தமிழக தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடிய பல சிறிய அரசியல் கட்சிகளில் முக்கியமானது முன்னாள் திரைப்பட இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. இக்கட்சியும் திராவிட இயக்கத்தின் அடிப்படையை கொண்டுள்ளது. சில தேர்தல்களை சந்தித்திருக்கும் இக்கட்சி, சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இதில் 50% பெண்கள். நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 4% வாக்குகளை பெற்றது. இது இடதுசாரி மற்றும் தலித் கட்சிகள் பெற்ற வாக்குகளை காட்டிலும் கூடுதலானது.
சிறந்த பேச்சாளரான சீமான் 2009ம் ஆண்டு இலங்கை விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு உருவாக்கப்பட்டது. அவரது உரைகள், தமிழக கலாச்சாரம் அடையாளம் மற்றும் தமிழ் சாரத்தின் அடிப்படைகள் அல்லது வேரைத்தேடி செல்ல வேண்டிய அவசியத்தை வலுயுறுத்துகிறது. ஆனால் அவரது அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக தமிழக உணர்வுகளை குறிப்பாக புலம் பெயர்ந்தவர்களின் உணர்வுகளை அவர் பயன்படுத்திக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகளை மற்ற கட்சியினர் முன்வைக்கின்றனர்.
வளசரவாக்கத்தில் அமைந்திருக்கும் தன்னுடைய இல்லத்தில், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அவர், தன்னுடைய கட்சி வேட்பாளர்கள் 2 முதல் 3 லட்சம் வரை செலவழித்தால் போதுமானது. நாங்கள் மக்களிடம் இருந்து நிதி பெறுகின்றோம். இதுவரை 15 லட்சம் வரையில் பெற்றிருக்கின்றோம் என்று கூறிய அவர் தன்னுடைய கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பெரிய கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் என்று கூறினார். 50% பெண்களுக்கான ஒதுக்கீடு மட்டும் இல்லாமல் நா.த.க 13 இஸ்லாமியர்கள் மற்றும் 55 தலித்கள் மற்றும் ஒரு பிராமணரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
நாத்தீகம் மற்றும் பெரியாரின் கொள்கைகளில் இருந்து தமிழ் தேசியத்திற்கு சீமான் வளர்ச்சி அடைந்த விதத்தை இத்தனை ஆண்டுகள் நாம் பார்த்திருக்கின்றோம். தற்போது அவர் கட்சியின் விளம்பர பதாகைகளில் நெற்றியில் திருநீர் மற்றும் கோவிலுக்கு செல்லும் காட்சிகள் என்று சீமான் தென்படுகிறார். கடந்த காலத்தில் தமிழ் அடையாளம் குறித்து மட்டுமே பேசிய காரணங்களால் அவர் தமிழகத்தின் பால் தாக்கரே என்று ஒப்பீடுகளுக்கு ஆளானார்.
இது குறித்து பேசிய அவர், மரத்தாவின் சீமான் பால் தாக்கரே என்று கூறினால் என்ன? என்று கூறினார். பிறகு தமிழ் அடையாளம் குறித்த புரிதல் மிகவும் தாமதமாக தோன்றியது என்று கூறிய அவர், ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு இந்தியா ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை. ஆனால் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். மலையாளிகளும் தெலுங்கு மக்களும் வாழ்ந்து வந்தனர். நான் என்னுடைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை தான் பேசுகின்றேன். மற்றவர்களை விமர்சிக்கவில்லை என்றார்.
நாத்தீகத்தில் இருந்து அவருடைய பார்வை மாறியது என்பது, இந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழல் மாற்றங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. ”தமிழகர்கள் இந்துக்கள் கிடையாது. மாறுபட்ட சமூகத்தினர். ஆங்கிலேயர்கள் தான் தமிழர்களை இந்துக்களாக கூறியது. ஆரம்பத்தில் பெரியாரின் பாதையில் சென்றேன், இப்போது ஒரு பாதையை வழிநடத்துகின்றேன். தற்போது தமிழ் மக்களின் வாழ்க்கை என்பது அவர்களின் நம்பிக்கையையும் சேர்த்தது என்று தற்போது உணர்ந்துள்ளேன். நான் அவர்களை அரசியல் ரீதியாக வழிநடத்தும் போது நான் அவர்களின் கலாச்சாரத்திலும் ஈடுபட வேண்டும். இது என்னுடைய நம்பிக்கை அல்லது கடவுளின் இருப்பு பற்றியது இல்லை. நல்லெண்ணத்துடன் இருக்கும் எவரும், எதுவும் கடவுள் தான்” என்றார் சீமான்.
மக்களின் வழிபாடுகளையும் வெளிப்பாடுகளையும் பெரியார் மறுத்தது ஒரு சிறிய தவறு தான் என்றார் சீமான். நம்முடைய வழிபாட்டு தளங்களிலும் வரலாறு மற்றும் மரபு பற்றிய கல்வெட்டுகளும் கூட உள்ளது. இந்த அனைத்திலும் இருந்து மக்களை பிரித்து பெரியார் சமாதி அல்லது எம்.ஜி.ஆர் சமாதி அல்லது ஜெயலலிதா சமாதி போன்ற கட்டமைப்புகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்? இந்த பழங்கால கோவில்கள் போராட்ட வரலாற்றை சிறப்பாக கொண்டு செல்லவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசியலின் ஜாம்பவான்களாக கருதப்பட்ட மு கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த சீமான் தற்போது திமுக. அதிமுக அல்லது புதிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவோ எண்ணவில்லை என்று கூறினார். பலவீனமான மக்களின் விடுதலைக்கான போராட்டத்திற்கு முழுமையான சுதந்திரம் தேவைப்படுகிறது. நான் பலம் வாய்ந்த கட்சிகளுடன் இணைந்தால் அது ஏழைகளுக்கு உதவாது. என்னுடைய இலக்கு கமலையோ டி.டி.வி. தினகரனையோ முதல்வராக்குவது அல்ல என்றார்.
அதிமுக மீது ஒரு மென்மையான அணுகுமுறை இருப்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய போது, சி.ஏ.ஏ. மற்றும் நீட்டுக்கு எதிராக ஆளும்கட்சியை கடுமையாக விமர்சனம செய்ததை நினைவு கூறினார். மேலும் திமுக எங்களின் சுமைகளை தாங்குவது இயற்கையானது தான் என்றார் அவர். தத்துவரீதியாக திமுக உண்மையான திராவிட கட்சி. அதிமுக அதில் இருந்து தோன்றியது தான். எனவே திமுகவின் மீது தான் மேலும் விமர்சனங்கள் வைக்கப்படும் என்றார் அவர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாக இருப்பே தெரிந்திருக்காது. தற்போதும் கூட எங்கும் வெற்றி பெறாது. அவர்கள் அதிமுக பெயரில் தான் சவாரி செய்ய வேண்டும். அவர்கள் இந்தியாவின் பெரிய பகுதி. என்னை போன்று ஏன் அவர்கள் தனித்து போட்டியிட கூடாது? இந்துத்துவா சித்தாந்தம் எங்களின் மரபில் இல்லை. 3000 ஆண்டுகளாக, நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் காலத்தில் இருந்து, அவர்களுக்கு எதிராக போராடி வருகின்றோம். எனவே நரேந்திர மோடியின் தாமரை இங்கு மலராது. 100 முறை ஜே.பி. நட்டா தமிழகம் வந்தாலும், அவர்கள் வாங்கும் வாக்குகள் நோட்டாவைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.