தமிழக சட்டசபை தேர்தலில் வேப்பனஹள்ளி மற்றும் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக எம்பிக்கள், எந்த பதவியை ராஜினாமா செய்வார்கள் என்பது குறித்து அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2) நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு முன்பாக வெளியான கருத்துக்கணிப்பு நிலவரங்கள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாக இருந்த்து. அதனை உறுதி செய்யும் வகையில், நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பெரும்பான்மை தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று வெற்றியும் பெற்றது. இதில் ஒரு சில தொகுதிகளில் திமுக பின்தங்கியிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையாக 118 இடங்களை விட அதிக பெரும்பான்மை பெற்றுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக பல இடங்களில் தோல்வி முகத்தை சந்தித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களானா, ஜெயக்குமார்,
கே.பி முனுசாமி :
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பென்னகரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, தற்போது கிருஷ்ணகிரி
வைத்தியலிங்கம் :
அதிமுகவின் மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரான வைத்தியலிங்கம் தஞ்சாவூர்
கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு என தொடர்ச்சியாக இரு முறை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய அதிமுக 3-வது முறையாக இந்த தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்த அதிமுகவினருக்கு இந்த தேர்தல் முடிவு பெரும் அதிர்ச்சை கொடுத்துள்ளது என்றே கூறலாம். இதிலும் கடந்த 5 வருடங்களாக அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில், அமைச்சர்களாக இருந்த சிலரும் தோல்வியை தழுவியுள்ள நிலையில், முனுசாமி வைத்தியலிங்ம் இருவரும் வெற்றி வாகை சூடியிருப்பது சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அதிமுக வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த இவர்கள் இருவருக்கும் தற்போது ஏமாற்றமே மிஞ்சியள்ளது. அதிலும் குறிப்பாக இவர்கள் இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால் அவர்கள் எந்த பதவியை ராஜினாமா செய்வார்கள் என்பது குறித்து பொதுவாக கேள்வி எழுந்துள்ளது.
மாநிலங்களை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால், அங்கு பலம் குறைந்துவிடும். எம்எல்ஏ பதவியை ராஜீனாமா செய்தால் இடைத்தேர்தல் வரும். அப்படியே அதிமுக இடைத்தேர்தலை சந்தித்தாலும் அதன் முடிவு ஆளும்கட்சிக்கு (திமுக) சாதகமாகத்தான் அமையும் என்பது எழுதப்பாடத விதியாக உள்ளது. அவர்கள் இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் சட்டசபையில் அதிமுகவின் பலம் குறைந்துவிடும் என்பதால், மாநிலங்களாவை பதவியை ராஜினாமா செய்யவே அதிகம் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil