கனிமொழி Vs தமிழிசை : கருத்து சுதந்திரம் பற்றி பேச யாருக்கு உரிமையுண்டு ?

தமிழிசை அளித்த புகாரின் பெயரில் சோபியா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

By: March 24, 2019, 8:19:08 PM

MP Kanimozhi Karunanidhi Vs BJP leader Tamilisai Sounderrajan : தூத்துக்குடி வேட்பாளராக திமுக சார்பில் கனிமொழி களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தில் 13 அப்பாவி பொது ஜனங்கள் கொல்லப்பட்டனர்.

சோபியா விவகாரம்

அது தொடர்பாக பல்வேறு தரப்பில் மக்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். கனடாவில் படித்துக் கொண்டிருந்த தமிழக மாணவி சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த போது, அவர் வந்த அதே விமானத்தில் தமிழிசை சௌந்தரராஜனும் பயணப்பட்டார்.

விமானத்திலேயே பாசிச பாஜக ஒழிக என்று அவர் கோசமிட்டார். பின்பு, விமான நிலையத்திற்கு வந்த பிறகும் அவருடைய கோஷம் வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து பாஜகவினர் மற்றும் அப்பெண்ணிற்கு இடையே பேச்சுவார்த்தை முற்றியது. தமிழிசை அளித்த புகாரின் பெயரில் சோபியா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கனிமொழி vs தமிழிசை சௌந்தரராஜன்

இந்நிலையில் இன்று கருத்து சுதந்திரம் பற்றி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்ட போது, என்னுடைய தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தை நான் பேசவில்லை. நான் திமுக என்ற மாபெரும் கட்சியின் பின்னணியில் பேசுகிறேன். ஆனால் உண்மையான கருத்துச் சுதந்திரம் பற்றி மாணவி சோபியாவிடம் தான் கேட்க வேண்டும். அவருடைய கருத்து சுதந்திரம் எப்படி பறிக்கப்பட்டது என்று தமிழிசையிடம் கேளுங்கள் அல்லது சோபியாவிடம் கேளுங்கள்.

பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்று குவித்த காங்கிரஸ் – திமுக கூட்டணி, 75ல் எமெர்ஜென்சியை கொண்டு வந்து, அனைத்து மக்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் கூட்டணி வைத்துள்ள இவர்களுக்கு கருத்து சுதந்திரம் பற்றி பேச என்ன தார்மீக உரிமை உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

மேலும் படிக்க : 2019 நாடாளுமன்றத் தேர்தல் : நேரடியாக போட்டியிடும் தமிழக அரசியல்வாதிகள் யார் யார்?

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Mp kanimozhi karunanidhi vs bjp leader tamilisai sounderrajan tussle on freedom of expression

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X