Tamilnadu Assembly Election IT Raid In ADMK Celebrity : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஒரு புறம் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஊடகங்கள் தங்களது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகத்தின் பல பகுதகளில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறனர். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இயங்கி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்தே வருமானவரித்துறையினர் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நேற்றில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் மகள் மற்றும் அவரின் நண்பர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை குறித்து திமுக தரப்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், திமுகவை சேர்ந்த பல முன்னணி தலைவர்கள் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க மத்திய அரசு செய்யும் சதிதான் இந்த வருமான வரி சோதனை. இதற்கொல்லம் நாங்கள் அஞ்சமாட்டோம். இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் சோதனை நடத்துங்கள் அப்போதுதான் திமுகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இன்று கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரார்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
தேர்தல் தேதி அறிவித்தலில் இருந்து திமுக வேட்பாளர்கள் வீடுகளில் மட்டுமே வருமானவரி சோதனை நடத்தி வரும் மத்திய அரசு அதிமுகவிடம் எவ்வித சோதனையும் நடத்தவில்லை. மத்திய அரசின் நம்பிக்கை பாத்திரமான வருமானவரித்துறை செயல்படுகிறது என்று திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் தற்போது வருமானவரித்துறையினர் அதிமுக பிரமுகர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி தொகுதியில் அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
போடி தொகுதியில் உள்ள அம்மா பேரவை பொருளார் குறிஞ்சி மணி என்பவரின் வீட்டில், தேனி மாவட்ட வருமான வரித்துறை அதிகரிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டு வருவதா தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் குறிஞ்சி மணி. ஏற்கனவே தேமுதிகவில் ஒன்றிய செயலாளராக இருந்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகிய அவர், தற்போது அதிமுகவில் இருந்து வருகிறார்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருவது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.