DMK President MK Stalin Statements in Lok Sabha Election 2019: மக்களவை தேர்தல் முடிவுகள் மே.23ம் தேதி வெளியாகவுள்ளது. எக்ஸிட் போல் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்புகளை அள்ளித் தெளிக்க, நம்புவதா வேண்டாமா சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களே குழப்பத்தில் இருக்கின்றனர். எது எப்படியிருந்தாலும் இன்னும் சில மணி நேரங்களில் முடிவு நமக்கு தெரிந்துவிடும்.
மேலும் படிக்க - "ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு" - பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட 'பன்ச்'கள்! ஒரு பார்வை
அது ஒருபக்கம் இருக்கட்டும். அதற்கிடையில், தமிழக தேர்தல் களத்தில் நிகழ்ந்த சூடான, சுவாரஸ்யமான சில நிகழ்வுகளை உங்களுக்கு தொகுத்து வழங்கியிருக்கிறோம். குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரைகளின் போது பேசியவற்றில் உள்ள ஸ்பெஷல் பன்ச்-கள் இதோ,
'தி.மு.க, அ.தி.மு.க- பா.ஜ.க போல் திரைமறைவில் “தரகு” பேசும் கட்சியல்ல'.
'உனக்கு நான், எனக்கு நீ என்று ஊழல் அ.தி.மு.கவும், மதவாத பா.ஜ.க.வும் கச்சை கட்டிக் கொண்டு தி.மு.க தலைமையிலான கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் முயற்சி படு தோல்வியடையும்'.
'நாட்டை ஆள்வது ஒரு சர்வாதிகாரி. மாநிலத்தை ஆள்வது உதவாக்கரை. அங்கு சர்வாதிகாரி இங்கு உதவாக்கரை'.
'நான் சீமான் வீட்டுப்பிள்ளை அல்ல சாமானியன் வீட்டுப் பிள்ளை'.
'ஏன் வாரிசுக்கு சீட் கொடுக்கக்கூடாதா?'.
'எச்.ராஜா ஒரு கடைந்து எடுக்கப்பட்ட அயோக்கிய அரசியல்வாதி. அவரைப்போன்ற ஒரு அயோக்கிய அரசியல்வாதியை இந்தியா முழுவதும் தேடிப்பாா்த்தாலும் நாம் கண்டுபிடிக்க முடியாது'.
மேலும் படிக்க - ராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்... யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்?
'எத்தனை மதக்கட்சிகள் வந்தாலும் திராவிடத்தை வீழ்த்த முடியாது'.
"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே'' அதை மாற்றி "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே''என்று பாடலாம்.
'ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் போது கைகட்டி குனிந்து நின்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போது எம்ஜிஆரை போல் கழுத்தில் துண்டு எல்லாம் போட்டு பேசுகிறார்'.
'முதல்வருக்கு இணையாக.. அது கூட வேண்டாம்.. ஒரு அமைச்சர் அந்தஸ்தில் இருக்கிறேன். நான் புகார் கொடுக்கிறேன். மோடி வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. எடப்பாடி வீட்டிலும் பணம் குவிந்திருக்கிறது. அங்கு சென்று போடுவீர்களா சோதனை?'.
'எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை கொண்டு போய் அமித்ஷாவிடம் அடகு வைத்துள்ளார். மார்வாடி கடையில் கொண்டு சென்று அடகு வைத்தால் கூட மீட்டுவிடலாம். அமித்ஷாவிடம் அடகு வைத்துள்ளீர்களே, அதை மீட்கவே முடியாது'.
'இந்தியாவே திரும்பி பார்க்கக்கூடிய அளவிற்கு மெகா கூட்டணி வைத்துள்ளோம் என எடப்பாடி கூறுகிறார். சாக்கடையில் நாற்றம் வந்தால் கூடத்தான் திரும்பி பார்ப்பார்கள்'.
'சென்னை திமுகவின் அன்னை'.
'நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு என்கிற ஜவ்வு கிழிந்து தொங்கும்'.
'நாம் ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக ஜெயலலிதா மரணத்துக்கு யாரெல்லாம் காரணமோ, அவர்களைப் பிடித்து, ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுப்போம். யாராக இருந்தாலும் விடமாட்டேன்'.
'மே 23-க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கப் போகிறது. மோடி மற்றும் எடப்பாடியின் கதை காலி. நான் சொல்வது நடக்கும். நான் கருணாநிதியின் மகன்'.
'பாஜகவுடன் கூட்டணி பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்'
இந்த எல்லா பன்ச்-களுக்கும் மே23ம் தேதி விடை தெரிந்துவிடும்.