On Kerala voting day, Sabarimala in focus, CM says ‘Gods with LDF’ : சபரிமலை கோவில் விவகாரம் 2019ம் ஆண்டு மிக முக்கிய விவகாரமாக மாறிய நிலையில் மீண்டும் செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் சமயத்தின் போது சூடு பிடித்தது. முதல்வர் பினராயி விஜயன், தேவர்களின் படை ஆளும் இடதுசாரி முன்னணிக்கு துணையாக இருக்கிறது என்று கூற அது பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
உயர் சாதி நாயர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வலதுசாரி அமைப்பான நாயர் சர்வீஸ் சொசைட்டியின் தலைமை அதிகாரி, கடவுள் நம்பிக்கைகளை பாதுகாக்கும் அரசு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் கூறிய விஜயன், கேரள மக்கள் வரலாற்று தீர்ப்பை இடதுசாரி கட்சிக்கு வழங்குவார்கள். நெருக்கடியில் அரசு மக்களின் பக்கம் நின்றது. மக்கள் அரசின் பக்கம் நிற்பார்கள் என்று அவர் கூறினார்.
சபரிமலை விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், விஜயன், சபரிமலையில் இருக்கும் ஐயப்பனும் தேவர்களும் இடதுசாரிகளின் பக்கம் நிற்கின்றனர். ஏன் என்றால் அரசு அந்த விவகாரத்தில் மக்கள் பக்கம் நின்றது என்றார். வெள்ள காலத்திலும் கொரோனா ஊரடங்கு காலத்திலும் அரசு செய்த மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் பேசினார்.
கண்ணூர் தர்மதம் தொகுதியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். முதல் அமைச்சரின் கருத்தை எடுத்துக் கொண்ட சி.பி.ஐ (எம்). பொலிட்பீரோ உறுப்பினர் கொடியேறி பாலக்கிருஷ்ணன், கடவுள்கள் வாக்களித்திருந்தால், அவர்களின் வாக்குகளும் எங்களுக்கே கிடைத்திருந்திருக்கும். அரசு அனைவருக்கும் பாதுகாப்பை வழங்கியது. இடதுசாரி அரசுக்கு இந்த நம்பிக்கை ஆதரவாக பெருகும் என்று அவர் கூறினார்.
முன்னதாக சபரிமலை விவகாரம் குறித்து பேசிய என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் நாயர், “மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். நம்பிக்கை மற்றும் சமூக நீதியை பாதுகாக்கும் அரசு அதிகாரத்திற்கு வர வேண்டும். ஆனால் தற்போது சில காலத்திற்கு நம்பிக்கையை பாதுகாக்க போராட்டம் எழுந்துள்ளது என்று கூறினார்.
பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்தது என்.எஸ்.எஸ். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் 2018ம் ஆண்டு தெரிவித்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து களத்தில் முன்னணி வகுத்தது. கேரள மக்கள் தொகையில் 14.5% நபர்கள் நாயர் பிரிவை சேர்ந்தவகள். தெற்கு மற்றும் மத்திய கேரளத்தில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இடதுசாரி அரசு நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்ற துவங்கியது. அதன் விளைவாக 2019ம் ஆண்டு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இடதுசாரி. 20 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே வென்றது அக்கட்சி.
செவ்வாய்க்கிழமை அன்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் முதல்வரின் கருத்திற்கு பதில் கூறியது. முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, இவை பினராயி விஜயனின் தோல்வி பயத்தை காட்டுகிறது என்று கூறினார். பயம் ஏற்பட்டத்தாலே அவர் கடவுளின் ஆதரவை தேடுகிறார். தேர்தல் நாளன்று விஜயனின் நிலைப்பாட்டை யாரும் அறிந்து கொள்ளப்போவதில்லை. காவல்த்துறையினரின் துணையுடன் இளம் பெண்களை சபரிமலைக்கு அழைத்து சென்ற விஜயனின் நிலைப்பாடு இன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அவர் உண்மையுள்ளவராக இருந்தால் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்க்கு ஆதரவாக விஜயன் அளித்திருந்த வாக்குமூலத்தை திரும்ப பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார்.
உம்மன் சாண்டியின் சக கட்சி ஊழியரும், முன்னாள் உள்த்துறை அமைச்சருமான சென்னிதலா, முதல்வர் ஐயப்பனின் கோவத்திற்கு ஆளாவார் என்றும் உண்மையான கடவுள் பக்தி கொண்டவர்கள் நாத்தீக ஐயப்பனுக்கு தக்க பதிலடி தருவார்கள் என்றும் கூறினார்.
இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன் அசுரர்கள் செய்யும் காரியத்தை விஜயன் செய்திருக்கிறார். தேர்தல் நாள் அன்று அவர் கூறியிருக்கும் கருத்து இடதுசாரி கட்சியினருக்கு உதவாது. விஜயனின் தவறான நடவடிக்கைகளை கேரள மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். நாத்தீக பெண்களை அவர் காவல்துறை உதவியுடன் கோவிலுக்கு அழைத்து சென்றார். அவர்களின் நுழைவை உறுதி செய்த பிறகு விஜயன் கடவுள் நம்பிக்கைக்கு சவால் விடுத்தார் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.