Tamil Nadu Assembly Election Live Updates : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் அமமுக - தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்தை ஆதரித்து அவருடைய மகன் விஜய பிரபாகரன் பிரசாரம் மேற்கொண்டபோது, குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை என்றும் மக்களுக்காக உழைக்க வந்துள்ளோம் என்றும் கூறி மக்களின் ஆதரவைத் திரட்டினார். மேலும், தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக பிரேமலதா விஜயகாந்த் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் 2-ம் கட்ட சட்டப்பேரவைத்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மேலும், வாக்கு நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களாகப் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 50 சதவிகிதம் பேர் மாஸ்க் அணிவதில்லை எனப் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58-க்கும் டீசல் லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:57 (IST) 30 Mar 2021பாஜக ரவுடிகளை கட்சியில் இணைத்துள்ளது - ஸ்டாலின்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்போம் என பிரதமர் பேசுகிறார் என்றும், பாஜக ரவுடிகளை கட்சியில் இணைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 19:59 (IST) 30 Mar 2021பட்டினப்பாக்கம் பகுதியில் மீன் சந்தையை உலக தரத்திற்கு மாற்றுவேன் - ஸ்ரீபிரியா
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஸ்ரீபிரியா பட்டினப்பாக்கம் பகுதியில் மீன் சந்தையை உலக தரத்திற்கு மாற்றுவேன் என கூறியுள்ளார்.
- 18:52 (IST) 30 Mar 2021சென்னையில் 874 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஒரேநாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,, 4 பேர் கொரோனா தொற்று பாதிப்புக் பலியாகியள்ளனர்.
- 18:48 (IST) 30 Mar 2021மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.220 கோடி - பிரதமர் மோடி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, புதுச்சேரியில், மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவம், தொழில்நுட்ப கல்வியை மாநில மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறியுள்ளார்
- 18:47 (IST) 30 Mar 2021மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.220 கோடி - பிரதமர் மோடி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, புதுச்சேரியில், மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவம், தொழில்நுட்ப கல்வியை மாநில மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறியுள்ளார்
- 17:03 (IST) 30 Mar 2021கொரோனாவை குறைக்க சென்னையில் மருத்துவக் கட்டுப்பாடு
தமிழகத்தில் ஒருபுறம் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் கொரோனா தொற்று பாதிப்பு கடும் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் கொரோனாவை குறைக்க சென்னையில் மருத்துவக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
- 16:23 (IST) 30 Mar 2021கொரோனா தொற்று வழக்குகள் அதிக எண்ணிக்கையிலான உள்ள மாவட்டங்களின் பட்டியல் வெளியீடு!
கொரோனா தொற்று வழக்குகள் அதிக எண்ணிக்கையிலான உள்ள 10 மாவட்டங்களின் பட்டியலை மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டுள்ளார். அதில் புனே, மும்பை, நாக்பூர், தானே, நாசிக், அவுரங்காபாத், பெங்களூரு சிட்டி, நாந்தேடு, டெல்லி மற்றும் அகமதுநகர் போன்ற மாவட்டங்களின் பெயர்கள் உள்ளன.
- 16:16 (IST) 30 Mar 2021தேர்தல் விளம்பரங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்
வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு எஸ்.எம்.எஸ், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தேர்தல் விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- 16:07 (IST) 30 Mar 2021எஸ்.வி.சேகர் என்ன எழுத, படிக்க தெரியாதவரா? - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
பெண் பத்திரிக்கையாளர் குறித்த சர்ச்சை தொடர்ப்பான வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், 'பேஸ்புக்கில் வந்ததை படிக்காமல் பகிர எஸ்.வி.சேகர் என்ன எழுத, படிக்க தெரியாதவரா? சமூகத்தை மதிக்காத, புரிந்துகொள்ளாத இவர்கள் எப்படி முக்கிய பிரபலங்கள் என சொல்லிக் கொள்கிறார்கள்' என்று கேள்வி எழுப்பியுள்ளது.
- 15:48 (IST) 30 Mar 2021'வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு நிரந்தரமானது' - எடப்பாடி பழனிசாமி உறுதி!
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு நிரந்தரமானது என ராமதாஸ்-க்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் உறுதிபடுத்தியுள்ளார்
- 14:58 (IST) 30 Mar 2021உழவர்களை உலகம் பின்பற்ற வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது - பிரதமர் மோடி
தாராபுரம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசி வரும் பிரதமர் மோடி, "சிறு குறு விவசாயிகளின் நலன்களை காப்பதே மத்திய அரசின் நோக்கம். பல்வேறு திட்டங்களின் மூலம் சிறு குறு விவசாயிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
- 14:48 (IST) 30 Mar 2021தமிழக மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர் - பிரதமர் மோடி
தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, தமிழக மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கொங்கு மக்கள் என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். எளிதாக தொழில் தொடங்க பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
- 14:44 (IST) 30 Mar 2021பெண்களை இழிவுபடுத்துவது திமுக மற்றும் காங்கிரஸின் கலாச்சாரம் - பிரதமர் மோடி
பெண்களை இழிவாக பேசுவதை தமிழர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். முதல்வர் தாயை விமர்சனம் செய்து பேசுவதா? பெண்களை இழிவுப்படுத்திய திமுக தலைவர்களை ஏன் அக்கட்சியின் தலைமை கண்டிக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் திமுக தங்களின் தலைவர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் கடும் கண்டனத்தை பதிவு செய்தார் மோடி.
- 14:44 (IST) 30 Mar 2021தமிழக மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர் - பிரதமர் மோடி
தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, தமிழக மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கொங்கு மக்கள் என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். எளிதாக தொழில் தொடங்க பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
- 14:35 (IST) 30 Mar 2021பெண்களை இழிவுபடுத்துவது திமுக மற்றும் காங்கிரஸின் கலாச்சாரம் - பிரதமர் மோடி
பெண்களை இழிவாக பேசுவதை தமிழர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். முதல்வர் தாயை விமர்சனம் செய்து பேசுவதா? பெண்களை இழிவுப்படுத்திய திமுக தலைவர்களை ஏன் அக்கட்சியின் தலைமை கண்டிக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் திமுக தங்களின் தலைவர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் கடும் கண்டனத்தை பதிவு செய்தார் மோடி.
- 14:35 (IST) 30 Mar 2021வெற்றிவேல்... வீரவேல்... என்று தேர்தல் உரையை துவங்கிய பிரதமர் மோடி!
வெற்றிவேல் வீரவேல் என்று துவங்கிய தன்னுடைய உரையில் தமிழக கலாச்சாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. உலகின் தொன்மையான மொழியில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி பேச்சு. -
- 14:27 (IST) 30 Mar 2021வெற்றிவேல்... வீரவேல்... என்று தேர்தல் உரையை துவங்கிய பிரதமர் மோடி!
வெற்றிவேல் வீரவேல் என்று துவங்கிய தன்னுடைய உரையில் தமிழக கலாச்சாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. உலகின் தொன்மையான மொழியில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி பேச்சு. -
- 14:08 (IST) 30 Mar 2021ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்த மோடி
ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெந்த பெருமை மோடியையே சாரும் என்றும் உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான் என்றும் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம்.
- 14:05 (IST) 30 Mar 2021பிரதமரின் உழைப்பால் இந்தியா உலக அளவில் பெருமை அடைந்துள்ளது
தாராபுரம் பகுதியில் பிரச்சாரத்திற்காக வந்திருக்கும் பிரதமர் மோடி குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு. பிரதமரின் உழைப்பால் இந்தியா உலக அளவில் பெருமை அடைந்துள்ளது என்றும் தமிழக மக்கள் மீது பேரன்பு கொண்டவர் மோடி என்றும் முதல்வர் பேச்சு
Speaking at a rally in Dharapuram, Tamil Nadu. https://t.co/hFpzBS0ElS
— Narendra Modi (@narendramodi) March 30, 2021 - 13:45 (IST) 30 Mar 2021தாராபுரத்தில் மோடி
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தற்போது தமிழகம் வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தாராபுரத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
- 13:19 (IST) 30 Mar 2021தேர்தலில் பழமையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படமாட்டாது
நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 15 ஆண்டுகால பழமை வாய்ந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படமாட்டாது என்றும் 2017ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
- 13:03 (IST) 30 Mar 2021சபாநாயகர், அமைச்சர் வாகனங்கள் மோதல்
தாராபுரத்தில் இன்று பிரச்சாரம் செய்யும் நரேந்திர மோடியின் கூட்டத்தில் பங்கேற்க சென்றனர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் சபாநயகர் தனபால். சூரியநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேலுமணியின் பாதுகாப்பிற்கு சென்ற காருடன் கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட காரில் இருவரும் இல்லாததால் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் இல்லை.
- 12:59 (IST) 30 Mar 2021அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யக் கோரிய வழக்கு
வழக்கறிஞர் பால்ராஜ் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், பரப்புரையின் போது வேட்பாளர்கள் முதியவர்களையும் குழந்தைகளையும் கட்டிப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படும் என்று பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இந்த வழக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்ததோடு ஓராண்டுக்கு அவர் பொதுநல வழக்கு தொடரவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 12:46 (IST) 30 Mar 2021சபாநாயகர், அமைச்சர் வாகனங்கள் மோதல்
தாராபுரத்தில் இன்று பிரச்சாரம் செய்யும் நரேந்திர மோடியின் கூட்டத்தில் பங்கேற்க சென்றனர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் சபாநயகர் தனபால். சூரியநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேலுமணியின் பாதுகாப்பிற்கு சென்ற காருடன் கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட காரில் இருவரும் இல்லாததால் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் இல்லை.
- 12:36 (IST) 30 Mar 2021புதுவையில் ஐ.டி. ரெட்ய்டு
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொழில் அதிபர் புவனேஷ்வரன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- 12:26 (IST) 30 Mar 2021எஸ்.பி.வேலுமணியின் பாதுகாப்பு வாகனம் விபத்து
திருப்பூர் தாராபுரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பாதுகாப்புக்கு சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.
- 12:20 (IST) 30 Mar 2021அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கம்
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதால் அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் எம்.பி., ஏழுமலை, ஈஸ்வரசாமி, நாகராஜ், ரங்கசாமி, கமலஹாசன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
- 11:36 (IST) 30 Mar 2021நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் மேலும் 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது மற்றும் 37,028 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் 271 பேர் இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,62,114 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 6.11 கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- 11:30 (IST) 30 Mar 2021சிறுவர்களுக்கு இந்தியன் தாத்தாவாக தெரிகிறேன் - கமல்
"நாற்காலியை பிடித்துக்கொண்டு நகரமாட்டேன் என்பவர்கள் மக்களுக்கு வேண்டாம். மக்களுடன் மக்களாக இருப்பவர்கள் தான் வேண்டும் என்றும் தாய்மார்களுக்கு நான் குழந்தையாகவும் சிறுவர்களுக்கு இந்தியன் தாத்தாவாகவும் தெரிகிறேன் என்று கமல் பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
- 11:28 (IST) 30 Mar 2021தங்கம் விலை குறைந்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.33,536-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.4,192-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 11:20 (IST) 30 Mar 2021ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று
83 வயதான ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அவருடைய மகன் உமர் அப்துல்லா உறுதி செய்துள்ளார்.
My father has tested positive for COVID-19 & is showing some symptoms. I will be self-isolating along with other family members until we get ourselves tested. I request anyone who has come in to contact with us over the last few days to take all the mandated precautions.
— Omar Abdullah (@OmarAbdullah) March 30, 2021 - 11:17 (IST) 30 Mar 2021கேரளா செல்ல கோவை விமானநிலையத்துக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி
பிரசாரம் தொடர்பாக கேரளா செல்ல கோவை விமானநிலையத்துக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. கேரளாவின் பாலக்காடு பிரசாரத்தை முடித்துக்கொண்டு மீண்டும் தாராபுரம் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
- 10:00 (IST) 30 Mar 2021பிரச்சாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்ட கமல்!
சென்னை வளசரவாக்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்மபிரியா, பூந்தமல்லி வேட்பாளர் ரேவதி ஆகியோருக்கு வளசரவாக்கத்தில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தபோது, அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
- 09:42 (IST) 30 Mar 2021திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா
குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.