Maharashtra, Haryana 2019 Election Voting Updates : பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற போதிலும், 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். மாலை 6 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 60.5% வாக்குகளும் ஹரியானாவில் 65% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மகாராஷ்ட்ராவில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ். இந்த மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் இதே நாளில் தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. புதுவையின் காமராஜர் தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்ட்ராவில் தற்போது வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்ற அதே நேரத்தில் சத்தாரா தொகுதியின் நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என்று மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இன்று காலை 9 மணி வரை மும்பையில் 5% வாக்குகள் பதிவாகியுள்ளன.
90 தொகுதிகளைக் கொண்டிருக்கும் ஹரியானாவில் இன்று காலை 7 மணியில் இருந்தே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இம்மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா, டிக்டாக் புகழ் சோனாலி போகத், மற்றும் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளை அதிகாலையிலேயே பதிவு செய்தனர். ஹரியானா தேர்தல் தொடர்பான அப்டேட்களை ஆங்கிலத்தில் படிக்க
Web Title:Maharashtra haryana assembly elections 2019 live updates
ஹரியானாவில் அசாந்த் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வாக இருக்கும் பக்ஷிஷ் சிங் விர்க் , இன்று வாக்குச் சாவடியில் பொது மக்களிடம் பேசிய பேச்சு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் இவிஎம் மெசினில் உங்களுக்கு பிடித்த எந்த பொத்தானையும் அழுத்துங்கள், ஆனால் எல்லா ஓட்டும் தாமறைக்கே செல்லும். இயந்திரத்தில் பூஜை செய்து சில விசயங்களை பொருத்தியுள்ளோம். மோடி மிகவும் புத்திசாலி நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால் எளிமையாக கண்டுபிடித்துவிடுவார் என்றும் கூறினார்.
பக்ஷிஷ் சிங் விர்க் பேச்சை ட்விட்டரில் வெளியிட்ட ராகுல் காந்தி, பாஜக கட்சியில் உண்மையான மனிதர் இவர்தான், என்று பதிவு செய்துள்ளார்.
பக்ஷிஷ் சிங் விர்க்கிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
பிற்பகல் 1 மணி வரையில் ஹரியானாவில் 25.09% வாக்குகளும் மகாராஷ்ட்ராவில் 17.76% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மனைவி அஞ்சலி மற்றும் மகன் அர்ஜூன் ஆகியோருடன் பாந்திரா மேற்கு தொகுதியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.Mumbai: Sachin Tendulkar, wife Anjali and their son Arjun after casting their vote at a polling booth in Bandra (West). #MaharashtraAssemblyPolls pic.twitter.com/SCMPcCOy03— ANI (@ANI) October 21, 2019
ஹரியானா அரசியலில் மிக முக்கியமான ஒருவராக கருதப்படும் நபர் அம்மாநில முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா. அவர் வருகையை ஒட்டி ஏற்கனவே பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் ரோஹ்தக் பகுதியில் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில் தற்போது தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் அவர்.
சிவசேன கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அவருடைய மனைவி ரஷ்மி, மகன்கள் ஆதித்யா, தேஜஸ் உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளை கிழக்கு பாந்திரா தொகுதியில் பதிவு செய்தனர். ஆதித்யா தாக்கரே வொர்லி தொகுதியில் சிவசேனா சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 10 மணி நிலவரப்படி ஹரியானா மாநிலத்தில் 8.92% வாக்குகளும், மகாராஷ்ட்ராவில் 5.77% வாக்குகளும் பதிவாகியுள்ளன
மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய மனைவி அம்ருதா மற்றும் அம்மா சரிதாவுடன் நாக்பூர் தொகுதியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தற்போது சைக்கிளில் வந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்துள்ளார். முதலில் ஓட்டு பின்பு தான் சாப்பாடு என்று ட்வீட் செய்த அவர், தற்போது நான் வாக்களிக்க செல்கிறேன் என்றும், ஹரியானா மக்கள் அனைவரும் தங்களின் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறும் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் மகராஷ்ட்ராவின் பல்வேறு பகுதியில் காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு கொங்கன் மகாராஷ்ட்ரா, மேற்கு மற்றும் மத்திய கொங்கன் பகுதிகள், லத்தூர், ஒஸ்மானாபாத் ஆகிய பகுதிகளிலும் காலையில் இருந்தே சாரல் மழை பெய்து வருகிறது. ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, கொலாப்பூர், சத்தாரா உள்ளிட்ட தொகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
மும்பையின் மேற்கு பாந்த்ரா தொகுதியில் முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான லாரா தத்தா தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
ஹரியானாவின் முதல்வர் மனோகர் லால் கட்டார் தன்னுடைய தொகுதியான கர்னாலில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்த சைக்கிளில் வருகை புரிந்தார்.
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தன்னுடைய வாக்கினை மும்பை தொகுதியில் பதிவு செய்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் தன்னுடைய வாக்கினை மகாராஷ்ட்ராவின் நாக்பூர் தொகுதியில் பதிவு செய்தார்.
காலை 9 மணி நிலவரப்படி ஹரியானாவில் மொத்தம் 8.73% வாக்குகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்ட்ராவில் 5.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஹரியானாவை பொறுத்தவரை இது மும்முனை போட்டியாகும். காங்கிரஸ், பாஜக, மற்றும் இந்திய தேசிய லோக் தளம். 2014 தேர்தலில் பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் இந்திய தேசிய லோக் தளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை பாஜக 75 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது. இந்த மூன்று பெரிய கட்சிகள் இல்லாமல் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 46 தொகுதிகளில் போட்டியிடுகிறது.