இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து பணி செய்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், கொரோனா 2-வது அலை பல மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு கட்டமாக கடந்த ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தொடர்ந்து அசாமில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் வரும் மே 2-ந் தேதி அனைத்து மாநிங்களிலும் ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றவுள்ளது. தற்போது வாக்கு எண்ணும் பணி மற்றும் மேற்குவங்கத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு என் தேர்தல் ஆணையம் தொடர்ந்து விறுவிறுப்பாக பணி செய்து வருகிறது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.சி) சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர் (இ.சி) ராஜீவ் குமார் ஆகியோர் கோவிட் -19 க்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலிருந்து பணிபுரிந்து வருவதாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 13 ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவிடம் இருந்து சி.இ.சி.யாக பொறுப்பேற்ற சுஷில் சந்திரா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால், வீட்டிலிருந்தே பதவியேற்றுக்கொண்டாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் சுஷில் சந்திரா மற்றும் குமார் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டிலிருந்து பணி செய்கிறார்கள் என்று இ.சி.ஐ செய்தித் தொடர்பாளர் இன்று உறுதிபடுத்தியுள்ளார். சுஷில்சந்திரா தேர்தல் ஆணையத்திலிருந்து சி.இ.சிக்கு உயர்த்தப்பட்டதும், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கும்போதும், ஆணைக்குழு ஒரு தேர்தல் ஆணையத்திற்கு குறைவாக இருக்கும் நேரத்தில் இந்த பாதிப்பு தேர்தல் பணிகளில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil