Advertisment

Election 2019 Updates: காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!

Election 2019 Updates: தே.மு.தி.க கட்சி, அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
opinion poll 2019, 7th phase election 2019, exit polls 2019 Tamil Nadu, எக்ஸிட் போல் முடிவுகள்

opinion poll 2019, 7th phase election 2019, exit polls 2019 Tamil Nadu, எக்ஸிட் போல் முடிவுகள்

Election 2019 Live Updates: மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 18-ம் தேதி தேர்தல் நடப்பதால், ஏறக்குறைய அனைத்துத் தலைவர்களும் தங்களது பிரச்சாரத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார்கள்.

Advertisment

இந்நிலையில் தே.மு.தி.க கட்சி, அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது. இதுவரை தே.மு.தி.க சார்பில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

Election 2019 Updates: DMK Chief MK.Stalin's Campaign at Kanchipuram

ஆனால் தொண்டர்களுக்கோ தங்களது தலைவர் விஜயகாந்த் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்நிலையில் இன்று அவர் பிரச்சாரத்திற்கு வருகை புரிகிறார்.

தவிர, நாளை பிரச்சாரம் ஓய்வடைவதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

Live Blog

Election 2019 Updates: DMK Chief MK.Stalin's Campaign at Kanchipuram



























Highlights

    15:19 (IST)15 Apr 2019

    நாளை 6 மணி

    தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவு பெறுகிறது. 

    14:09 (IST)15 Apr 2019

    மதுரையில் கூடுதம் நேரம்

    சித்திரை திருவிழாவை ஒட்டி மதுரை மக்களவைத் தொகுதியில் 2 மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப் பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இங்கு வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    13:20 (IST)15 Apr 2019

    வாக்குப் பதிவு நேரம்

    மக்களவைத் தொகுதியில் காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    13:13 (IST)15 Apr 2019

    மதுரை தேர்தல் வழக்கு - தள்ளுபடி

    மதுரை மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

    12:56 (IST)15 Apr 2019

    எடப்பாடி - மோடி

    ஊழல் செய்யும் எடப்பாடியை, மோடி பாதுகாக்கிறார் என மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

    12:24 (IST)15 Apr 2019

    எங்களுக்கு அதிகாரம் இல்லை - தேர்தல் ஆணையம்

    வெறுப்புப் பேச்சுகளை கொண்டு பரப்புரை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

    11:55 (IST)15 Apr 2019

    பி.எம்.மோடி படம்

    பி.எம்.மோடி படத்தைப் பார்த்துவிட்டு, தடையை தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். 

    11:48 (IST)15 Apr 2019

    திருப்போரில் மு.க.ஸ்டாலின்

    வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் அரசியல் கட்சித் தலைவர்களின் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    11:16 (IST)15 Apr 2019

    இறுதிக்கட்டம்

    நாளையுடன் மக்களவைத் தேர்தல் 2019-க்கான பிரச்சாரம் முடிவடைவதையொட்டி,  அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். 

    10:58 (IST)15 Apr 2019

    மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். 

    10:33 (IST)15 Apr 2019

    திருப்போரில் ஸ்டாலின் பிரச்சாரம்

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திருப்போரில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். 

    09:43 (IST)15 Apr 2019

    ஓய்கிறது பிரச்சாரம்

    ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடப்பதையொட்டி, நாளையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.  

    09:25 (IST)15 Apr 2019

    3 பேருக்கு பிரச்சாரம்

    தேமுதிக சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், கூட்டணி கட்சி வேட்பாளர்களான தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பால் ஆகியோரை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக, தேமுதிக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

    Election 2019 Live Updates: அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், ஓய்வெடுத்து வந்தார். சில நாட்கள் முன்பு வீடியோ பதிவில் பேசிய அவர், மருத்துவர்களின் ஆலோசனைகளின் படி, விரைவில் பிரச்சாரத்திற்கு வருவேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
    Vijayakanth M K Stalin General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment