கேரளா சட்டசபை தேர்தல் : பாஜக முதல்வர் வேட்பாளராக ”மெட்ரோ மேன்” அறிவிப்பு

Kerala Assembly Election : கேரளாவில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் இ.ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Metro Man As BJP CM Candidate in Kerala Assembly Election :  கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் பாஜகவில் இணைந்த ‘மெட்ரோ மேன்’ என்று பிரபலமாக அறியப்படும் 88 வயதான இ.ஸ்ரீதரன், முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று பாஜக இன்று அறிவித்துள்ளது. சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் ‘’விஜய் யாத்திரை’’ மேற்கொண்டுள்ள கேரளா பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் மற்ற வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாஜகவில் இணைவதற்காக தனது முடிவை அறிவித்த மெட்ரோ மேன் ஸ்ரீதரன், தொடர்ந்து, டெல்லி மெட்ரோவை ஒரு பொதுப் போக்குவரத்து மாதிரியாக அமைப்பதில் தனது பங்கைப் கொடுத்தார். தொடர்ந்து கொச்சி மெட்ரோ திட்டத்தின் வழிகாட்டியாக இருந்த ஸ்ரீதரன், கேரளா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை முடிவு செய்யவில்லை என்று  குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,”நான் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கிறேன். ஆனாலும் நான் இப்போது வசிக்கும் மலப்புரத்தில் பொன்னானி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு வெற்றி நிச்சயம். பாஜக ஆட்சிக்கு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என கூறிய அவர், வழக்கமான வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்ய மாட்டேன். “நான் வாக்கு கேட்டு வீடுகளுக்கும் கடைகளுக்கும் செல்லமாட்டேன். ஆனால், எனது செய்தி வாக்காளர்களை சென்றடையும், ”என்று அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Metro man as bjp cm candidate in kerala assembly election

Next Story
விசிக-வுக்கு 6 தொகுதிகள் அறிவிப்பு: திருமாவளவன் பேட்டி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com