Abantika Ghosh
Sixty-six former civil servants question Civil Service Functioning : முன்பு மிகவும் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கைகள் மிகவும் காம்ப்ரமைஸ்ட் செய்யப்பட்டதாக இருப்பதாக கூறி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு 66 பொதுப்பணியாளர்கள் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.
முன்னாள் சிவில் அதிகாரிகள் 66 பேர் கடிதம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆளும் கட்சியினரால் மீறப்படுவதை எதிர்த்து இந்த கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளனர். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜிலியோ ரிபெய்ரோ, முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர மேனன், டெல்லியின் முன்னாள் லெஃப்டினண்ட் கவர்னர் நஜீப் ஜுங், ட்ராய் அமைப்பின் முன்னாள் சேர்மென் ராகுல் குல்லார், முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் கேசவ் தேசிராஜூ, முன்னாள் பிரசார் பாரதியின் தாலிவர் ஜவஹர் சிர்கார், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மீரன் போர்வன்கர் உள்ளிட்டோர் அடங்கிய 66 பேர் கொண்ட குழு இந்த கடிதத்தை எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் “தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மை, மரியாதை, திறமை, மற்றும் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ளும் தன்மை என அனைத்தும் இன்றைய சூழலில் சமரசம் செய்து கொள்ளப்பட்டுவிட்டது.
இந்திய ஜனநாயத்தின் அடித்தளம் இருக்கும் வாக்களிக்கும் மையம் தன்னுடைய தனித்தன்மையை இழக்கும் அபாயத்தில் உள்ளது. ஆளும் கட்சியினரால் தேர்தல் ஆணையம் தவறாக பயன்படுத்துப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் எந்தெந்த நிகழ்வுகளில் தேர்தல் நடத்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்பதையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். ஆண்டி-சேட்டிலைட் வெப்பன் மிஷன் சக்தி குறித்த மோடியின் உரை, மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தகரிக்கும் பி.எம்.நரேந்திர மோடி, வெப் சீரியஸ், நமோ டிவி, பாஜகவினர் மற்றும் மோடி தரும் நேர்காணல்கள் என அனைத்தையும் பட்டியலிட்டுள்ளனர்.
மேலும் படிக்க : தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையால் கைப்பற்ற பணத்தின் மதிப்பு என்ன தெரியுமா ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.