News In Tamil, 2021 tamil nadu assembly election: தேர்தல் வரலாற்றில் இந்த முறைதான் மிகக் குறைவான தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளை பெற்றிருக்கும் அந்தக் கட்சியின் உத்தேசப் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி 1991 தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதல் தேர்தலில் தனித்து போட்டியிட்டது பாமக. அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வென்றார். யானை சின்னத்தில் போட்டியிட்ட அவரை யானை மீது ஊர்வலமாக கோட்டைக்கு பாமக.வினர் அழைத்து வந்தனர்.
பாமக தனது 2-வது தேர்தலில் 1996-ம் ஆண்டு வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 116 இடங்களில் போட்டியிட்டது. இதில் 4 இடங்களில் ஜெயித்தது. 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 27 இடங்களைப் பெற்றுக்கொண்டு அதிமுக.வின் மெகா கூட்டணியில் போட்டியிட்டது. அதில் செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம் (தனி), பூந்தமல்லி, திருத்தணி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், செய்யாறு, வந்தவாசி (தனி), பண்ருட்டி, விருத்தாச்சலம், சங்கராபுரம், தருமபுரி, பென்னாகரம், தாரமங்கலம், சேலம்-2, கபிலர்மலை, எடப்பாடி, தாராபுரம், அந்தியூர், ஆண்டிமடம் ஆகிய 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்ட சபை தேர்தலில் அ.தி.மு.க. அணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது.
2001 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு ஜெயலலிதா 27 தொகுதிகள் ஒதுக்கினார். அதில் 20 இடங்களில் வென்று சட்டமன்றத்தில் வலிமையான கட்சியாக இடம் பெற்றது. பின்னர் 2006-ல் திமுக கூட்டணியில் 30 இடங்களையும், 2011-ல் திமுக அணியில் 31 இடங்களையும் பெற்று போட்டியிட்டது பாமக. 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணிக்கு பாமக திரும்பியிருக்கிறது. 30 ஆண்டு தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த முறைதான் 23 என்கிற குறைவான எண்ணிக்கையில் தேர்தல் களம் காண இருக்கிறது பாமக. வன்னியர் உள் ஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக அரசு ஏற்றுக்கொண்டதால், தொகுதி எண்ணிக்கையை குறைத்துக் கொண்டதாகவும் பாமக விளக்கம் அளித்திருக்கிறது.
2001 தேர்தலில் அதிமுக அணியில் பாமக வென்ற 20 தொகுதிகள் இவைதான்: செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம் (தனி), பூந்தமல்லி, திருத்தணி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், செய்யாறு, வந்தவாசி (தனி), பண்ருட்டி, விருத்தாச்சலம், சங்கராபுரம், தருமபுரி, பென்னாகரம், தாரமங்கலம், சேலம்-2, கபிலர்மலை, எடப்பாடி, தாராபுரம், அந்தியூர், ஆண்டிமடம் ஆகிய 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தோற்ற தொகுதிகள்: சைதாப்பேட்டை, அண்ணாநகர், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், ராதாபுரம், சிதம்பரம் ஆகிய 7 தொகுதிகளில் தோல்வி அடைந்தது.
அதிமுக அணியில் வென்ற மேற்படி 20 தொகுதிகளில் எடப்பாடி உள்ளிட்ட சில தொகுதிகளை தவிர்த்து மெஜாரிட்டியான தொகுதிகளை இந்த முறையும் தங்களுக்கு ஒதுக்கும்படி பாமக கோருகிறது. மேற்படி 27 தொகுதிகளில் இருந்து 22 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும்படி கேட்பதாகக் கூறப்படுகிறது. இவற்றில் பல தொகுதிகள் தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வசம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பாமக குறைந்த தொகுதிகளை பெற்றுக் கொண்டதால், பிற இரண்டாம்கட்டக் கட்சிகளுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. கடந்த தேர்தல்களில் அதிமுக அணியில் பாஜக.வை விட பாமக அதிக தொகுதிகளில் நின்றது. அதை சுட்டிக்காட்டி இந்த முறையும் பாமக.வைவிட குறைவான தொகுதிகளை பெற்றுக்கொள்ளும்படி பாஜக.வை அதிமுக வற்புறுத்துகிறது. தேமுதிக.வுக்கும் இதைச் சுட்டிக்காட்டி குறைந்த தொகுதிகளை ஒதுக்க நினைக்கிறது அதிமுக.
திமுக அணியிலும்கூட இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு குறைந்த இடங்களை ஒதுக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. பாமக குறைவான தொகுதிகளைப் பெற்றது, இரு அணிகளிலும் இதர இரண்டாம்கட்டக் கட்சிகளுக்கு நெருக்கடியே!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.