தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற முக்கிய கூட்டணி கட்சியான பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாமக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 எம்.எல்.ஏ-க்கள் யார், அவர்கள் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்வோம்.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பாமக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பெரிய ஒரு போராட்டத்தை அறிவித்து தனது வன்னியர் ஆதரவு தளத்தை பலப்படுத்திக்கொண்டது. அதற்குப் பிறகு, தங்கள் கூட்டணி கட்சியான அதிமுக மூலம் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வைத்தது. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் நடந்த இடைத் தேர்தலில் பாமகவுடன் அமைத்தால் அடைந்த பலனை உணர்ந்திருந்த அதிமுக, பாமகவின் கோரிக்கையை துணிந்து நிறைவேற்றியது. அதிமுகவின் இந்த நகர்வுதான் மிக மோசமாக தோற்க வேண்டிய இந்த தேர்தலில் அதை கௌரவமாக தோல்வியடைகிற நிலைக்கு கொண்டுவந்தது. ஆனால், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமகவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பலன் அளிக்கவில்லை என்பதே கள நிலவரமாக உள்ள்து.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாமக, இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மயிலம், சேலம்
பாமக தலைவர் ஜி.கே.மணி பென்னாகரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தருமபுரியில் பாமகவைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்றார். அதே போல, மயிலம் தொகுதியில் சிவக்குமார், மேட்டூர் தொகுதியில் சதாசிவம் சேலம் மேற்கு தொகுதியில் இரா.அருள் வெற்றி பெற்றார். இதன் மூலம், அமையவுள்ள சட்டப் பேரவையில் பாமக சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் செல்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“