minister jayakumar and thambidurai, அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் காலூன்ற பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என குருமூர்த்தி கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை காட்டம் தெரிவித்துள்ளனர்.
Advertisment
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக மற்றும் இடதுசாரிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று சில அரசியல் ஆராய்ச்சியாளர்களும், பிரமுகர்களும் கருத்து கணிப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது குறித்து அதிமுகவோ பாஜகவோ எதையும் வெளிப்படையாக இதுவரை கூறவில்லை.
அதிமுக - பாஜக கூட்டணி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Advertisment
Advertisements
இந்நிலையில், மேடை நிகழ்வில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றார். இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில், ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுக - பாஜக கூட்டணி குறித்து தெரிவித்தது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,
“அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்துக்கொண்டு ஒரு கருத்தை கூறியுள்ளார். அது அவரது ஆசையாகக்கூட இருக்கலாம். அதுகுறித்து நான் ஒன்றும் சொல்ல முடியாது.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைய வேண்டுமென்பது ஆடிட்டர் குருமூர்த்தியின் விருப்பமாக இருக்கலாம், பாஜகவுடன் கூட்டணி அமைக்க நாங்கள் விரும்ப வேண்டுமல்லவா?
கூட்டணி குறித்து பாஜக விரும்பினாலும், கூட்டணி என்பது குறித்து நாங்களும் விரும்பவேண்டும். அதுதான் முக்கியம். ஆகவே விருப்பம் முக்கியம். கூட்டணி குறித்து ஒருமித்த கருத்து முக்கியம். அதுகுறித்து முதல்வர், துணை முதல்வர் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும். ஆகவே கூட்டணி அந்த நேரத்தில் முடிவெடுக்க வேண்டிய ஒன்று” என்றார்
நேற்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் முன்னிட்டு கோவையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை சபாநாயகர் தம்பிதுரை இதே கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
“பாஜகவுடன் நல்ல நட்போடுதான் இருக்கிறோம். அதற்காக, அவர்கள் கொண்டு வரும் எல்லா திட்டத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அதிமுக கொள்கை உடைய கட்சி, பாஜகவைக் தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது.
பாஜகவைக் சுமத்து கொண்டு காலூன்ற வைக்க, அதிமுக என்ன பாவமா செய்தது? பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை. தேர்தல் வரும் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அதிமுக கட்சியைக் வளர்க்க நாங்கள் பாடுபடுவோமே தவிர, இன்னொரு கட்சியை வளர்க்க நாங்கள் பாடுபட மாட்டோம்” என காட்டமாக தெரிவித்தார்.