அதிமுகவுக்கு சசிகலா ‘அழுத்தம்’… திமுகவுக்கு காங்கிரஸ் தலைவலி!

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் நுழைவதற்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் விரும்புவதால் இக்கட்டான நிலையில் உள்ளது. மற்றொருபுறம் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு அதிக இடங்களை வழங்க மறுத்து வருகிறது.

EPS , Stalin

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான கவுண்டன் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக கூட்டணிகள் இரண்டுமே சிக்கல்களை சந்தித்துள்ளன.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் அதிமுகவில் நுழைவதற்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் விரும்புவதால் இக்கட்டான நிலையில் உள்ளது. மற்றொருபுறம் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு அதிக இடங்களை வழங்க மறுத்து வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நள்ளிரவுக்குப் பின் சந்திப்பு நடந்ததாக நடந்ததாக அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், பாஜக சசிகலா பிரச்சினையை வரும் நாட்களில் பல வழிகளிலும் பல தூதுகளின் மூலம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இப்போது கூட்டணியில் முக்கிய தடுமாற்றமாக உள்ளது என்று அதிமுக தலைவர் ஒருவர் கூறினார். “தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. முக்கிய கூட்டணி கட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகளும் பாஜகவுக்கு 21 தொகுதிகளும் கிடைக்கும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் கிடைக்கும் (காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கடந்த ஆண்டு கோவிட் -19 பாதிப்பால் இறந்தார்).” அதிமுக 170 இடங்களில் போட்டியிடும்.” என்று கூறினார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிட்டு 136 தொகுதிகளில் வெறி பெற்றது. பாமகவும் பாஜகவும் தனித்து போட்டியிட்டன. ஆனால், அக்கட்சிகள் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. திமுக 178 தொகுதிகளில் போட்டியிட்டு 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதிமுக அமைச்சர் ஒருவர் கூறுகையில், “சசிகலா மீண்டும் வந்தால் அதிமுக-தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உதவியாக இருக்கும் என்று பாஜக நம்புகிறது. இதற்கு பன்னீர்செல்வம் சரி என்றாலும் பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. அவருடைய முகாம் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் அனுமதித்தால் அவர் கட்சியை கைப்பற்றிவிடுவார் என்று அச்சப்படுகிறது. தலைவர்கள் அவர்களுடைய ஆதரவாளர்களாக மாறுவார்கள் என்று அவர் அச்சப்படுகிறார்.” என்று கூறினார்.

சசிகலா இன்னும் கட்சியில் செல்வாக்கு செலுத்துகிறார் என்பது தெளிவாகிறது. சசிகலா திரும்பி வர வேண்டும் என்று கிட்டத்தட்ட பாதி கட்சி விரும்புகிறது என்று அந்த அதிமுக தலைவர் கூறினார். “அவர் திரும்ப வந்தால் கட்சியை பலப்படுத்தும் என்று குறைந்தது 50% தலைவர்கள் நினைக்கிறார்கள். டெல்டா மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் சசிகலா விசுவாசிகள். பன்னீர்செல்வமும் பாஜக திட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்.” என்று அதிமுக மூத்த தலைவர் கூறினார்.

பாஜக மூத்த தலைவர் ஒருவர் தாங்கள் போட்டியிட விரும்பும் 60 இடங்களின் பட்டியலைத் தயாரித்துள்ளதாகவும், அதில் அதிமுகவிடம் 33 இடங்களைக் கேட்டதாகவும் கூறினார். பாஜகவுக்கு 21 இடங்களை தருவதாகக் கூறும் அதிமுக கருத்தைப் புறக்கணிக்கும் அதே வேளையில், சசிகலா பிரிவு கூட்டணியில் இடம் பெற்றால் அவர்கள் இந்த எண்ணிக்கைக்கு சரி என்பதாக அந்த தலைவர் சுட்டிக்காட்டினார்.

திமுகவின் சிக்கல்கள் கடுமையானவை. அது தன்னை ஒரு வெற்றிகரமான கட்சி என்று கருதுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட பிற சிறிய கட்சிகளுடன் மிகப் பெரிய கூட்டணியை வழிநடத்துகிறார். திமுக குறைந்தபட்சம் 170 முதல் 180 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

இருப்பினும், திமுக காங்கிரசுடனான பேச்சுவார்த்தையில் சிக்கியுள்ளது. “காங்கிரஸ் குறைந்தபட்சம் 34 இடங்களைக் கேட்டுள்ளது. அதே நேரத்தில் 18 இடங்களுக்கு மேல் கொடுக்க முடியாது என்று திமுகவின் கருத்தாக உள்ளது” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார். 2016 ல் காங்கிரஸ் போட்டியிட்ட 41 இடங்களில் 8 இடங்களை மட்டுமே வென்றது. அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸைத் தவிர 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணியில் தனது கணக்கைத் தொடங்கிய ஒரே ஒரு கட்சி ஐ.யூ.எம்.எல்.தான். அக்கட்சி 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

காங்கிரசுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஸ்டாலின் கடுமையான நிலைப்பாட்டில் இருக்கிறாஅர். இந்தத் தேர்தலில் மாநிலத்தின் முக்கிய தலைவர்கலான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாததால் முடிவெடுப்பது அவருடைய கையில்தான் உள்ளது. இறுதியாக ஸ்டாலின் தன்னை அவருடைய தந்தையின் சரியான வாரிசாக நிலைநிறுத்துகிறார்.

“ஸ்டாலினின் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அவர் முகங்களையும் தரவுகளையும் பார்க்கவில்லை. அவர் மட்டுமல்ல, கட்சியிலும் குடும்பத்திலும் ஸ்டாலினின் நெருங்கிய வட்டமும்கூட திமுக தானாகவே வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை அவருக்கு அளித்துள்ளது” என்று திமுக தலைவர் ஒருவர் கூறினார்.

இந்த அதீத நம்பிக்கைக்கு எதிராக எச்சரிக்கை தெரிவித்த அந்த தலைவர், “ஸ்டாலின் இதே அணுகுமுறையை 2016 இல் பின்பற்றினார். அது திமுகவின் தோல்விக்கு வழிவகுத்தது. அவர் அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.

அதே நேரத்தில், கடந்த சில நாட்களில் ராகுல் காந்தியின் பிரம்மாண்ட பிரச்சாரங்கள் திமுகவுடன் சரியாக ஒத்துப்போகவில்லை. “அவை காங்கிரசின் பிரத்யேக திட்டங்களாக மாறிவிட்டன. இது துரதிர்ஷ்டவசமானது” என்று அந்த திமுக தலைவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு முகாம்களில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அது அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளையுமே பாதிக்கும். அவர்களை விட்டுவிட்டால், காங்கிரஸ் மற்றும் சசிகலா மற்றும் சிறிய கட்சிகளான கமல்ஹாசனின் மக்கல் நீதி மய்யம் போன்ற சிறிய கட்சிகளின் எதிர்ப்பையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sasikala pressure for admk congress trouble for dmk in seats sharing talks in tamil nadu assembly elections 2021

Next Story
காங்கிரஸ் மதச்சார்பின்மையை கேள்வி கேட்பதா? ஆனந்த் சர்மாவுக்கு ரஞ்சன் சவுத்ரி பதிலடி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express