Advertisment

News Highlights: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மோடி; தமிழகத்தில் இன்று பிரசாரம்

Tamil Nadu Assembly Election Live Updates உரிமம் பெற்ற 1799 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 43 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
News Highlights: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மோடி; தமிழகத்தில் இன்று பிரசாரம்

Tamil Nadu Assembly Election Live Updates : தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பாகச் சென்னையில் இதுவரை 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு சென்றதாக 383 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தல் பிரிவின் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  மேலும், உரிமம் பெற்ற 1799 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 43 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisment

கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது முதல்முதலாக ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.

அசாமில் இன்று 39 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத்தேர்தல் துவங்கி உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். 26 பெண்கள் உட்பட 345 வேட்பாளர்கள் 2-ம் கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%-ல் இருந்து 3.5%-ஆகக் குறைக்கப்பட்டது திரும்பப்பெறப்படுகிறது என்றும் ஏற்கெனவே இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் நாடெங்கும் தொடங்குகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • 21:53 (IST) 01 Apr 2021
    ரஜினிகாந்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரேகித் வாழ்த்து

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்துக்கு சினிமாவின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரேகித் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

  • 20:08 (IST) 01 Apr 2021
    அமித்ஷா நடிகர் ரஜனிகாந்துக்கு தமிழில் வாழ்த்து

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்துக்கு சினிமாவின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • 19:11 (IST) 01 Apr 2021
    ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேட்டி

    மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட 2 ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பு விடுத்தபோதும் நான் அதில் நாட்டம் காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.

  • 18:22 (IST) 01 Apr 2021
    அசாம் மேற்குவங்கம் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிலவரம்

    5 மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் அசாம் மாநிலத்தில் மாலை 5.10 மணி நிலவரப்படி 67.60% வாக்குகளும், மேற்கு வங்கம் மாநிலத்தில், மாலை 5.10 மணி நிலவரப்படி 72.25% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

  • 18:18 (IST) 01 Apr 2021
    முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம்

    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் தீவர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் எத்தனை அவதாரம் எடுத்தாலும் மு.க.ஸ்டாலினால் வெல்ல முடியாது என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

  • 16:14 (IST) 01 Apr 2021
    அரசியல் தலைவர்கள் பிரசாரத்தின்போது போக்குவரத்து தடை செய்யக்கூடாது - ஐகோர்ட் உத்தரவு

    முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரத்தின்போது

    பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 15:26 (IST) 01 Apr 2021
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; மதுரை, கன்னியாகுமரியில் நாளை பிரசாரம்

    பிரதமர் மோடி மதுரை, கன்னியாகுமரியில் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இன்று இரவு தமிழகம் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 14:52 (IST) 01 Apr 2021
    பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆ.ராசா தரப்பில் ஐகோர்ட்டில் அவசர முறையீடு

    திமுக எம்.பி ஆ.ராசா சர்ச்சை பேச்சு விவகாரத்தில், தேர்தல் ஆணையம் ஆ.ராசா பிரசாரம் செய்ய தடை விதித்தது. பிரசாரத்துக்கு தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவசரமாக விசாரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

  • 14:46 (IST) 01 Apr 2021
    சர்ச்சை பேச்சு: ஆ.ராசா பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம்

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசா பெயரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

  • 14:13 (IST) 01 Apr 2021
    ஆ.ராசாவின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

    முதலமைச்சர் பழனிசாமி குறித்த விமர்சனத்துக்கு ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 14:05 (IST) 01 Apr 2021
    தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தற்கு பிரதமர் மோடிக்கு நன்றி - நடிகர் ரஜினி!

    இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு சார்பில் தாதாசாகேப் விருது வழங்கப்படும். அந்த வரிசையில், 51-வது தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.

    திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை தனக்கு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் ரஜினி, வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய,மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

  • 13:52 (IST) 01 Apr 2021
    தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தற்கு பிரதமர் மோடிக்கு - நன்றி நடிகர் ரஜினி!

    இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு சார்பில் தாதாசாகேப் விருது வழங்கப்படும். அந்த வரிசையில், 51-வது தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.

    திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை தனக்கு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் ரஜினி, வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய,மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

  • 13:38 (IST) 01 Apr 2021
    மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் - 2ம் கட்ட வாக்குப்பதிவு!

    மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நந்திகிராம் சட்டமன்றத் தொகுதிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வந்துள்ளார்.

  • 13:35 (IST) 01 Apr 2021
    மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் - 2ம் கட்ட வாக்குப்பதிவு!

    மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நந்திகிராம் சட்டமன்றத் தொகுதிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வந்துள்ளார்.

  • 13:29 (IST) 01 Apr 2021
    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜெகன் மோகன் ரெட்டி!

    குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

  • 13:25 (IST) 01 Apr 2021
    மே 2 காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

    தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும் என்றும், விநியோகித்த 3,46,519 விண்ணப்பங்களில் 1,32,350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் அளித்துள்ளார்.

  • 12:54 (IST) 01 Apr 2021
    புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கசிந்தது எப்படி?"

    ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் பிரசார எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதால், புதுச்சேரி வாக்காளர்களின் விவரங்கள் பாஜகவுக்கு கிடைத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து விசாரணை நடத்தி விளக்கமளிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

  • 12:53 (IST) 01 Apr 2021
    புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கசிந்தது எப்படி?"

    ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் பிரசார எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதால், புகுறித்து துச்சேரி வாக்காளர்களின் விவரங்கள் பாஜகவுக்கு கிடைத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது விசாரணை நடத்தி விளக்கமளிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

  • 12:51 (IST) 01 Apr 2021
    ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்க கோரிய மனு நிராகரிப்பு

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 1 மாத கால சாதாரண விடுப்பு வழங்க கோரிய மனுவை நிராகரித்ததுள்ளது தமிழக அரசு. மேலும் ரவிச்சந்திரன் வீட்டின் அருகே இலங்கை அதிகள் முகாம் உள்ளதால் மனு நிராகரிப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது.

  • 12:48 (IST) 01 Apr 2021
    புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கசிந்தது எப்படி?"

    ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் பிரசார எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதால், புதுச்சேரி வாக்காளர்களின் விவரங்கள் பாஜகவுக்கு கிடைத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து விசாரணை நடத்தி விளக்கமளிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

  • 12:35 (IST) 01 Apr 2021
    பிரதமர் மோடி பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!

    மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பரப்புரை ஈடுபட்டும் வரும் ஸ்டலின் “தமிழகத்தையும், திமுகவையும் பற்றி பேச பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வருக்கும் எந்தவித தகுதியும் கிடையாது. பிரதமரும், உ.பி. முதல்வரும் திமுகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறுகின்றனர். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் "தமிழகத்தில் மோடி எதிர்ப்பலையோடு முதல்வர் பழனிசாமி எதிர்ப்பலையும் வீசுகிறது. பொள்ளாச்சி கொடூரம் பற்றி பிரதமர் மோடி ஏன் கேட்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  • 12:31 (IST) 01 Apr 2021

  • 12:28 (IST) 01 Apr 2021
    கோவை வன்முறை சம்பவம் - பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு!

    கோவையில் நேற்று உ.பி. முதல் யோகி ஆதித்யநாத் வருகையின் போது வன்முறையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடைகளை மூடச் சொல்லியும், திறந்திருந்த கடைகள் மீது கற்களை வீசியும் பஜவினர் வன்முறையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  • 12:02 (IST) 01 Apr 2021
    நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் வாழ்த்து!

    திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்புத் திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் இது என தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

  • 12:00 (IST) 01 Apr 2021
    ரஜினிகாந்துக்கு கமல் வாழ்த்து!

    "என் மனதிற்கு இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது" என்று கமல்ஹாசன் ட்வீட் செய்திருக்கிறார்.

  • 10:41 (IST) 01 Apr 2021
    இந்தியாவில் மேலும் 72,330 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கொரோனாவால் மேலும் 72,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.22 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 459 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • 10:38 (IST) 01 Apr 2021
    நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது

    இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு சார்பில் தாதாசாகேப் விருது வழங்கப்படும். அந்த வரிசையில், 51-வது தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

  • 10:37 (IST) 01 Apr 2021

  • 10:06 (IST) 01 Apr 2021
    தேர்தலையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

    சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 5 நாட்களுக்கு 14 ஆயிரத்து 215 பேருந்துகளும், கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு நகரங்களில் இருந்து 2 ஆயிரத்து 644 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மட்டும் பண்டிகை காலங்களைப் போன்று சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

  • 10:04 (IST) 01 Apr 2021
    மீனவர்களுக்கு எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்

    வங்கக்கடலில் நிலவும் தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக வலுபெறும் என்றும் அந்தமான் ஓட்டிய கடல் பகுதிக்கு அடுத்த 24 மணி நேரம் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Assembly Elections 2021 Crime Election Campaign
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment