அனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி... மதுரையில் பரபரப்பு

விசாரணையின் அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்

Madurai Vote Counting Center : 18ம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் ( வேலூர் நீங்கலாக) தேர்தல் நடைபெற்றது. மதுரையில் சித்திரைத் திருவிழா கோலகலமாக நடைபெற்றதால், அங்கு இரவு எட்டு மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல்கள் முடிந்த பின்னர், வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குச்சாவடிகளில் இருந்து பெறப்பட்டு, பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பெண் அதிகாரி நுழைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் அதிகாரியான சம்பூரணத்திடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விசாரணையின் அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை அறிந்த மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மூன்று மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்த்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுரை வேட்பாளர்கள் சு. வெங்கடேசன் மற்றும் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் சம்பவம் குறித்து அறிந்து வர அவ்வாளகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரி சம்பூர்ணம் உட்பட, அனுமதி இன்றி உள்ளே வந்தவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியிர் நடராஜன் அறிவித்தார்.

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close