ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட அடுத்து யார் ஆட்சி அமைக்க உள்ளார்கள் என்பதை யூகிக்கும் வகையில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இது திமுக - அதிமுகவிற்கு இடையேயான போட்டியாக பார்க்கப்பட்ட போது கேரளம் மற்றும் மே.வங்கத்தில் இந்த போட்டிகள் பாஜகவிற்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வியை முன்வைத்தது.
ஆனால் தற்போதுவரை கேரளத்தில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் இடதுசாரி ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. 1983ம் ஆண்டு முதல் கேரளத்தில் தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை மாறிக் கொண்டே இருக்கும். மக்கள் இடதுசாரிகளை ஒருமுறை தேர்வு செய்தால் அடுத்த முறை காங்கிரஸ் தலைமையை தேர்வு செய்வார்கள்.
40 வருட பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் கேரள மக்கள் தற்போது இடதுசாரிகளுக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். சபரிமலை விவகாரம், தங்கக் கடத்தல் விவகாரம் என்று வரிசையாக இடதுசாரிகள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்தலில் 19 இடங்களில் தோல்வியை கூட ஏற்படுத்தியது சபரிமலை விவகாரம். ஆனால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல்களின் முடிவுகள் இடதுசாரிகளுக்கு புது உத்வேகம் அளிக்க மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளனர்.
2018,19 ஆண்டுகளில் முன் எப்போதும் காணாத மழையும், வெள்ளமும் மக்களை துவண்டு போக வைத்தது. ஆனாலும் தங்களால் மிக விரைவாக மீண்டு வர முடியும் என்ற உத்வேகத்தை மக்களிடம் கூட்டியத்தை இடதுசாரி அரசு. வெள்ளத்திற்கு பிறகு தொய்வு பெற்ற கேரள சுற்றுலாத்துறையை மீண்டும் வெற்றிப் பாதையின் பக்கம் இழுத்து சென்று மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஊன்றுகோலாய் இருந்தது. மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஐ.நாவையே திரும்பி பார்க்க வைத்தது இந்த அரசு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil