“மிஷன் சக்தி” மூலம் புதிய சாதனை படைத்த இந்தியா – மோடி பெருமிதம்

PM Narendra Modi Address to Nation Today LIVE Updates: மூன்று நிமிடங்களில் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் புதிய திட்டம் நிறைவேற்றம்

BJP launched Namo TV

PM Narendra Modi Address to Nation LIVE Updates: : நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான செய்தி ஒன்றை நான் வெளியிட இருப்பதால் மக்கள் அனைவரும் டிவி, ரேடியோ, மற்றும் இதர சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள் என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

Live Blog

15:13 (IST)27 Mar 2019
உலக நாடக தின வாழ்த்துகள் மோடி - ராகுல் காந்தி

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி  அமைப்பு செய்த இந்த வெற்றி சாதனைக்கு வாழ்த்துகள் கூறிய ராகுல் காந்தி, அதே ட்விட்டர் பதில், பிரதமர்  நரேந்திர மோடிக்கு “உலக நாடக தின” வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

15:11 (IST)27 Mar 2019
DRDO-வுக்கு குவியும் பாராட்டுகள்

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation) செய்த மகத்தான சாதனைகளுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

14:04 (IST)27 Mar 2019
மிஷன் சக்தி என்றால் என்ன ?

மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை நேரடியாக தன்னுடைய இலக்கை வெறும் மூன்று நிமிடங்களில் தாக்கி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க 

13:01 (IST)27 Mar 2019
பாராட்டுகளை கூறிய மோடி

மிஷன் சக்தியில் பணி புரிந்தவர்களுக்கு வாழ்த்துகளை கூறினார் மோடி

12:54 (IST)27 Mar 2019
Anti-Satellite (ASAT) Missile - ஏவுகணை கொண்டு தாக்குதல்

( Anti-Satellite (ASAT) Missile) என்ற ஏவுகணையை பயன்படுத்தி, 300 கிலோமீட்டருக்கு அப்பால் தாழ்வு சுற்றுவட்டாரப் பாதையில் இயங்கிக் கொண்டிருந்த செயற்கைக் கோள்களை அழித்து சாதனை

12:51 (IST)27 Mar 2019
A-SAT ஏவுகணை பயன்படுத்தி தாக்குதல்

A-SAT என்ற ஏவுகணையை பயன்படுத்தி, 300 கிலோமீட்டருக்கு அப்பால் தாழ்வு சுற்றுவட்டாரப் பாதையில் இயங்கிக் கொண்டிருந்த செயற்கைக் கோள்களை அழித்து சாதனை

12:48 (IST)27 Mar 2019
மூன்று நிமிடங்களில் மகத்தான சாதனை

நம் செயற்கைக் கோள்களை பாதுக்காக்க தொழில்நுட்பம் நமக்கு கைகொடுக்கும் என்று கூறிய மோடி, இந்த சாதனையை நாம் வெறும் மூன்று நிமிடங்களில் நிகழ்த்தி காட்டியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

12:43 (IST)27 Mar 2019
இந்தியாவின் செயற்கை கோள்களை பாதுகாக்கவே இந்த சோதனை

இந்தியாவின் செயற்கைக் கோள்களை பாதுகாப்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிற நாடுகளை பயமுறுத்தும் எண்ணத்தில் இந்த சோதனையை செய்யவில்லை

12:39 (IST)27 Mar 2019
மிஷன் சக்தி மூலம் மாபெரும் வெற்றி கண்ட இந்தியா - மோடி பெருமிதம்

விண்வெளியில் செயற்கை கோள்களை தாக்கி அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக முடித்தது இந்தியா.  அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளை தொடர்ந்து இந்தியா புதிய சாதனை.  

12:27 (IST)27 Mar 2019
உரையை துவங்கினார் மோடி

இந்தியா இன்று நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார் மோடி

12:23 (IST)27 Mar 2019
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம்

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று வருகிறார் மோடி. அந்த அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பின்னர் அவர் மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

12:14 (IST)27 Mar 2019
மோடியின் உரையை லைவாக பார்க்க

12:08 (IST)27 Mar 2019
மோடியின் ட்வீட்

2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற சமயம் இது என்பதால், தேர்தல் அறிக்கை அல்லது மக்களை கவரும் விதமாக மிக முக்கியமான திட்டங்களை வெளியிடலாம் என்று மக்கள் தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Web Title:

Pm narendra modi address nation live updates reactions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close