scorecardresearch

ராகுல் காந்தியின் ரூ. 72,000 திட்டம் கட்டாயம் சாத்தியம்.. ப.சிதம்பரம் உறுதி!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மறுநாளே இத்திட்டம் செயல்படுத்தப்படும் என கூறவில்லை

ராகுல் காந்தியின் ரூ. 72,000 திட்டம் கட்டாயம் சாத்தியம்.. ப.சிதம்பரம் உறுதி!
ப. சிதம்பரம் பேட்டி

ப. சிதம்பரம் பேட்டி : ராகுல் காந்தி அறிவித்த ரூ.72,000 திட்டம் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு எப்படி சாத்தியம் என்பது அரசியல் ஆலோசர்களின் கேள்விகாக இருந்து வருகிறது.

20 சதவீத ஏழைகளுக்கு வருவாய் உறுதி திட்டம் என ராகுல் அறிவித்திருப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைப்பெற்ற இந்த சந்திப்பில் ப. சிதம்பரம் இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, “ காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படுத்தப்படுவது உறுதி.

இந்த திட்டத்தால் 25 கோடி பேர் பயனடைவார்கள் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் இந்த திட்டம் குறித்து முழு செய்பல்பாடு பற்றி நீங்கள் காங்கிரஸின் விரிவான தேர்தல் அறிக்கையில் தெரிந்துக் கொள்வீர்கள்.

இந்தியா முழுவதும் படிப்படியாக 5 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆனால் அதே நேரம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மறுநாளே இத்திட்டம் செயல்படுத்தப்படும் என கூறவில்லை. . படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 12 சதவிகிதத்தை எட்டும்.100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் போலவே இத்திட்டத்தையும் செயல்படுத்துவோம். ஆண்டுக்கு 72ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டால் அது நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் மற்றத் திட்டங்களின் மானியங்களை பாதிக்காது.

பா.ஜ.க புள்ளிவிவரத் தரவுகளை அளித்து மக்களை நம்பவைத்து ஏமாற்றுகிறது. மாதம் 6ஆயிரம் ரூபாயை ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்கள் உழைக்கவேமாட்டார்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி 400 லட்சம் கோடி ரூபாயை எட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: P chidambaram press meet at chennai sathyamurthi bhavan