Tamil Nadu assembly election 2021 : திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் இழுபறியாக இருந்த தொகுதி பங்கீட்டினை முடிவுக்கு கொண்டு வந்தது சோனியா காந்தியிடம் இருந்து வந்த அழைப்பு. சனிக்கிழமை இரவு அழைப்பு வந்ததை தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை திமுக, காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடவும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவும் தொகுதிகளை பங்கிட்டு உள்ளது. சோனியா காந்தி ஸ்டாலினிடம், அடுத்து மதச்சார்பற்ற கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சட்டமன்ற தொகுதிகள் மட்டும் இன்றி இரண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை தொகுதிகளுக்கான வாய்ப்பினையும் காங்கிரஸ் எதிர்பார்த்துள்ளது. ஒன்று திமுகவின் தேர்வு மற்றொன்று காங்கிரஸ் கட்சியினரின் தேர்வாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
"கோரிக்கையை சரியான நேரத்தில் பரிசீலிப்பதாக திமுக உறுதியளித்தது. பரஸ்பர நம்பிக்கையில் மட்டுமே செயல்படுகிறோமே தவிர, குழப்பத்துடன் நாங்கள் இதனை வழிநடத்தவில்லை என்று காங்கிரச் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
தொகுதியைக் காட்டிலும் மதசார்பற்ற தன்மையே மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து கூட்டணிக்கட்சிகள் செயல்படுகின்றன. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஸ்டாலின் தன்னுடைய இல்லத்திற்கு கே.எஸ். அழகிரி, தினேஷ் குண்டு ராவ் ஆகியோரை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். திமுக மகளிர் அணி தலைவி கனிமொழியும் அங்கே இடம் பெற்றிருந்தார். ஸ்டாலினின் வீட்டில் பேச்சுவார்த்தை நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். ஞாயிற்றுக் கிழமை காலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் மற்றும் கே.எஸ். அழகிரி தொகுதி பங்கீட்டிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தினேஷ் குண்டு ராவ், கனிமொழி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக நடைபெற்று வந்த நீடித்த பேச்சுவார்த்தைக்கு ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பிப்ரவரி 25ம் தேதி அன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தபப்ட்டது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை செவ்வாய் கிழமை சில உணர்வுப்பூர்வமான சம்பவங்களை அரங்கேற்றியது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கட்சி கூட்டத்தின் போது, காங்கிரஸ் தலைவர்கள் எவ்வாறு திமுகவினரால் கையாளப்பட்டனர் என்று கவலை தெரிவித்தார்.
"இந்த தேர்வு என்பது இடங்களின் எண்ணிக்கையை விட மதச்சார்பற்ற பலகையை நீட்டிப்பதைப் பற்றியது. கொரோனா வைரஸை விட மிகவும் ஆபத்தான பாஜக பரவுவதைத் தடுக்க, அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிக்கும் ஒரே நோக்கத்துடன் கைகோர்க்க வேண்டியிருந்தது ”என்று கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அழகிரி கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சட்டமன்றத் தேர்தலை ஒரு கருத்தியல் யுத்தம் என்றும், இது ஆட்சியில் ஏற்பட்ட மாற்றத்தை விட மிக முக்கியமானது என்றும் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil