MK Stalin starts Election Campaign 2019: மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக அறிவித்த நிலையில், நேற்று தேர்தலை அறிக்கையையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, இன்று (மார்ச்.20) திருவாரூரில் இருந்து தேர்தல் பரப்புரையை ஸ்டாலின் துவக்கியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை குறித்தும் திமுகவின் தேர்தல் பிரச்சாரம் குறித்தும் அறிய ஐஇ தமிழ் வழங்கும் லைவ் அப்டேட்ஸுடன் இணைந்திருங்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கும் நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் மிக விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Web Title:Mk stalin election campaign dmk live updates
தூத்துக்குடி, ஒட்டப்பிடாரத்தில் கனிமொழி தனது பிரசாரத்தைத் துவங்கினார்.பிரசாரத்தில் அவர் பேசியபோது, ”இந்தத் தேர்தல் போராட்டக்களத்தில் அதிமுகவோ பாஜகவோ வெற்றி பெற்று விபத்து ஏற்பட்டால் ஜனநாயகம் இல்லாத சூழல் ஏற்படும். நீட் தேர்வைக் கொண்டு வந்த அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறியுள்ளது நகைச்சுவைக்கு உரியது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது உயிரிழந்த 13 பேரின் உயிரிழப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் தமிழக முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும். தேர்தலில் போட்டியிடும் எனக்கு நல் ஆதரவை வழங்க வேண்டும்’’ எனக் கூறினார்.
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள், தமிழச்சி தங்கபாண்டியன் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று தமிழச்சி ஆதரவாக தென்சென்னை பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொண்டர்கள் மத்தியில் பேசும் போது,ஒரு அழகான வேட்பாளரை பிரதிநிதியாக அனுப்ப தவறிவிடாதீர்கள்'. நான் அழகு என்று அவரது தோற்றத்தை சொல்லவில்லை.
தமிழ் மீது அவர் கொண்ட பற்று, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற கொள்கை என்பதையே அழகு என்று சொல்கிறேன் என்று அவர் கூறினார்.தொண்டர்களின் எழுச்சியை பார்க்கும்போது தமிழச்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது.’ என்று கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி,
தி.மு.கவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை மனதில் கொண்டே, வாரிசுகளுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கருத்து கூறினார். தி.மு.க வெற்றிக்கு தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1,500 கிடைக்கும் என ஜெயக்குமார் கூறியதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக புகார் அளித்துள்ளது.
ஸ்டாலின் பேசியதாவது, “ 2016 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திருவாரூரில் இருந்து வெற்றி பெற்றவர் கலைஞர் . மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் . எடப்பாடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டுள்ளனர். . எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என்பது வேடிக்கை . 18 தொகுதி தேர்தல் முடிவு வரும் போது எடப்பாடி அரசு அகற்றப்படும். கொள்கை அடிப்படையில் அமைந்தது தான் திமுக கூட்டணி.
ஊழல் செய்த எடப்பாடியுடன் மோடி கூட்டணி வைத்துள்ளார். . பொதுப்பணித்துறையில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது . குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கி உள்ளார். தற்போது குட்கா வழக்கு சிபிஐ வசம் உள்ளது . மக்களை ஏமாற்ற தான் பாஜக-அதிமுக கூட்டணி வைத்துள்ளது.ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளுடன், மோடி ஆட்சிக்கு முடிவுரை. நரேந்திர மோடி இரும்பு மனிதர் அல்ல, நரேந்திர மோடி கல் பிரதமர். திமுக ஆட்சியில் ரூ.7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது எனவும் கூறினார்.
தேர்தல் பிரச்சாரம் கூட்டத்தில் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவின் தலைநகரம் திருவாரூர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருவாரீல் ஓட்டு நாங்கள் (திமுக) வர வேண்டிய அவசியமே இல்லை. இங்கு இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் எங்களது உறவினர்கள் தான்" என்றார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு அங்கு கூடியிருந்த மக்கள் கரகோஷங்களை எழுப்பினர்.
திமுக தேர்தல் அறிக்கையில் சிறு குறு விவசாயிகளின் அனைத்து வகையான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு பாதுகாப்பு கேட்டு, மறைந்த சாதிக் பாட்ஷா மனைவி இன்று சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் மனு அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக அவர் செய்தியாளர்களையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் திருவாரூரில் திமுக தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம், சாதிக் பாட்ஷா மனைவி செய்தியாளர்களை சந்திக்க இருப்பது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ள ஸ்டாலின் மக்களிடையே பேசியதாவது, “ உரிமைக்காக போராடும் விவசாயிகளை பிரதமர் மோடி மதிக்கவில்லை. நடிகர் - நடிகைகளை சந்திக்கவே அவருக்கு நேரம் சரியாக உள்ளது. பொதுமக்களின் வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் போடப்படும் என்று வாக்குறுதி அளித்த மோடி, ரு. 15 கூட போடவில்லை என்பதே உண்மை.. மத்தியில் ஆளும் பாஜக அரசை விரைவில் வீட்டுக்கு அணுப்ப வேண்டும்” என்று பேசினார்.
திருவாரூரில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட ஸ்டாலின், மகளிர் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். இந்த கூட்டத்தில் வேலை செலும் பெண்கள், சுய உதவி குழு நடத்தும் பெண்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்குப் பதிலாக, பிற்பகல் 3 மணிக்கு சென்னை, தலைமை நிலையம், ‘தாயக’த்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தின் போது ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக் கொண்ட சிறுமி
திமுக தேர்தல் அறிக்கை! முழு விவரம்
திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் வழியெங்கும், பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். சிறுவர், சிறுமியர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து தொடங்கினார் மு.க.ஸ்டாலின். திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.