Advertisment

TN Election News Highlights: தமிழகத்தில் இதுவரை ரூ412 கோடி பறிமுதல்

Tamil Nadu Assembly Election Updates சென்னையில் இன்றும் நாளையும் கூடுதலாக 230 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
How to download Digital voter cards election commission of india -டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடத்தப்படவுள்ளது.. இன்று இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 மணிக்குப் பின் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யவும் தடை விதித்துள்ளது.

Advertisment

தேர்தலை முன்னிட்டு வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு மக்கள் எளிதாகப் பயணிக்கும் வகையில் சென்னையில் இன்றும் நாளையும் கூடுதலாக 230 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:21 (IST) 04 Apr 2021
    தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.412 கோடி பறிமுதல் - சத்ய பிரதா சாகு தகவல்

    சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சதிய பிரதா சாகு, “தமிழகம் முழுவதும் இதுவரை 412 கோடி ரூபாய் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • 21:18 (IST) 04 Apr 2021
    ஏப்ரல் 6ம் தேதி தேர்தலில் வாக்களிக்க் 80 வயது முதியவர்களுக்கு கார் சேவை - தேர்தல் ஆணையம்

    ஏப்.6ல் தேர்தலன்று வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கார் சேவை அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி,கோவை ஆகிய மாநகரங்களில் ஊபர் கார் சேவை நிறுவனத்துடன் இலவச சேவையை தேர்தல் ஆணையம் வழங்குகிறது.



  • 20:21 (IST) 04 Apr 2021
    கொரோனாவில் இருந்து மீண்டார் நல்லகண்ணு

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு கொரோனாவில் இருந்து மீண்டார். கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.



  • 19:06 (IST) 04 Apr 2021
    தேர்தல் பிரசாரம் நிறைவு; சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்ய தடை

    தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் வழக்குப்பதிவு செய்து அபராதமும் 2 ஆண்டு தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:40 (IST) 04 Apr 2021
    ‘உங்களுக்காக உழைக்க எனக்கு உத்தரவிடுங்கள்’ - மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்

    இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது; அதிமுகவை போன்று திமுகவை மிரட்ட முடியாது; உங்களுக்காக உழைக்க எனக்கு உத்தரவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.



  • 18:20 (IST) 04 Apr 2021
    ‘திமுக காங்கிரஸ்தான் மதவாத சக்திகள்; என்னால் நிரூபிக்க முடியும்’ - ஜே.பி.நட்டா

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேட்டி: “குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; திமுக காங்கிரஸ்தான் மதவாத சக்திகள்; என்னால் நிரூபிக்க முடியும்” என்று கூறினார்.



  • 18:18 (IST) 04 Apr 2021
    தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் - ஜே.பி.நட்டா பேட்டி

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது பிரதமர் மோடிதான்... தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்று உறுதி கூறினார்.



  • 18:15 (IST) 04 Apr 2021
    ‘தேர்தலில் அதிமுகவிற்கு ஜீரோவை அளித்தால் நாம் தான் ஹூரோ’ - மு.க.ஸ்டாலின் பேச்சு

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அடிமை ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்; நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு ஜீரோ அளித்தது போல சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஜீரோவை அளித்தால் நாம் தான் ஹூரோ” என்று கூறினார்.



  • 17:07 (IST) 04 Apr 2021
    பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி

    பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் நிலையில் சில மாற்றம் இருந்ததால் தானாகவே முன் வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், தேவையான மருத்துவ உதவிகளுடன் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று கோவிந்தா தெரிவித்துள்ளார்.



  • 17:02 (IST) 04 Apr 2021
    ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

    தமிழக தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமாரின் வீட்டில் ரூ.91.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக வேட்பாளர் சுகுமார், அவரது மகன் கோபி மீது 7 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 16:57 (IST) 04 Apr 2021
    பதற்றமான வாக்கு சாவடிகள் தீவிர கண்காணிப்பு - சென்னை காவல் ஆணையர்

    தமிழக தேர்தலின் போது சென்னையில், பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அங்கு துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றும் மேலும் அந்த வாக்கு சாவடிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.



  • 16:57 (IST) 04 Apr 2021
    பதற்றமான வாக்கு சாவடிகள் தீவிர கண்காணிப்பு - சென்னை காவல் ஆணையர்

    தமிழக தேர்தலின் போது செனனையில், பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அங்கு துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றும் மேலும் அந்த வாக்கு சாவடிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.



  • 16:57 (IST) 04 Apr 2021
    பதற்றமான வாக்கு சாவடிகள் தீவிர கண்காணிப்பு - சென்னை காவல் ஆணையர்

    தமிழக தேர்தலின் போது சென்னையில், பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அங்கு துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றும் மேலும் அந்த வாக்கு சாவடிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.



  • 16:45 (IST) 04 Apr 2021
    தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயமில்லை - தலைமை தேர்தல் அதிகாரி

    தமிழக தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது.

    தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் கூறியுள்ளார்



  • 16:30 (IST) 04 Apr 2021
    ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் உலக சாதனை

    ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 22 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு நாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக புதிய  சாதனை படைத்துள்ளது. முன்னதாக ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி 21 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருந்ததே ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்த சாதனையாக இருந்தது. 



  • 16:15 (IST) 04 Apr 2021
    அருப்புகோட்டை அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

    சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 7 மணியோடு நிறைவுறும் நிலையில், அருப்புகோட்டை பகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அதிமுக பிரமுகர் சொக்கலிங்கம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • 16:01 (IST) 04 Apr 2021
    திருச்சி அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா!

    திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும், அடுக்குமாடி குடியிருப்பிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • 15:58 (IST) 04 Apr 2021
    பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை; பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுக்லா

    நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு அணியிலும் கூடுதல் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.. போட்டிக்காக 6 இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.



  • 15:49 (IST) 04 Apr 2021
    தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலை; வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளையும், வாக்குப்பதிவு நாளான நாளை மறுநாளும் இயல்பை விட 3-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 15:43 (IST) 04 Apr 2021
    ஆவடியில் ஆதிமுக தொண்டர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

    பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆவடி தொகுதியில், பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தொகுதியில், அதிமுக வினருக்கு எதிராக வட்டாச்சியர் செயல்பட்டு வருவதாக கூறி அதிமுக தொண்டர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • 15:37 (IST) 04 Apr 2021
    பெட்ரோல், டீசல் விலை குறையும்; அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல், டீசல், கேஸ் விலை இந்தியாவில் கடுமையாக உயர்ந்து வந்தது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கி உள்ளதால், பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைய வாய்ப்புள்ளதாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.



  • 15:35 (IST) 04 Apr 2021
    பெட்ரோல், டீசல் விலை குறையும்; அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல், டீசல், கேஸ் விலை இந்தியாவில் கடுமையாக உயர்ந்து வந்தது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கி உள்ளதால், பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைய வாய்ப்புள்ளதாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.



  • 15:28 (IST) 04 Apr 2021
    சென்னையில் 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னையில் இதுவரையில், 8,12,270 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் மட்டும் 21,324 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



  • 15:27 (IST) 04 Apr 2021
    சென்னையில் 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னையில் இதுவரையில், 8,12,270 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் மட்டும் 21,324 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



  • 14:40 (IST) 04 Apr 2021
    அனிதா குறித்த ட்வீட்..மாஃபா விளக்கம்..

    அனிதா குறித்து தான் ட்வீட் செய்யவில்லை எனவும், எந்த நிலையிலும் யாரையும் அவதூறு செய்யவேண்டும் என்ற எண்ணம் தனக்கு கிடையாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சைபர் க்ரைமில் இதுகுறித்து புகார் அளிக்கப்படும் எனவும், டிவிட்டரில் பதிவு செய்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்



  • 14:29 (IST) 04 Apr 2021
    தமிழகத்தில் இதுவரை ரூ.412கோடி பறிமுதல்

    தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.412கோடிக்கு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் இன்று காலை ரூ.91 லட்ச ரூபாயும், கோவையில் ரூ.98 லட்ச ரூபாயும், சிவகாசியில் ரூ.45 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.



  • 14:25 (IST) 04 Apr 2021
    திமுக எம்.பி. தயாநிதிமாறன் மீது வழக்குப்பதிவு

    சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் மீது கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 13:37 (IST) 04 Apr 2021
    தமிழகத்தில் இதுவரை ரூ.412கோடி பறிமுதல்

    தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.412கோடிக்கு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.



  • 13:32 (IST) 04 Apr 2021
    திமுகவை அச்சுறுத்தவே ஐடி ரெய்டு

    திமுகவை அச்சுறுத்தவே தனது மகள் வீட்டில் ரெய்டு நடத்தியதாகவும், வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்துவிட்டு டிவி பார்த்துவிட்டு பிரியாணி சாப்பிட்டு சென்றார்கள் என சென்னையில் தேர்தல் பரப்புரையில் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.



  • 13:28 (IST) 04 Apr 2021
    அனிதா வீடியோவை நீக்கினார் மாஃபா

    அதிமுகவிற்கு ஆதரவாக நீட் அனிதா பேசுவது போல சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், கண்டனங்கள் எழுந்ததால் தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து வீடியோவை நீக்கினார் அமைச்சர் பாண்டியராஜன்



  • 13:28 (IST) 04 Apr 2021
    அனிதா வீடியோவை நீக்கினார் மாஃபா

    அதிமுகவிற்கு ஆதரவாக நீட் அனிதா பேசுவது போல சித்தரித்து வீடியோ வெளியான விவகாரத்தில், கண்டனங்கள் எழுந்ததால் தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து வீடியோவை நீக்கினார் அமைச்சர் பாண்டியராஜன்



  • 13:26 (IST) 04 Apr 2021
    பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளதாகவும், வரும் நாட்களில் அதன் விலை மேலும் குறையும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.



  • 13:24 (IST) 04 Apr 2021
    ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

    டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. சட்டப்பேரவை தேர்தலையொட்டி மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது.



  • 13:05 (IST) 04 Apr 2021
    தமிழகத்தில் இதுவரை ரூ.412கோடி பறிமுதல்

    தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.412கோடிக்கு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் இன்று காலை ரூ.91 லட்ச ரூபாயும், கோவையில் ரூ.98 லட்ச ரூபாயும், சிவகாசியில் ரூ.45 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.



  • 12:43 (IST) 04 Apr 2021
    சத்தீஸ்கரில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம்

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்களுடனான துப்பாக்கிச் சண்டையில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.



  • 12:28 (IST) 04 Apr 2021
    ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

    டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. சட்டப்பேரவை தேர்தலையொட்டி மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது.



  • 12:20 (IST) 04 Apr 2021
    பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளதாகவும், வரும் நாட்களில் அதன் விலை மேலும் குறையும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.



  • 12:06 (IST) 04 Apr 2021
    அனிதா வீடியோவை நீக்கினார் மாஃபா

    அதிமுகவிற்கு ஆதரவாக நீட் அனிதா பேசுவது போல சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், கண்டனங்கள் எழுந்ததால் தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து வீடியோவை நீக்கினார் அமைச்சர் பாண்டியராஜன்



  • 11:57 (IST) 04 Apr 2021
    திமுகவை அச்சுறுத்தவே ஐடி ரெய்டு

    திமுகவை அச்சுறுத்தவே மகள் வீட்டில் ரெய்டு, வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்துவிட்டு டிவி பார்த்துவிட்டு பிரியாணி சாப்பிட்டார்கள்- சென்னை தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு



  • 11:57 (IST) 04 Apr 2021
    திமுகவை அச்சுறுத்தவே ஐடி ரெய்டு

    திமுகவை அச்சுறுத்தவே தனது மகள் வீட்டில் ரெய்டு நடத்தியதாகவும், வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்துவிட்டு டிவி பார்த்துவிட்டு பிரியாணி சாப்பிட்டு சென்றார்கள் என சென்னையில் தேர்தல் பரப்புரையில் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.



  • 10:26 (IST) 04 Apr 2021
    கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு!

    கோவையில் இந்து மத கடவுள்களை அடையாளப்படுத்தி பரப்புரை மேற்கொண்டதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 10:20 (IST) 04 Apr 2021
    டாஸ்மாக் விடுமுறை.. முன்கூட்டியே வாங்கிக் குவித்த மதுபிரியர்கள்

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதையொட்டி, இன்று முதல் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், நேற்று பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.



Eps Stalin Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment