்கல் – மார்ச் 19

வேட்பு மனுத் தாக்கல் முடிவு – மார்ச் 26

வேட்பு மனு பரிசீலனை – மார்ச் 27

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் – மார்ச் 29

வாக்குப்பதிவு – ஏப்ரல் 18

வாக்கு எண்ணிக்கை – மே 23

05:55 PM – மக்களவைத் தேர்தல் 2019 ஏழு கட்டங்களாக நடத்தப்படவிருக்கிறது.

05:51 PM – தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

05:41  PM – முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகிறது. இதில் 22 மாநிலங்கள் அடங்குகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரண்டாம் கட்டத்தில் தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது.

05:32 PM – 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு.

05:24 PM – “யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள உதவும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் அனைத்து இடங்களிலும் இருக்கும். ஏறக்குறைய 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்” என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

05:19 PM – மேலும் அவர் கூறுகையில், “18 முதல் 19 வயதுக்குள் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வேட்பாளர்கள் படிவம் 26 தாக்கல் செய்யாவிட்டால் வேட்புமனு நிராகரிக்கப்படும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது” என்றார்.

05:15 PM – தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

05:00 PM – 17வது மக்களவைத் தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தலைமைச் செயலர்கள், டிஜிபிக்கள், இன்னபிற துறைகள் என அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே அறிக்கை வெளியிட தயாராகி இருக்கிறோம்.

04:45 PM – சரியாக மாலை 5 மணிக்கு தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிடவிருக்கிறார்.

03:00 PM – தேசிய காட்சிகளில் வேட்பாளர்கள் விவரத்தை அறிவித்த முதல் கட்சி காங்கிரஸ் தான். கடந்த வியாழன்று வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில், சோனியா காந்தி ரே பரேலி தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. உத்தரபிரதேசத்தில் 11 வேட்பாளர்கள், குஜராத்தில் 4 வேட்பாளர்கள் என மொத்தம் 14 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்.

02:00 PM – இன்று மாலை அதிமுக – தேமுதிக இடையேயான கூட்டணி ஒப்பந்த அறிக்கை வெளியாகும் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

12:50 PM – ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி அறிவிக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. ஜம்முவில் கூட்டணியாக ஆட்சி செய்துக் கொண்டிருந்த மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக, சட்டசபை கலைக்கப்பட்டது.

 

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Lok sabha poll schedule live updates ec to announce the date today at 5pm

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X