கால பைரவனை வணங்கி வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி!

காங்கிரஸ் தரப்பில் நரேந்திர மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டியிடுகிறார்

காங்கிரஸ் தரப்பில் நரேந்திர மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டியிடுகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Narendra Modi Files Nomination Today Varanasi

PM Narendra Modi Files Nomination Today in Varanasi

PM Narendra Modi Files Nomination Today Varanasi : உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருக்கும் மோடி, இன்று தன்னுடைய வேட்புமனுவை, வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்ய உள்ளார்.

Advertisment

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியிலும் போட்டியிட்டார் மோடி. இரண்டு தொகுதியிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில், வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இன்று  வரை வாரணாசியின் எம்.பியாக இருக்கிறார்.

மூன்றாம் கட்டமாக குஜ்ராத்தில் 23ம் தேதி 26 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மோடி குஜராத்தில் போட்டியிடுவார் என்று தொண்டர்கள் நினைத்தனர். ஆனால் அவர் அங்கு எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை.  இந்த தொகுதியில் வருகின்ற மே 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

கால பைரவனை வேண்டிக் கொண்டு வேட்புமனு தாக்கல்

இன்று வாரணாசியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் ப்ரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று நினைத்த நிலையில், அவருக்கு பதிலாக  அஜய் ராய் போட்டியிடுகிறார்.

Advertisment
Advertisements

மேலும் படிக்க : மோடிக்கு எதிராக ப்ரியங்கா காந்தி போட்டியில்லையா? வாரணாசி காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிப்பு !

தற்போது காசியில் உள்ள கால பரைவன் கோவிலில் கடவுளை வணங்கிய பின்னர் வேட்புமனுவை தாக்கல் செய்யப் போவதாக ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

வேட்புமனுவை தாக்கல் செய்தார் மோடி

பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ!

Narendra Modi General Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: