அதிமுக, திமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் முதற்கட்ட மக்களவை தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (மார்ச்.17) இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் ஜி.கே.மணி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பாமக முதற்கட்ட மக்களவை வேட்பாளர்கள் பட்டியல்
தர்மபுரி - டாக்டர். அன்புமணி ராமதாஸ்
விழுப்புரம் - வடிவேல் இராவணன்
அரக்கோணம் - ஏ.கே. மூர்த்தி
மத்திய சென்னை - சாம் பால்
கடலூர் - டாக்டர். கோவிந்தசாமி
என முதற்கட்டமாக ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாமக வெளியிட்டிருக்கிறது.
மேலும் படிக்க - மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! முழு விவரம்