/tamil-ie/media/media_files/uploads/2019/02/a738.jpg)
Narendra Modi – Republic Bharat interview LIVE updates
Narendra Modi – Republic Bharat interview LIVE updates : பிரதமர் நரேந்திர மோடி, ரிபப்ளிக் சேனலின் நிறுவனர் அர்னாப் கோஷ்வாமிக்கு அளித்த பிரத்தேக பேட்டி.
இன்று காலை 8 மணிக்கு இந்தி மொழி செய்தி தொலைக்காட்சியான ரீபப்ளிக் பாரத் என்ற தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி. புல்வாமா தாக்குதல், மிஷன் சக்தி, ராகுல் காந்தியின் வறுமை ஒழிப்புத் திட்டம், சௌகிதார் கேம்பைனிங் என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மோடி அளித்த பதில்கள் இங்கே...
மேலும் படிக்க : மூன்றில் ஒரு பங்கு : வெறும் கனவாகிறதா 33% இடஒதுக்கீடு ?
Live Blog
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 8 மணியில் இருந்து புகழ்பெற்ற ரீபப்ளிக் ஹிந்தி சேனலில் பேட்டி அளித்தார். நேர்காணலில் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. . கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதில்கள் பற்றி ஒரு அலசல்
டெல்லி எவ்வளவு முக்கியமோ அதைபோல் மற்ற நகரங்களும் எனக்கு முக்கியம். சென்னை, புவனேஷ்வர், குஜராத் என அனைத்தும் எனக்கு டெல்லி போன்று தான். டெல்லி என்னை ஏற்றுக் கொண்டதா இல்லையா தெரியாது. ஆனால் டெல்லியை நான் இந்த நாட்டின் மூலை முடுக்கெடுல்லாம் எடுத்து சென்றுள்ளேன்.
நான் குஜராத்தின் முதல்வராக இருந்த சமயத்தில் இருந்து என்னை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும், என்னுடைய ஆட்சி காலத்தில் நான் நீதித்துறையையோ, பாராளுமன்றத்தையோ கட்டுபடுத்த நினைக்கவில்லை என்று. நான் இது போன்ற நேரங்களில் அமைதியாகவே இருக்கின்றேன். எமெர்ஜென்சியை உருவாக்கியது யார் என்று நான் கேட்கவேண்டுமா? தலைவர்களை யார் ஜெயிலில் அடைத்தது என்று கேட்க வேண்டுமா? சொந்த மாமனாரையே கொலை செய்தது யார் என்று கேட்க வேண்டுமா?
வாரிசு அரசியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, குடும்ப அரசியல் எனக்கு பிரச்சனையே இல்லை. ஆனால் இந்திய ஜனநாயகத்திற்கு இது மாபெரும் அச்சுறுத்தல். குடும்ப உறுப்பினர்களால் ஒரு கட்சி நடத்தப்படும் போது, குடும்ப கட்டுப்பாட்டிற்கு வெளியே இந்நாடு செயல்பட இயலாது. உங்களை போன்ற ஊடகத்துறை தான் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் .
கிட்டத்தட்ட 30 வருடங்கள் கஷ்டப்பட்ட மக்கள் கடந்த ஐந்து வருடங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இந்த எண்ணமே எனக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இம்முறையும் பெரும்பான்மை பெற்று வருவோம். தேசிய ஜனநாயக கூட்டணி - பாஜக தலைமையில் தான் ஆட்சி நடக்கும்.
இந்தியா ஒரு சிறந்த சட்ட அமைப்பினை கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பான நிறைய நீதிமன்ற நோட்டிஸ்களை பெற்றுவிட்டன. ஆனால் எந்த நேரத்தில் பதில் அளிக்கலாம் என்பது குறித்து காங்கிரஸ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. முறையான விசாரணை சரியான நேரத்தில் நடத்தப்படும்.
எங்களின் சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையாக இருந்தன. அதனால் தான், நீரவ் மோடி, விஜய் மல்லையா, மேஹூல் சோக்ஸி போன்றவர்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றனர். ஆனால் அவர்களின் சொத்து மதிப்பினை நாங்கள் கைப்பற்றி வருகின்றோம். கடந்த ஆட்சி காலங்களில், குற்றவாளிகள் யாரென்றே பலருக்கும் தெரியாது. அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி நம்மால் என்ன தெரிந்து கொள்ள இயலும். ? என்று கேள்வி எழுப்பினார் மோடி.
குஜராத்தில் நீண்ட வருடங்களாக ஆட்சியில் இருந்த முதல்வர் நான். நான் ஒரு டீக்கடையில் வேலை பார்த்தவன். முதல்வராக இருந்த போது இதை நான் எங்கும் கூறியது இல்லை. ஆனால் பிரதமரான போது நான் பெருமையாக நான் ஒரு ”சாய்வாலா” என்று கூறிக் கொள்வேன். சில நேரங்களில் நான் ஒரு நல்ல காவலாளியும் கூட. 2011-2012 பிரச்சார சமயத்தில் சௌகிதார் என்ற வார்த்தையை நான் உபயோகப்படுத்தினேன். காந்தியும் கூட ஒரு சௌகிதார் தான். இந்த நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யும் ஆத்மபலம் அவரிடம் இருந்தது.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்த போதும், பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததாக தொடர் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன என்று கேட்ட போது, ”26/11 தாக்குதல் முடிவுற்ற, என்னென்ன நடவடிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்று ஒரு பட்டியலையே இந்தியா பாகிஸ்தானிடம் அளித்தது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போதைய பாக். பிரதமர் அவர் நாட்டு மக்களுக்காக நல்லது செய்து வருகின்றார். தீவிரவாதத்தை ஒடுக்குவது அம்மக்களுக்கு செய்யும் மிக நல்ல விஷயமாக இருக்கும்.
எத்தனை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன, எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன, எத்தனை கோடி மக்கள் வங்கிக் கணக்குள் திறந்துள்ளனர் என்பதைப் பற்றி எதிர்கட்சியினருடன் விவாதம் செய்ய தயார் நாங்கள். ஆனால் அப்போது எதிர்கட்சி வேறு ஒரு பிரச்சனையை முன்னிறுத்தி பேசத் துவங்கிவிடும். இந்த ஆட்சி மட்டும் தான் மக்களுக்காக 24 மணி நேரமும் ஆட்சி செய்து வருகின்றது.
பாலகோட் தாக்குதல் நடைபெற்றது குறித்து பிரதமர் பேசுகையில் “இது என்னுடைய நடவடிக்கை. நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதாவது ஒன்று நடந்தால், நான் அந்த பிரச்சனையை விரைந்து முடிக்க விரும்புவேன். அவர்கள் பக்கத்தில் இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை தான். ஆனாலும் அன்றைய இரவு என்னால் தூங்க இயலவில்லை. புல்வாமா தாக்குதலும் பாலகோட் தாக்குதலும் இம்ரான் கானிற்கும் மோடிக்கும் இடையிலான மேட்ச் பிக்ஷிங் இது என்று எதிர்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றார்கள். ஆனால் நான் இந்த நாட்டின் மீது வைத்துள்ள நேசத்தை யாராலும் கேள்வி கேட்க இயலாது.
கடந்த 5 வருடங்கள் நாங்கள் வெற்றி கரமாக ஆட்சி நடத்த துணை நின்றவர்கள் நம் மக்கள். இந்திய மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மோடியால் மக்களுக்கு என்ன செய்ய இயலும், இந்த அரசு எத்தகைய மாற்றங்களை மக்களுக்காக கொண்டு வர இயலும், நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக எப்படி உதவும் என்பதை மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.
மிஷன் சக்தி, விண்வெளித்துறையில் இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. தேர்தலுக்கு சற்று முன்பாக இந்த வெற்றி கிடைத்திருப்பதை பற்றி கேள்வி எழுப்பிய போது, இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. மிஷன் சக்தி வெற்றி பெற்றது. அந்த வெற்றியை நாங்கள் உலகிற்கு கூறினோம். வெகு ஆண்டுகள் உழைப்பிற்கு பின் கிடைத்த வெற்றி அது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights