Rajasthan CM Ashok Gehlot : காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாத் “மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியர்கள் மீண்டும் தேர்தலையே பார்க்கமாட்டார்கள். இந்தியாவும் சீனா போன்றும், ரஷ்யா போன்றும் மாறும் சூழல் நிச்சயம் உருவாகிவிடும்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
Rajasthan CM Ashok Gehlot on Modi
மோடியின் ஆட்சியில் நாடும் நாட்டின் ஜனநாயகமும் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற மோடி எதையும் செய்வார். பாகிஸ்தானுடன் போருக்குச் சென்றாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் அது நாட்டுக்கு நல்லதல்ல. மோடியின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் அறியமாட்டார்கள். ஏன் அது அமித்ஷாவுக்கும் கூடத் தெரியாது என்று மிகக்கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
மேலும் பாஜக தலைவர்களில் ஒருவருக்கும் சகிப்புத் தன்மை என்பது கிடையாது. இது அவர்களின் டி.என்.ஏவிலும் கூட இல்லை என்று கூறிய அசோக் கெலாத், மோடி பொய்யான வாக்குறுதிகளை பரப்புவதில் மாஸ்டர் பட்டம் பெற்றவர் என்றும் கூறியுள்ளார். மோடி மட்டும் பாலிவுட் சென்றிருந்தால் அவரின் நடிப்புத் திறமைக்கும், பேச்சாற்றலுக்கும் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்திருப்பார்.
மோடி வெளிநாடுகளுக்கு செல்லும் போது, என்.ஆர்.ஐகளை சந்திக்க, இந்திய தூதரங்களை பயன்படுத்தியதாதகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் படிக்க : இவ்வளவு எளிமையானவரா மனோகர் பாரிக்கர் ? முதலமைச்சர்களுக்கெல்லாம் இவர் தான் ரோல் மாடல் !