congress election manifesto 2019 : லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு.
அக்பர் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்
ராகுல் காந்தி உரை:
தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் " தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதி கூட பொய்யாக இருக்க கூடாது என்பதே எங்களின் நோக்கம். தேர்தல் அறிக்கையானது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருப்பது மிக மிக அவசியம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நாட்டு மக்களுக்காக பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதே போல் ஏழைக்களுக்கான குறைந்த பட்ச வருவாய் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை கேலி செய்து விமர்சித்துள்ளார். அது வீண் திட்டம் என்றும் தேவையில்லாத செலவு என்றும் விமர்சித்தார். ஆனால், இன்று அந்தத் திட்டம் நாட்டுக்கு எவ்வளவு நலன் செய்துள்ளது என அனைவருக்குமே தெரியும்.
முதலாவதாக இந்தத் தேர்தல் அறிக்கை வெறும் நான்கு சுவருக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்கவே கூடாது என்றேன். காரணம், தேர்தல் அறிக்கை என்பது இந்திய மக்களின் தேவைகளை, விருப்பங்களை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.
தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியை நாங்கள் ஓராண்டுக்கு முன்னரே தொடங்கிவிட்டோம்” என்று கூறினார்.
இதனிடையில் செய்தியாளர் ஒருவர், ராகுலிடன் “நீங்கள் தென்னிந்தியாவில் போட்டியிட என்ன காரணம்? அதே போல் காங்கிரஸ் அறிக்கையில் தென்னிந்தியாவிற்கும் அதிகளவும் முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது ஏன்? “என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ”தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடுகிறேன். மேலும் மத்திய அரசு தென்னிந்தியாவை அதிகளவில் புறகணிக்கிறது. அவர்களுடன் நாண் நிற்க போகிறேன்” என்று கூறினார்.
அதன் பிறகு ராகுல் காந்தி வெளியிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இதோ.. congress election manifesto 2019
1. நியாய் (NYAY திட்டத்தின் கீழ் ஏழைக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000. இந்த தொகையானது குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
2. விவசாயத்திற்கு தனி பட்ஜெட் நிச்சயம்.
3. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வறுமை நிச்சயம் ஒழிப்பு.
4. விவசாயிகள் அவர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது. சிவில் வழக்கின் கீழே நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயக் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.
5. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து. தமிழகத்தில் மட்டுமில்லை எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்க்கப்படுகிறதோ அந்த மாநிலங்களில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்தல் நடத்தப்படும்.
6.இலங்கையுடான மீனவர் பிரச்சனை தீர்க்கப்படும்.
7. ரஃபேல் ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.
8. அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை.
9. தற்போது நடைமுறையில் இருக்கும் ஜிஎஸ்டி திட்டம் ரத்து செய்யப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.
10. ஜிஎஸ்டி முறைக்குள் பெட்ரோல், டீசல், மதுபானம் விலை கொண்டு வரப்படும். ஆதார் சட்டம் மாற்றியமைக்கப்படும்.
11. 100 நாட்கள் வேலைவாய்ப்பு 150 நாட்களாக மாற்றியமைக்கப்படும்.
12. அரசு துறையில் காலியாக உள்ள 22 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். குறிப்பாக இளைஞர்களுக்கு அதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
13. புதுச்சேரி மாநிலத்திற்கு தனிமாநில அந்தஸ்து அளிக்கப்படும்.
14. பயங்கரவாதத்தை தடுக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும்.
15. ஜிஎஸ்டி கவுன்சில் குழு போன்று விவசாயம், கல்வி, சுகாதார மேம்பாட்டிற்கு மாநில அமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
16. புதிதாக தொழில் தொடங்குபவா்கள் 3 ஆண்டுகள் உரிமம் பெறத் தேவையில்லை.
17. பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.
18. அரசுத் தோ்வுக்கான கட்டணம், விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
ப. சிதம்பரம் உரை:
நிகழ்ச்சியில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியதாவது" காங்கிரசின் தேர்தல் அறிக்கையானது முழக்க முழுக்க மக்களிடம் கேட்கப்பட்ட அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு நன்மை, பெண்களுக்கு பாதுகாப்பு இன்றியாமையாதாக இருக்கும். 19 பேர்க் கொண்ட குழு இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. பல லட்சம் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களிடம் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம்” என்று பேசினார்.
LIVE: Congress President @RahulGandhi launches 2019 Manifesto. #CongressManifesto2019 https://t.co/th35WGsl63
— Congress (@INCIndia) 2 April 2019
தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10ம் தேதி, மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தது. இதையடுத்து பல கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அக்பர் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் தேர்தல் அறிக்கை முன்வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
அதை தொடர்ந்து இன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விவசாயிகளின் பிரச்சினைகள், கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன.
கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தின்போது ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஆண்டுக்கு ₹72,000 அளிக்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார்.இந்தத் திட்டம் குறித்து விரிவான விளக்கம், இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச வருமான உத்தரவாதம், இட ஒதுக்கீட்டை அதிகரித்தல், இளைஞர்கள் தொழில் தொடங்க நிதியுதவி, ஒரே மாதிரியான ஜிஎஸ்டி நடைமுறை, ஏஞ்சல் வரி ரத்து, இளம் தொழில்முனைவோர் தொழில் தொடங்க அரசு அனுமதி பெறுவதை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெறும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.