Harish Damodaran, Parthasarathi Biswas
Maharashtra assembly polls 2019 fodder camps : மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக போட்டியிடுகின்றன. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2019 ஜூலை மாதம் வரையான காலக்கட்டத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியின் போது அம்மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகள் தேர்தலில் நல்ல முடிவுகளை தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை நிறைவுற்றது. ஆனாலும் காகாசோ கைக்வாத் அமைத்திருக்கும் தீவன முகாம்களை நம்பி 540 கால்நடைகள்ள் உள்ளன. ஏப்ரல் மாதம் வரை அங்கு 700 பசுமாடுகளும் 200 கன்றுகளும் பராமரிக்கப்பட்டிருந்தன. சோலாப்பூர் மாவட்டத்தில் உருக்கும் மங்லவேதா தாலுகாவில் இருக்கும் இந்த பகுதியில் மேலும் இரண்டு இடங்களில் தீவன முகாம் இருந்தது. ஆனால் செப்டம்பர் 30ம் தேதி அவை மூடப்பட்டன.
எங்கள் கிராமத்தில் 2000 மக்களும் 3000 கால்நடைகளும் உள்ளன. கால்நடைகளுக்காக மூன்று தீவன முகாம்கள் இங்கு உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார் கைக்வாத். என்னுடைய முகாம் இந்த மாதம் இறுதி வரை செயல்பாட்டில் இருக்கும். மற்ற இரண்டு முகாம்களையும் அசோக் மோர் மற்றும் ஷிவாஜி ஔடாடே ஆகியோர் பாஜகவுடன் இணைந்து நடத்தி வந்தனர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க : இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் முழுமையாக படிக்க
கைக்வாத் முகாமில் தன்னுடைய 20 மாடுகளை வைத்திருக்கும் பாரத் சாலுன்கே கூறுகையில் “என்னுடைய மாடுகள் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 லிட்டர் வரை பால் தருகின்றன. இதற்கு முன்பு 18 முதல் 20 லிட்டர் வரை பால் கொடுத்தது. ஆனாலும் பரவாயில்லை. இந்த பஞ்சத்தில் அவைகள் உயிர் பிழைத்திருக்கிறதே. என்னுடைய வீட்டில் இவற்றை வைத்து போதிய உணவினை தர இயலவில்லை” என்று வேதனை தெரிவிக்கும் பாரத் ஒரு விவசாயி. தன்னுடைய 4 ஏக்கர் புஞ்சை பூமியில் சோளம் போன்ற குறுதானியங்களை விவசாயம் செய்து வருகிறார்.
சாரா சவானி என்று அழைக்கப்படும் இந்த முகாம்கள், மகாராஷ்ட்ராவில் உருவாக்கபட்ட 1,646 முகாம்களில் சில முகாம்கள் ஆகும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வரட்சி அதிகமாக நிலவிய காலமான ஜூனில் 11.16 கால்நடைகளுக்கு இங்கு உணவுகள் வழங்கப்பட்டன. இதில் 9.92 கால்நடைகள் பெரிய கால்நடைகளாகும். இந்த கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இது வாழ்வா சாவா என்ற போராட்டமாகா அமைந்திருந்தது. இந்த முகாம்கள் மூலமாக தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த முகாம்களுக்காக மகாராஷ்ட்ர அரசு ஏற்கனவே ரூ.850 கோடியை நிதியாக வழங்கியது. ஆரம்பத்தில் கால்நடைகளின் பராமரிப்பிற்காக அரசு பெரிய கால்நடைகளை பராமரிக்க ரூ. 70 மற்றும் சிறிய கால்நடைகளை பராமரிக்க ரூ. 35-யும் வழங்கியது. பின்பு அந்த பணம் ஏப்ரல் மாதத்தில் முறையே ரூ. 90 மற்றும் ரூ. 45 என வழங்கப்பட்டது. மே மாதத்தில் பெரிய கால்நடைகளுக்கு ரூ. 100ம் சிறிய கால்நடைகளுக்கு ரூ. 50ம் வழங்கப்பட்டது.
பீட் பகுதியில் 549 முகாம்கள் திறக்கப்பட்டு 3.49 லட்சம் விலங்குகள் பாதுகாக்கப்பட்டன. அகமது நகர் பகுதியில் 507 முகாம்கள் திறக்கப்பட்டு 3.34 லட்சம் கால்நடைகள் பாதுகாக்கப்பட்டன. சோலாப்பூரில் 248 முகாம்களில் 1.75 லட்சம் கால்நடைகள் பாதுகாக்கப்பட்டன். ஒஸ்மானாபாத்தில் 92 முகாம்கள் திறக்கப்பட்டு 0.85 லட்சம் கால்நடைகள் பராமரிக்கப்பட்டன.
மேலும் படிக்க : 20வது கால்நடை கணக்கெடுப்பு : நாட்டு உயிரினங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவு!
நாள் ஒன்றுக்கு இந்த முகாம்களில் 15 கிலோ பசுந்தீவனமும், 6 கிலோ உலர் தீவனமும், வழங்கப்பட வேண்டும். சிறிய கால்நடைகளுக்கு இதில் பாதி அளவு உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால் பல இடங்களில் ஆர்கனைஸர்கள் கரும்புடன், உலர்ந்த சோளத்தட்டை மற்றும் அடர் தீவனங்கள் ஆகியவற்றை உணவாக கொடுத்தனர் என்ற புகார் எழுந்துள்ளது.
ஜூலை இறுதி வரை பசுந்தீவனம் கிடைக்கவில்லை. வறட்சி காரணமாக இது சிரமமான காரியமாக அமைந்தது. அதனால் கரும்பினை உணவாக கொடுத்தோம். ஒரு டன்னுக்கு ரூ. 3000 முதல் ரூ. 4000 வரை கொடுத்து கரும்பினை விலைக்கு வாங்கினோம். இது கரும்பு விவசாயிகளுக்கு லாபகரமாகவே அமைந்தது. ஆனால் முழுக்கரும்பினையும் உணவாக கொடுத்தால் பால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் என தனியார் பால் நிறுவனம் சோலப்பூரில் முகாம்கள் வைத்திருக்கும் நபர்களை எச்சரிக்கை செய்துள்ளது. சோலாப்பூர் மாவட்ட பால் கூட்டுறவு அமைப்பிற்கு ஒவ்வொரு நாளும் ஆயிரம் லிட்டர் பாலை மங்கல்வேதா தீவன மையம் இந்த கால கட்டத்தில் கொடுத்து வந்தது. சங்கோலா தாலுக்காவில் ஏப்ரல் 27 முதல் செப்டம்பர் 30 வரை நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் பாலை கோலாப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கு சங்கோலா தீவன மையங்கள் உற்பத்தி செய்து வந்தது. கைக்வாத் முகாமில் மாடுகளை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு 1 லிட்டர் பாலுக்கு ரூ. 28-ஐ ஊதியமாக கொடுத்து வருகின்றனர். யூனியனில் ஒரு லிட்டர் பால் ரூ. 30.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.