Chowkidar chor hai நான் சொல்லவில்லை; மக்கள் தான் கூறினார்கள் : ராகுல் காந்தி

அலகாபாத்தில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு, ராகுல் காந்தி பேட்டியளித்தார்.. நமது நிருபரின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை காண்போம். Chowkidar chor hai வாசகத்தை நீங்கதானே உருவாக்குனீங்க? இல்லை. சட்டீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், Chowkidar (காவலாளி)யால் விவசாயிகளின் கடனை ரத்து பண்ணமுடியாது, வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. ரூ.15 லட்சத்தை தரமுடியாது என்ற அர்த்தத்திலேயே நான் பிரதமர் மோடியை chowkidar என்று கூறினேன். மக்கள் தான் Chor hai என்று […]

Chowkidar chor hai நான் சொல்லவில்லை; மக்கள் தான் கூறினார்கள் : ராகுல் காந்தி
Chowkidar chor hai நான் சொல்லவில்லை; மக்கள் தான் கூறினார்கள் : ராகுல் காந்தி

அலகாபாத்தில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு, ராகுல் காந்தி பேட்டியளித்தார்.. நமது நிருபரின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை காண்போம்.

Chowkidar chor hai வாசகத்தை நீங்கதானே உருவாக்குனீங்க?

இல்லை. சட்டீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், Chowkidar (காவலாளி)யால் விவசாயிகளின் கடனை ரத்து பண்ணமுடியாது, வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. ரூ.15 லட்சத்தை தரமுடியாது என்ற அர்த்தத்திலேயே நான் பிரதமர் மோடியை chowkidar என்று கூறினேன். மக்கள் தான் Chor hai என்று கூறினர். திரும்ப சொல்லுங்கள் என நான் கேட்டபோது மக்கள் தான் Chowkidar chor hai என்று கூறினர்.

நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஆனால், நீங்கள் தற்போதும் மோடி என்ற தனிமனிதனை மட்டுமே தொடர்ந்து தாக்கி பேசி வருகிறீர்களே….

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், தனது சகாக்களுடன் இணைந்து ஆலோசித்தே முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார். நல்லது, கெட்டது என எது நடந்தாலும், அதற்கு பிரதமர், அமைச்சர்கள் என எல்லோருக்கும் அதில் பங்கு இருந்தது. ஆனால் தற்போதைய பிரதமர் மோடி அப்படி நடந்து கொள்வதில்லை.
டீமானிடைசேஷன் சமயத்தில், அவர் அமைச்சரவையில் ஆலோசனை நிகழ்த்தினாரா?
கப்பார் சிங் டாக்ஸ் விவகாரத்தில், அவர் அமைச்சர்களை கலந்தாலோசித்தாரா?
எந்தவொரு விசயத்திலும், யாருடனும் கலந்தாலோசிக்காமல், தனக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ அதையே செய்து வருபவர் பிரதமர் மோடி. இதன் விளைவாகத்தான், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் சரிவு, விலைவாசி ஏற்றம் என அனைத்து பிரிவுகளிலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு ஒருவர் மட்டுமே காரணம். அதனால், அந்த தனிமனிதன் குறித்து பேசி வருகிறேன்.

ரபேல் விவகாரத்தில், அதன் மொத்த மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடி, ஆனால் நீங்கள் ரூ.30 ஆயிரம் கோடி என குறிப்பிட்டு வருகிறீர்களே. ஏன்?

ரபேல் போர் விமான வர்த்தக நடைமுறையில், offset contract மூலம் அனில் அம்பானி அடைந்த பயனின் மதிப்பு தான் ரூ.30 ஆயிரம் கோடி. அதைத்தான் தான் கூறிவருகிறேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

ஆப்செட் காண்ட்ராக்ட் மூலம் ரூ.30 ஆயிரம் கோடியா?

பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டேவே, அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தம் தர நிர்பந்திக்கப்பட்டதாக ஒத்துக்கொண்டுள்ளார். ரபேல் விவகாரம் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தலாமே. மோடி அரசு, ஏன் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு பயப்படுகிறது. அது விசாரணை நடத்தினால், உண்மை வெளியாகிவிடும் என்ற பயமோ?.

ரூ.45 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவிக்கும் அனில் அம்பானி நிறுவனத்திற்கு போர்விமானங்கள் செய்யும் அளவிற்கு திறன் இல்லை. போர் விமானங்கள் தயாரிப்பில் 70 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தை வழங்காமல், இந்த துறையில் கத்துக்குட்டி கூட அல்லாத அனில் அம்பானி நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கான காரணம் என்ன. இதன்மூலம் ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு அனில் அம்பானி பயன் அடைந்துள்ளார்.

இந்த ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பை எப்படி பெற்றீர்கள்?

இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு ரந்தீப் சுர்ஜ்வாலா, ப. சிதம்பரம் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.இந்த ரபேல் ஓப்பந்தம் கையெழுத்தானவுடனே, பிரான்சில் அனில் அம்பானிக்கு 100 மில்லியன் யூரோஸ் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதன் மர்மம் என்ன. ரபேல் விவகாரம் குறித்து நான் 15 நிமிடம் பேச தயார். பிரதமர் இதுகுறித்து விவாதிக்க தயாரா?

பயங்கரவாத பின்னணி கொண்ட பிரக்யா தாகூர் போபாலில் பா.ஜ. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மவுனம் கடைபிடிக்கிறதே?

நாங்கள் மவுனமாக இல்லை. எங்கள் கட்சி வேட்பாளர் அவரை தோற்கடிப்பார்.

பிரக்யா தாகூரை எதிர்த்து பிரசாரம் செய்வீர்களா?

போபாலில் பிரசாரம் செய்ய எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அவர் பலத்த தோல்வி அடைவது உறுதி.

சோனியா காந்திக்கு பிறகு கட்சியின் அடுத்த தலைவர் நீங்கள் தான் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பா.ஜ.,வில் அப்படி சொல்ல முடிவதில்லையே?

பிரதமர் மோடி சொல்படி கேட்கும் ஒருவர் தான் பாரதிய ஜனதா கட்சியில் தலைவராக வரமுடியும் என்பதை தாங்கள் அறியவில்லையா. அக்கட்சியில் தலைவருக்கு என்று எவ்வித அதிகாரமும் இல்லை. மோடி சொல்வேத அங்கே வேதவாக்கு. அவர் சொல்படி நடப்பவரே, கட்சியின் தலைவர் என்று ராகுல் காந்தி கூறினார்.

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rahul gandhi about chowkidar cho hai narendra modi lok sabha election

Next Story
Cyclone Fani: ஒடிசாவில் ஃபனி புயலால் மக்கள் சந்தித்த பாதிப்புகள் – உதவிக்கரம் நீட்டிய அமைப்புகள்cyclone fani in odisha
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com