Advertisment

திமுக.வின் அதிகார முகம்: யார் இந்த சபரீசன்?

திமுக ஆட்சிக்கு வந்தால், சபரீசன் மு.க.ஸ்டாலினுக்கு யுக்திகளை வகுத்து அளிப்பவராகவும் ஆலோசனை வழங்குபவராகவும் மாநிலத்தின் மிக அதிகாரமிக்க முகங்களில் ஒருவராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sabareesan, dmk chief MK Stalins son in law sabareesan, சபரீசன், திமுக, முக ஸ்டாலின் மருமகன் சபரீசன், செந்தாமரை சபரீசன், வி சபரீசன், v sabareesan, senthamarai husband sabareesan, dmk, tamil nadu assembly elections 2021

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, வருமான வரித்துறை திமுக தலைவர்கள் தொடர்புடைய 28 இடங்களில் சோதனை நடத்தியது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது அதிகாரமிக்க கணவர் வி.சபரீசன், சபரீசனுக்கு நெருக்கமான உதவியாளர்களின் இடங்கள் என 4 பேர் இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

Advertisment

திமுக ஆட்சிக்கு வந்தால், சபரீசன் மு.க.ஸ்டாலினுக்கு யுக்திகளை வகுத்து அளிப்பவராகவும் ஆலோசனை வழங்குபவராகவும் மாநிலத்தின் மிக அதிகாரமிக்க முகங்களில் ஒருவராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது 40களில் இருக்கும் சபரீசன், திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு அரசியல் சாராத குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் செந்தாமரைக்கும் காதல் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

செந்தாமரை அரசியலில் எந்த ஆர்வமும் காட்டாமல் சென்னையில் அவர் நடத்தும் பள்ளியில் பிஸியாக இருக்கிறார்.முந்தைய திமுக ஆட்சி காலத்தின்போது சபரீசன் இல்லை. திமுக 10 ஆண்டு காலங்களாக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கருணாநிதி தனது உடல்நிலை காரணமாக படிப்படியாக கட்சி விவகாரங்களில் பின்னுக்கு சென்றார். மு.க.ஸ்டாலின் முன்னாள் வந்தார். சபரீசன் கட்சி விஷயங்களில் பேசத் தொடங்கினார்.

சபரீசன் குறித்து ஸ்டாலினுடைய உள் வட்டத்தில் உள்ளவர்கள் கூறுகையில், சபரீசனின் பலம் அவரது தகவல் தொடர்பு திறன்தான். கட்சியில் கிட்டத்தட்ட அனைவருடனும் நல்லுறவு, கூட்டணி கட்சியினர் மற்றும் போட்டி கட்சியினருடன் நல்லுறவு என அனைத்திலும் அவர் பின்னணியில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. “அவர் விஷயங்களை நன்றாக காது கொடுத்து கேட்பவர்” என்று ஒரு வட்டாரம் கூறுகிறது.

ஸ்டாலினின் சகோதரி கனிமொழி அல்லது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அல்லது டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் என அனைவருடனும் சபரீசன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஷ்வி யாதவ் ஆகியோருடன் நட்புறவு கொண்டிருக்கிறார். “அதிகாரத்தில் இருந்த பலரைப் போலல்லாமல் அவர் ஒருபோதும் பகைமையைப் பின்தொடர்வதில்லை. அல்லது போட்டியாளர்களை குறிவைக்க மாட்டார்” என்று ஸ்டாலின் முகாமில் முன்பு இருந்த ஒரு வட்டாரம் கூறுகிறது.

68 வயதில் தனது முதல் தேர்தலை வழிநடத்தும் ஸ்டாலினை ஒரு புதிய தலைமுறை தலைவராக மறுசீரமைப்பதில் சபரீசன் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஸ்டாலின் படிப்படியாக திமுகவில் உள்ள பல அதிகார மையங்களை ஒன்றிணைத்தாலும்கூட கடந்த 6-7 ஆண்டுகளாக இந்த செயல்முறை நடந்து வருகிறது. மு.க.அழகிரி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட இந்த அதிகார மையங்களின் போட்டி திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளால் வேகமெடுத்தது. இதில் அழகிரியின் வலிமையான நிலை, உத்திகள் மற்றும் மாறன்களால் பெயரிடப்பட்ட 2ஜி மோசடி ஆகியவை 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு முக்கியப் பங்களித்ததாக நம்பப்படுகிறது.

மற்றவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டதால், ஸ்டாலினுக்கு ஒரு நம்பகமான ஆலோசகர் தேவைப்பட்டது. அவர் அந்த ஆலோசனை வழங்கும் நபராக சபரீசனைக் கண்டார். செந்தில் பாலாஜி போன்ற சக்திவாய்ந்த தலைவர்களை அதிமுகவில் இருந்து திமுகவுக்கு அழைத்து வந்ததில் மருமகன் சபரீசன் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது. அவர் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் சுனிலை தேர்தல் பிரசார உத்தி நிபுணராகக் கொண்டுவந்தார். அந்தத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த பின்னர், பிரசாந்த் கிஷோரைக் கொண்டுவந்தார். இருவருக்கும், இடையிலான மோதலில், சுனில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் பிரசார உத்தி வகுக்கும் நிபுணராக மாறினார்.

“ஸ்டாலினுடைய புதிய யோசனைகள் மற்றும் சினிமாத் தனமான வீடியோக்களுடன் சபரீசன் முன்வந்தபோது, அவர் சினிமா தயாரிக்கிறாரா என்று பலரும் அவரிடம் கேட்டார்கள். ஆனால், அவரது முயற்சிகள் பலன் அளித்தது” என்று ஒரு திமுக தலைவர் கூறினார். திமுகவின் ‘ஸ்டாலின் தான் வராரு’ இந்தத் தேர்தலின் மிகவும் பிரபலமான பாடலாக மாறியுள்ளது.

“கே.என்.நேரு அல்லது ஏ.வ.வேலு போன்ற மூத்த தலைவர்கள் சமூக ஊடகங்களையும் ட்விட்டரையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து ஸ்டாலினுக்கு ஆலோசனை அளிக்க முடியாது. இந்த விஷயங்களைப் பற்றி சபரீசன் உட்கார்ந்து பேசி அவரை நம்ப வைப்பதற்கான இடம் இருந்தது” என்று ஒரு வட்டாரம் கூறியது.

சபரீசனின் அரசியல் சார்பற்ற நோக்கங்கள் உதயநிதிக்கு எந்த சவாலையும் முன்வைக்காததால், வரும் ஆண்டுகளில் திமுகவில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் உதயநிதிக்கும் கனிமொழிக்கும் இடையில் இருக்கலாம். அப்போது, சிறப்பாகச் செயல்பட சபரீசன் மீண்டும் அழைக்கப்படலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Tamilnadu Assembly Election Sabareesan M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment