Advertisment

News Highlights: ஜெ. மரணத்திற்கு திமுக காரணம் இல்லை- ஆர்.எஸ்.பாரதி

Tamil Nadu Assembly Election Live Updates புதுச்சேரியில் பாஜக - அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது

author-image
WebDesk
New Update
News Highlights: ஜெ. மரணத்திற்கு திமுக காரணம் இல்லை- ஆர்.எஸ்.பாரதி

Tamil Nadu Assembly Election Live Updates : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார் என்றும் இந்த தேர்தலோடு திமுக குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார்.

Advertisment

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று குறிப்பிட வலியுறுத்திக் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் தங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வருவதாகத் தகவல் வெளியானதை அடுத்து கோட்டைப்பட்டி ஊர் மக்கள் தங்களது கிராமத்தின் எல்லையில் ஒன்று கூடி அவரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுக்க குவிந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அதிமுக வேட்பாளர் கோட்டைபட்டி பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலைத் தடுப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"


  • 19:42 (IST) 17 Mar 2021
    திமுக, மதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை

    தமிழகத்தில் தேர்தல் பணிகள் கலைகட்ட தொடங்கியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், திமுக நகர செயலாளர் தனசேகர், மதிமுக மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜ், ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமாவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு்ள்ளனர்.


  • 19:31 (IST) 17 Mar 2021
    தமிழகத்தில் இன்று 945 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில், 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 19:05 (IST) 17 Mar 2021
    முதல்வர் பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்

    தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிச்சாமி, நாங்கள் செய்த திட்டங்களை ஊடகத்திலும், பத்திரிகையிலும் விளம்பரம் செய்வதில் என்ன தவறு? அதிமுக தள்ளுபடி செய்த கூட்டுறவு சங்க கடனை, மீண்டும் திமுக தள்ளுபடி செய்வதாக அறிவிக்கிறது -என தெரிவித்துள்ளார்.


  • 19:04 (IST) 17 Mar 2021
    நல்ல திட்டங்களை நாங்கள் வகுத்து வைத்துள்ளோம் - கமல்ஹாசன்

    தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மக்கள் சேவை செய்ய விரும்புவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சந்தர்ப்பம் இது" மாற்று அரசியலை முன்னெடுக்கும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நாட்டுக்கான நல்ல திட்டங்களை நாங்கள் வகுத்து வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.


  • 17:37 (IST) 17 Mar 2021
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், திருவிடைமருதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வீரமணியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.


  • 16:32 (IST) 17 Mar 2021
    ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் திமுக மேல்முறையீடு செய்யவில்லை - ஆர்.எஸ்.பாரதி

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ இருவரும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    ஆர்.எஸ்.பாரதி: “ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் திமுக மேல்முறையீடு செய்யவில்லை. ஜெயலலிதா மீதான வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு அப்போது பாமக கோரிக்கை வைத்தது. ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம்” செய்கிறது என்று கூறினார்.


  • 15:33 (IST) 17 Mar 2021
    விராலிமலை தொகுதியில் போட்டியிட அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல்

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிடுவதற்காக தேர்தல் நடத்தும் வருவாய் கோட்ட அலுவலரிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


  • 15:00 (IST) 17 Mar 2021
    முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அனுமதி சட்டத்தை எதிர்த்து திமுக வழக்கு தள்ளுபடி

    மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 14:58 (IST) 17 Mar 2021
    மக்களிடையே கொரோனா பரவல் தொடர்பான அச்சம் பரவாமல் தடுப்பது அரசின் கடமை - பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி, “மக்களிடையே கொரோனா பரவல் தொடர்பான அச்சம் பரவாமல் தடுப்பது அரசின் கடமை” என்று தெரிவித்துள்ளார்.


  • 14:56 (IST) 17 Mar 2021
    கோவை அவிநாசி மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

    கோவை அவிநாசி மேம்பாலம் கட்டுமானப் பணியில் முறையாக விதிகளை பின்பற்றாமல் நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கோவை அவிநாசி மேம்பாலம் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், ஜூன் 22-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


  • 14:18 (IST) 17 Mar 2021
    தமிழகத்தில் இதுவரை ரூ.127.64 கோடி மதிப்புள்ள பணம் பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.127.64 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


  • 14:13 (IST) 17 Mar 2021
    சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - கே.எஸ்.அழகிரி

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸை தமிழக அரசு உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பணியில் இருக்கும் சிறப்பு டிஜிபி விசாரணைக்கு குந்தகம் விளைவிக்க நிறைய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


  • 13:41 (IST) 17 Mar 2021
    நீண்ட மாதங்களுக்கு பிறகு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி

    மார்ச் 26, 27 தேதிகளில் இரண்டு நாட்கள் அரசு சுற்றுப்பயணமாக நரேந்திர மோடி வங்கதேசம் செல்ல உள்ளார். கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது தான் முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.


  • 13:13 (IST) 17 Mar 2021
    அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி விநியோகம் உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் ஆலோசனை.


  • 12:55 (IST) 17 Mar 2021
    அதிமுக, திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் - தினகரன்

    தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துவிட்டு திரும்பிய தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக, திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் முக்கிய நோக்கம் என்று அவர் பேசியுள்ளார்.


  • 12:27 (IST) 17 Mar 2021
    கொரோனா காலத்தில் தேர்தல் எப்படி சாத்தியம்?

    கொரோனா காலத்தில் வழிமுறைகளை பின்பற்றி எவ்வாறு தேர்தல்களை நடத்துவது என்று பீகார தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர் தேர்தல் அதிகாரிகள். பீகார் தேர்தலில் பணியாற்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதிர்குமார் மற்றும் ரோஹினி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்பு.


  • 12:25 (IST) 17 Mar 2021
    3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

    பாஜக சார்பில் போட்டியிட இருக்கும் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. விளவங்கோட்டில் ஜெயசீலன், தளியில் நாகேஷ்குமார், உதகையில் போஜராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


  • 11:53 (IST) 17 Mar 2021
    அரசியல் கூட்டங்களால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்

    தமிழகத்தில் 16 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, 20 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. நோய் தொற்று குறைவாக உள்ளவர்கள் வீட்டு தனிமை கடைபிடிக்க வேண்டும். அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வோர் மாஸ்க் அணிவதில்லை என்றும் இதனால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயரக் கூடும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


  • 11:40 (IST) 17 Mar 2021
    "நான் உண்மை பேசும் வேட்பாளர்" - அண்ணாமலை

    "அரவக்குறிச்சி தொகுதி மக்கள் பொய் பேசும் வேட்பாளரை பார்த்துவிட்டார்கள், நான் உண்மை பேசும் வேட்பாளர்" என்று பாஜக சார்பில் நிற்கும் அண்ணாமலை கூறினார்.


  • 11:21 (IST) 17 Mar 2021
    மக்களை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி திமுகதான் - ஸ்டாலின்

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி திமுகதான் என்று குறிப்பிட்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.


  • 10:33 (IST) 17 Mar 2021
    ஊரடங்கு வதந்திகளை நம்ப வேண்டாம் - ராதாகிருஷ்ணன்

    தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


  • 10:30 (IST) 17 Mar 2021
    அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு

    வேட்பு மனு தாக்கலின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து தேர்தல் விதிகளை மீறியதாக கூறி திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


  • 10:28 (IST) 17 Mar 2021
    நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு

    நத்தம் தொகுதிக்குட்பட்ட காட்டுவேலம்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது பணம் கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


  • 10:26 (IST) 17 Mar 2021
    காட்சிகள் வேறு ஆனால் கொள்கைகள் ஒன்று - சீமான் ஆவேசம்

    காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் கொள்கைகள் ஒன்றுதான் என்றும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.


Tamil Nadu Politics Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment