puthiya thalaimurai Tamil nadu assembly election Latest survey : தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்து கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று புதிய தலைமுறை வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள் என்ன கூறுகின்றன என்பதை நாம் கீழே காண்போம்,
தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும்?
திமுக கூட்டணி : 151 – 158
அதிமுக கூட்டணி : 78 – 83
மக்களிடம் வருகின்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது?
அதிமுக கூட்டணிக்கு 28.48% பேர் வாக்களிக்க இருப்பதாகவும், திமுக கூட்டணிக்கு 38.20% வாக்களிக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
மக்கள் நீதி மய்யம் 6.30%, சசிகலா ஆதரவு கட்சி : 1.09%, நாம் தமிழர் கட்சி : 4.84%, மற்றவை : 9.83%, தெரியாது : 11.56%
(சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது)
தமிழக முதல்வராக யார் வரவேண்டும் என்று கேள்வி கேட்ட போது அதில் 37.51% பேர் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று 28.83%, கமல் ஹாசனுக்கு 6.45%, சீமானுக்கு – 4.93%, சசிகலாவுக்கு 1.33% மக்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் தலைமை
திமுக வெற்றி பெறுவதற்கு உதவும் காரணிகளாக நீங்கள் எதை பார்க்கின்றீர்கள் என்று மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு
ஸ்டாலின் தலைமை – 37.96%
மதச் சார்பின்மை – 8.35%
ஈ.பி.எஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலை – 6.72%
அதிமுக – பாஜக கூட்டணி – 9.16%
அதிமுக அரசின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு – 6.48%
வேறு கருத்து – 11.93%
தெரியாது / சொல்ல இயலாது – 19.41% என்ற கருத்துகளை மக்கள் கூறியுள்ளனர்.
சசிகலா குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள்
சசிகலா மீண்டும் அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும் என்பதை ஆதரிக்கின்றீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முழுமையான ஆதரிக்கின்றேன் என்று 2.25% மக்களும், ஆதரிக்கின்றேன் என்று 7.20% மக்களும், ஆதரிக்கவில்லை என்று 45.64% மக்களும், எதிர்க்கின்றேன் என்று 27.45% மக்களும், வேறு கருத்து என்று 4.32% நபர்களும், தெரியாது / சொல்ல இயலாது என்று 13.15% மக்களும் கூறியுள்ளனர்.
பாஜகவுடனான கூட்டணி மற்றும் அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் புதிய தலைமுறை கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது!
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண்கள் வழங்குவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது?
0 என்று 4.91% மக்களும், 1 மதிப்பெண் என்று 10.01% மக்களும், 2 மதிப்பெண் என்று 6.74% மக்களும், 3 என்று 7.06% மக்களும், 4 என்று 7.50% மக்களும், 5 என்று 13.06% மக்களும், 6 மதிப்பெண் என்று 6.13% மக்களும் அதிகப்படியாக 10க்கு பத்து மதிப்பெண்களை 7.39% மக்களும் அளித்துள்ளனர். சொல்ல முடியாது என்று 13.85% மக்களும் பதில் கூறியுள்ளனர்.
அதிமுகவும் – பாஜகவும் இடையிலான கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. அந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று 36.87% மக்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்திற்கு நல்லது என்று 16.66% மக்களும், அதிமுக ஆதாயமடையும் என்று 8.44% மக்களும் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று 7.02% மக்களும் பாஜக ஆதாயம் அடையும் என்று 5.91% மக்களும் கருத்து கூற முடியாது என்று 17.49% மக்களும் அறிவித்துள்ளனர்.
மத்தியில் ஆட்சியில் இருந்தபோது முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட தற்போதைய பாஜக அரசு தமிழகத்துக்கு கூடுதல் நன்மைகளை செய்திருப்பதாக நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு 22.87% பேர் ஆம் எனவும், 60.03% பேர் இல்லை எனவும், 7.09% பேர் வேறு கருத்துகளையும், 10.01% தெரியாது/ சொல்ல இயலாது எனவும் கூறியுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டத்தை 81.20% பேர் ஆதரிப்பதாகவும், 8.24% பேர் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதார ரீதியில் எந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர்?
41.39% மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், 30.35% மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், 8.85% மக்கள் மிதமாக பாதிக்கப்பட்டதாகவும் 8.46% குறைவாக பாதிக்கப்பட்டதாகவும், 9.75% மக்கள் பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போது உங்களது பொருளாதார நிலைமை சீராகிவிட்டதா?
ஆம் – 16.22 %
சீராகி வருகிறது – 45.53%
இல்லை – 34.41%
வேறு கருத்து – 1.50%
தெரியாது /சொல்ல இயலாது – 2.33% என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
புதிய தலைமுறையின் கருத்து கணிப்பு திமுக கூட்டணி வெற்றி பெரும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும் நடப்பது என்ன என்பதை நாம் பொறுத்திருந்து தான் காண வேண்டும். ஏப்ரல் 6ம் தேதி அன்று தேர்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் மே 2ம் தேதி அன்று அறிவிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil