Mamata Banerjee : முன்னேற்றத்திற்கான அஜெண்ட்டா ஏதும் இல்லாத காரணத்தால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி என்னையும் நரேந்திர மோடியையும் நாள் ஒன்றுக்கு 10 நிமிடங்கள் திட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
கிழக்கு புர்த்வான் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய அமித் ஷா, 10 நிமிடம் என்னையையும் மோடியையும் திட்டுகிறார். பிறகு 2 நிமிடங்கள் நேரம் எடுத்து பாதுகாப்பு படையை சபிக்கிறார். தீதிக்கு மேற்கு வங்க வளர்ச்சிக்கான அஜெண்டா ஏதும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க : ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் மாநிலங்கள்; மத்திய அரசுக்கு “எமெர்ஜென்சி” சிக்னல் அனுப்பிய டெல்லி
மத்திய அமைச்சர் மேற்கு வங்கத்தில் முதல் ஐந்து கட்டங்களாக நடைபெற்று முடிந்த 180 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் 122 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று குறிப்பிட்டார். மமதா பானர்ஜி மே 2ம் தேதி அன்று அரியணையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் நந்திகிராம் தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றும் என்று கூறினார்.
5 கட்ட தேர்தலுக்கு பிறகு மிகவும் மனச்சோர்வு அடைந்துள்ளார் தீதி. 122 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பது உறுதியாகிவிட்டது. நாங்கள் அவரை விட முன்னேறி உள்ளோம். திரிணாமுல் காங்கிரஸ் இம்முறை வெற்றி பெறாது. சுவேந்து அதிகாரி நந்திகிராமில் வெற்றி பெறுவார் என்று கூறிய அவர் ஒரு பெரிய தோல்வியுடன் பானர்ஜிக்கு பெரும் பிரியாவிடை வழங்குமாறு ஷா மேலும் மக்களை வலியுறுத்தினார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், எல்லை தாண்டி நடைபெறும் கால்நடைகள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறினார். ஒவ்வொரு தேர்தல் நாளின் போதும் கூட டி.எம்.சியை சேர்ந்த உறுப்பினர்கள் மக்களை அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றவிடாமல் தடுக்கின்றனர் என்று கூறினார். இதற்கு காரணம் என்னவென்றால் மக்கள் அதிக அளவில் வந்து வாக்கு செலுத்துவதால் பானர்ஜி மிகுந்த கோபத்தில் உள்ளார் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil