Advertisment

News Highlights: தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிந்தது; இன்று மனுக்கள் பரிசீலனை

Tamil Nadu Assembly Election Live Updates பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில் அதிமுக பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
News Highlights: தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிந்தது; இன்று மனுக்கள் பரிசீலனை

Tamil Nadu Assembly Election Live Updates : தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிந்தது; இன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. மொத்தம் 4554 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினும் அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியாக இருக்கக்கூடிய பாமக பொருளாளர் கசாலியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் சிறுபான்மை பிரிவின் துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களுக்கு 500 ரூபாய் வழங்கக்கூடிய காட்சிகள் பதிவான வீடியோ வெளியாகியிருக்கிறது. இது, தேர்தல் அதிகாரிகளிடமும் கிடைத்திருக்கிறது. பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில்  அதிமுக பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தஞ்சையில் 100 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 2.75 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 7 பள்ளிகளில் 68 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று புதிதாக 2 தனியார் பள்ளிகளில் 27 மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜமாய்க்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் கிரிக்கெட் வீர‌ர் கிரிஸ் கெயில்.

தமிழகத்தைச் சேர்ந்த அர்ஜுனா விருது வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இன்று சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"



  • 21:00 (IST) 19 Mar 2021
    ரிக்ஷாவில் அமர்ந்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் ஜெயக்குமார்

    சென்னை ராயபுரம் தொகுதியில் 7-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், இன்று காலை அந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் ரிக்ஷாவில் அமர்ந்து இஸ்லாமிய பாடல் பாடியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



  • 19:48 (IST) 19 Mar 2021
    பாஜகவுடன் கூட்டணி ஏன்? முதல்வர் விளக்கம்

    சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ள முதல்வர் பழனிச்சாமி "மத்திய அரசுடன் இணக்கமான உறவு வேண்டும்" என்பதற்காகவே பாஜக கூட்டணி என்று விளக்கம் அளித்துள்ளார்.



  • 19:45 (IST) 19 Mar 2021
    முதல்வர் மீது உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

    தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "பதவி தந்தவரையே காலை வாரி விட்டவர் முதல்வர் பழனிச்சாமி என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளாா.



  • 18:46 (IST) 19 Mar 2021
    மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவோம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

    தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுது்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



  • 18:46 (IST) 19 Mar 2021
    திமுக தலைவர் ஸ்டாலின் மீது முதல்வர் பழனிச்சாமி விமர்சனம்

    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஸ்டாலின் நல்லது நினைப்பது இல்லை அதனால் தான் அவருக்கு நல்லது நடப்பதில்லை. திமுக ஆட்சியில் ஏதாவது செய்திருந்தால்தானே அதைப்பற்றி பேசுவார் என்று முதல்வர் பழனிச்சாமி, கடுமையாக விமர்சித்துள்ளார்.



  • 17:37 (IST) 19 Mar 2021
    மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுது்துவோம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

    தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுது்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



  • 17:36 (IST) 19 Mar 2021
    மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவோம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

    தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுது்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



  • 16:44 (IST) 19 Mar 2021
    மக்களிடம் குறைகள் கேட்டறிந்த கமல்ஹாசன்

    கோவை அம்மன் குளம் குடியிருப்பு பகுதிக்கு ஒரு வேட்பாளர் கூட வரவில்லை என வாக்காளர்கள் ஆதங்கப்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



  • 16:14 (IST) 19 Mar 2021
    இல்லத்தரசிகளுக்கு ரூ. 2,000 வழங்கப்படும் - ராகுல் காந்தி

    அசாம் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தி குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என்றும், 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இலவசமாக 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.



  • 15:58 (IST) 19 Mar 2021
    ஓய்வு பெறுவதற்கான வயதை 60 ஆக உயர்த்தி அறிவித்த அரசாணை ரத்தா?

    அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.



  • 15:57 (IST) 19 Mar 2021
    நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை விதிக்க ஆதாரங்கள் தேவை

    ₨1,330 கோடி மதிப்பில் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை விதிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே போதுமான ஆதாரங்களை சமர்பிக்க மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 15:56 (IST) 19 Mar 2021
    வேட்புமனுவை திரும்ப பெற 22ம் தேதி கடைசி நாளாகும்

    வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு 22-ந்தேதி கடைசி நாள் ஆகும். 22ம் தேதி பிற்பகலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • 15:55 (IST) 19 Mar 2021
    தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

    சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 12ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 4,544 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.



  • 14:59 (IST) 19 Mar 2021
    கொரோனா தடுப்பூசி முகாம்

    நாளை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.



  • 14:06 (IST) 19 Mar 2021
    கோடி கோடியாக சிக்கும் பணம்

    சென்னையில் 5 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 5.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று சென்னை, திருப்பூர், தாராபுரம் ஆகிய பகுதிகளிலும் கணக்கில் வராத ரூ. 11.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



  • 13:51 (IST) 19 Mar 2021
    மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை

    தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அப்துல் கலாம் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும். பெண்களுக்கு ஊதியம் என்பது வேலை வாய்ப்பினை வழங்குவதே தவிர இலவசம் அல்ல என்று கமல் ஹாசன் அறிக்கை வெளியிடும் போது அறிவிப்பு.



  • 13:41 (IST) 19 Mar 2021
    அ.தி.மு.க-விலிருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கம்

    பெருந்துறை சட்டமன்றத்தில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக அதிமுகவை சேர்ந்த தோப்பு. என்.டி. வெங்கடாச்சாலம் தனித்து போட்டியிடும் முனைப்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.



  • 13:17 (IST) 19 Mar 2021
    மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு

    தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கை தனித்துவமானது. எங்களுக்கு நம்பிக்கை வந்த பிறகே நாங்கள் தேர்தல் அறிக்கையை சமர்பித்துள்ளோம் என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.



  • 12:46 (IST) 19 Mar 2021
    தபால் வாக்களிக்க மொத்தம் 2.08 லட்சம் பேர் விண்ணப்பம்

    தமிழகத்தில் தபால் வாக்களிக்க மொத்தம் 2.08 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டோர் 1.59 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.



  • 11:58 (IST) 19 Mar 2021
    "அமமுக குறித்து கேள்வி கேட்டால் சப்பென்று அடித்துவிடுவேன்" - ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைக்க வந்த ராஜேந்திர பாலாஜியிடம் அமமுக பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமமுக குறித்து கேள்வி கேட்கக்கூடாது என்றும் கேள்வி கேட்டால் சப்பென்று அடித்துவிடுவேன் என்றும் ஆவசமாகப் பேசியுள்ளார்.



  • 11:39 (IST) 19 Mar 2021
    வலுவான தமிழகத்தை உருவாக்க 18 திட்டங்களை வெளியிட்ட கமல்ஹாசன்

    வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தை உருவாக்க 18 திட்டங்களை கொண்ட அறிக்கையை வெளியிட்டார் கமல்ஹாசன். இதில், மக்களாட்சி, அறிவார்ந்த அரசியல், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவை அடங்கும். மேலும், உலகத் தரத்தோடு போட்டிபோடும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் உலகத்தரமான கல்வி மற்றும் மருத்துவம், அரசு வேலை வாய்ப்பில் 69% உறுதி என்றும் கூறினார்.



  • 11:37 (IST) 19 Mar 2021
    வலுவான தமிழகத்தை உருவாக்க 18 திட்டங்களை வெளியிட்ட கமல்ஹாசன்

    வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தை உருவாக்க 18 திட்டங்களை கொண்ட அறிக்கையை வெளியிட்டார் கமல்ஹாசன். இதில், மக்களாட்சி, அறிவார்ந்த அரசியல், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவை அடங்கும். மேலும், உலகத் தரத்தோடு போட்டிபோடும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் உலகத்தரமான கல்வி மற்றும் மருத்துவம், அரசு வேலை வாய்ப்பில் 69% உறுதி என்றும் கூறினார்.



  • 11:31 (IST) 19 Mar 2021
    3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன்

    இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலில் தமிழக வீர‌ர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



  • 11:07 (IST) 19 Mar 2021
    SEET தேர்வு நடத்தப்படும் - மநீம அறிக்கை

    மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்திலிருந்து SEET தேர்வு நடத்தப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கைவிடுத்துள்ளது.



  • 11:04 (IST) 19 Mar 2021
    'மாஸ்க் அணியாமல் பரப்புரை செய்தால் தடை விதிக்க வேண்டும்' - டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு

    கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழலில் முகக்கவசம் அணியாமல் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்களை நிரந்தரமாகவோ, தேர்தல் முடியும் வரையோ தடை விதிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விக்ரம்சிங் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.



  • 10:08 (IST) 19 Mar 2021
    புதுச்சேரியில் இதுவரை 267 பேர் வேட்புமனுத் தாக்கல்

    புதுச்சேரியில் 1கடந்த 2-ம் தேதி தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வரும் 6-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதுவரை 267 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர்.



Tamilnadu Assembly Election Stalin Corona Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment