P Chidambaram condemned income tax dept raid : 18/04/2019 அன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் 39ம் தொகுதியிலும் நடத்தப்பட உள்ளன என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் நகைகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
இதே நேரத்தில் எதிர்க்கட்சியினர் வீடுகள், கல்லூரிகள், மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகள் என ஒவ்வொரு இடத்திலும் வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வீடு மற்றும் கல்லூரியில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. வேலூரில் தனியார் சிமெண்ட் ஆலையில் கோடிக்கணக்காக பணம் கைப்பற்றப்பட்ட பின்பு அங்கு தேர்தல் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தபப்ட்டது. இரவு 8 மணிக்கு ஆய்வு தொடங்கி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. ஆனால் அங்கிருந்து கைப்பற்ற ஒன்றும் இல்லை. சோதனைக்கு பிறகு எதுவும் கைப்பற்றப்படவில்லை என கனிமொழி அறிவித்திருந்தார்.
ட்விட்டரில் சிதம்பரம் கடும் விமர்சனம்
April 20192019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே
— P. Chidambaram (@PChidambaram_IN)
2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே
— P. Chidambaram (@PChidambaram_IN) April 17, 2019
இதனை அறிந்த பலரும், பல்வேறு விதமான அரசியல் விமர்சனங்களை வருமானவரித் துறையினர் மேல் வைத்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் இது குறித்தும், வருமானவரித்துறையினர் நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருமதி கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை. எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது?! 2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.