Prashant Kishore : இது மமதாவிற்கும் மோடிக்கும் இடையே நடக்கும் சண்டை என்று கூறுகிறார் தேர்தல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர். தற்போது மே.வ. தோற்றுவிட்டால் இந்தியா ஒரே தேசத்தால், ஒரே கட்சியால் ஆளப்படும் சூழலும், பாஜக மக்களின் வாழ்வை கட்டுப்படுத்தும் நிலையையும் உருவாக்கும் என்று எச்சரித்துள்ளார்.
ரவிஷ் திவாரி : மேற்கு வங்க அரசியல் மற்ற அரசியலில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
இது மிகவும் தனித்துவம் வாய்ந்த தேர்தல் ஏன் என்றால் கடந்த 30 - 35 ஆண்டுகளில் பிராந்திய கட்சி ஒன்று தேசிய கட்சியால் எதிர்கொள்ளப்படவில்லை. இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த போது மத்திய ஆளும் காங்கிரஸால் அதற்கு அச்சம் ஏற்பட்டதில்லை. இது போன்ற சூழலை இப்போது தான் மே.வ. பார்க்கிறது. நிச்சயமாக தேசிய கட்சி அதன் சொந்த திட்டங்களை கொண்டு வருகிறது. மே.வ. இதற்கு முன்பு எப்போதும் காணாத வகையில் சாதியை பாஜக இம்முறை பயன்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு சாதி இங்கில்லை என்று கூறவில்லை. ஆனால் உங்களிடம் இருக்கும் அரசியல் பகிர்வை பயன்படுத்தி அதிகமாக சுரண்ட முற்படுகிறது. அந்த வகையில் இது வித்தியாசமானது. இரண்டு பிராந்திய கட்சிகள் போட்டியிடும் போது அதனை சுற்றி எழும் சர்ச்சைகளும், கருத்துகளும் குறைவாகவே இருக்கும். ஒரு மாநில கட்சியை ஒரு தேசிய கட்சி எதிர்க்கிறது என்ற போது அதில் அதிக ஆர்வம் உள்ளது. அதனால் தான் நீங்கள் (ஊடகம்) தமிழக தேர்தலைக் காட்டிலும் மே.வ தேர்தலுக்கு அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள்.
அவிஷேக் ஜி. தஸ்திதர் : திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் சரிவுக்கு உங்களின் பங்கு என்ன? சுவேந்து அதிகாரி உட்பட பல முக்கிய தலைவர்களும் டி.எம்.சி. கட்சியை மம்தா இயக்கவில்லை என்று குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறார்களே?
நான் இங்கு என்னுடைய பணியை மட்டுமே செய்கிறேன். அது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது தான். சுவேந்து அதிகாரி திரிணாமுலின் ஒரு அதிகாரம் மிக்க தலைவராக இருந்தார். ஒரு மேடையில் 2014ம் ஆண்டில் இருந்து பாஜகவுடன் தொடர்பில் இருக்கின்றேன் என்று கூறினார். இப்போது நீங்கள் திரிணாமுலுக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த உண்மை தெரிகிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இது போன்ற ஆட்களை எல்லாம் வெளியே அனுப்புங்கள் என்று தான் கூறுவீர்கள். மேலும், மக்களவை தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற மறுசீரமைப்பிற்கு பிறகு தங்கள் விரும்பிய அளவிற்கான முக்கியத்துவம் கட்சியில் கிடைக்கவில்லை என்று நினைத்திருக்கலாம்.
அதனால் பிரசாந்த் கிஷோரை குறை கூறுவோம். ஏன் என்றால் அவர் தான் புதிதாக வந்துள்ளார் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் அது என்னை பாதிக்காது. தற்போது பிரசாந்த் கிஷோர் அதற்கு முன்பு சுவேந்து அதிகாரி, அதற்கும் முன்பு முகுல் ராய் என்று யாரோ ஒருவர் கட்சியை நடத்துகிறார்கள் என்பார்கள். பலரும் தற்போது மமதா கட்சியை நடத்தவில்லை என்று குற்றம் சுமத்துகிறார்காள். என்னுடைய விவாதம் என்னவென்றால், அமித் ஷா பாஜகவை வழிநடத்துகிறார். பாஜகவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் அவரால் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக நாம் தற்போது பாஜகவை மோடி நடத்தவில்லை என்று கூறிவிட முடியுமா. அது சரியான வாதம் கிடையாது. தலைவர் யாரை நம்புகிறாரோ அவர் கட்சியை, தலைவரின் வழிகாட்டுதல் படி நடத்துவார்.
திரிணாமுல் கட்சியின் மையம் தான் மமதா. மமதா இல்லை என்றால் திரிணாமுல் கட்சி இல்லை. அவர் ஒன்றும் பகுதிநேர அரசியல்வாதி இல்லை. 24 மணி நேரமும் அவர் அங்கே தான் இருக்கிறார். அவருடைய அனுமதி இல்லாமல் நீங்கள் எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்க முடியாது. நான் விஷயமல்ல. சுவேந்து அதிகாரியும் ஒரு காரணம் அல்ல. இந்த சண்டை மோடிக்கும் மமதாவிற்குமானது. என்னைப் போன்றவர்கள் முடிவில்லாதவர்கள். நாங்கள் அநேகமாக இரு தரப்பிலும் அதிக முக்கியத்துவம் தருகிறோம்.
மோனோஜித் மஜூம்தர் : வேட்பாளர்கள் தேர்வுக்கு எந்த அளவுக்கு நீங்கள் மமதாவிற்கு தரவுகளை வழங்கியுள்ளீர்கள்?
நாங்கள் செய்யும் வேலை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் அனைத்தையும் செய்கின்றோம். கட்சுஇ வெற்றி பெறுவதற்காக கட்சிக்கு மற்றும் அதன் தலைமைக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளும் வழங்கப்படுகிறது. நான் அவர்களின் சமூக வலைதளங்களை மேற்பார்வையிட்டால், தரவுகளை தந்து உதவினால், வேட்பாளர்கள் தேர்வு, தலைவர்களின் உரைகள்… இவை அனைத்தும் உதவாது. வெற்றி பெறுவதற்காக எங்களை நாடும் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய நாங்கள் அனைத்தும் செய்வோம். எங்களை போன்று தொழில்முறை வல்லுநர்களின் உதவியின்று பாஜக இங்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிறது என்று நினைக்கின்றீர்களா? பாஜகவின் மத்திய கமிட்டி தமிழ்நாடு அல்லது மேற்கு வங்கத்தில் அமர்ந்து தொகுதி மற்றும் தாலுக்கா ரீதியாக அரசியல் நுணுக்கங்களை அறிந்து பின்பு முடிவெடுக்க இயலும் என்று நினைக்கிறீர்களா?
திபங்கர் கோஷ் : ஆளும் கட்சிக்கு எதிரான மனப்பான்மை மற்றும் உள்ளூர் தலைவர்களுக்கு எதிரான மனநிலை திரிணாமுலின் வாய்ப்பில் மாற்றத்தை உண்டாக்குமா?
ஆமாம். இது ஒரு காரணி. அதனால் தான் நாங்கள் அதை முடிந்த வரை குறைக்க முற்படுகிறோம். கிட்டத்தட்ட 60% தொகுதிகளின் தலைவர்கள் புதிதானவர்கள். 80 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. உங்களின் அரசுக்கு அனைவரும் ரசிகர்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் இந்த முயற்சி நிச்சயமாக அந்த கோபத்தை குறைக்க முயற்சிக்கும்.
கடந்த ஆண்டு பாஜக இந்த தேர்தலில் இரட்டை இலக்கங்களை தாண்டி வெற்றி பெற முடியாது என்று கூறினீர்கள். அதாவது 294 தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் 99 இடங்களில் வெற்றி. இது எதன் அடிப்படையில் அமைந்தது?
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் காலங்களில், பாஜகவை சுற்றிலும் பல்வேறு கருத்துகள் எழுப்பப்பட்டன. பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெறும். 200 இடங்களை பெறும் என்றெல்லாம். ஆனால் வெளிப்படையாக இதெல்லாம் உண்மையில்லை என்று கூறுவது எங்களுக்கு முக்கியமானது. டிசம்பரில் பாஜக 200 இடங்களை வெற்றி கொள்ளும் இடத்தில் இல்லை. எங்களின் மதிப்பீட்டின் படி, பாஜக மூன்று இலக்கத்தை எட்டுவதற்கே திணறும். அதனால் தான் நான் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன். அவர்கள் அப்படி வெற்றியை பெற்றால் நான் எந்த கட்சிக்கும் இனி உதவ மாட்டேன். இந்த பணியில் இருந்து வெளியேறுகிறேன் என்று கூறினேன்.
இங்கு பாஜக ஐந்து உத்திகளை பயன்படுத்துகிறது. ஒன்று மக்கள் மனதை மாற்றுவது. இரண்டாவது மமதாவை இழிவுபடுத்துவது மற்றும் அவருக்கு எதிராக பரவலான கோபத்தை உருவாக்குவது. மூன்றாவது திரிணாமுல் வீழ்ச்சிக்காக அனைத்து வழிகளையும் பின்பற்றுவது. நான்காவது பட்டியல் இன மக்களிடம் இருந்து ஆதரவை பெறுவது.ஐந்தாவது மோடியின் பிரபலத்தை பயன்படுத்தி வாக்குகளை பெறுவது.
இவை அனைத்தும் மாறுபட்ட விகிதகங்களில் வெற்றியை கொண்டுள்ளது. ஆனால், அவர்களின் இந்த வெற்றியை பயன்படுத்தி 60% மக்களின் வாக்குகளை (பெரும்பான்மையினர் வாக்குகள்) பெறமுடியுமா என்பது தான் கேள்வி. வரலாற்றின் படி, இது போன்ற திசை திருப்பல் முயற்சியில் 50 முதல் 55% என்பது வெற்றிக்கான இலக்காக இருக்கும். இது போன்ற சூழல் பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு உ.பி.யிலும், 2002க்கு பிறகு குஜராத்திலும் இருந்தது. அங்கு நாம் 50க்கும் மேற்பட்ட பெரும்பான்மை சமூக மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தனர். மேற்கு வங்கத்தில் 60% இப்படியான வாக்குகளை பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால் மேற்கு வங்கத்தில் அப்படி பாஜக மக்களை மாற்றி இருக்கிறதா என்றால் இல்லை.
இரண்டாவது மமதாவை இழிவுப்படுத்துதல். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசின் மீது அதிருப்தியும், திரிணாமுல் மீது அதிருப்தியும் இருக்கும். சில இடங்களில் கோபமும் இருக்கும். ஆனால் மேற்கு வங்கம் முழுவதும் நீங்கள் பயணித்தால் அந்த கோபம் அனைத்தும் உள்ளூர் திரிணாமுல் பிரதிநிதிகள் மீது தான் இருக்கும். பலருக்கும் மமதா மீது நம்பிக்கை இருக்கிறது. இது அவரின் தேர்தல் என்பதால், திரிணாமுல் களத்தை கைப்பற்றும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.