scorecardresearch

Tamil News Highlights : மேலும் 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

Tamil Nadu assembly election live updates திமுக தலைமையிலான கூட்டணி 43% வாக்குகளைப் பெற்று 161 முதல் 169 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தெரிவித்திருக்கிறது.

Tamil News Highlights : மேலும் 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என ABP- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி 43% வாக்குகளைப் பெற்று 161 முதல் 169 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி 30.6% வாக்குகளுடன் 53 முதல் 61 தொகுதிகளையே பெற வாய்ப்பு உள்ளது என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி 7% வாக்குகளைப் பெற்று 2 முதல் 6 இடங்களிலும் அமமுக கட்சி 6.4% வாக்குகளுடன் 1 முதல் 5 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக ABP- சி வோட்டர் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணியையும் தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய தேசிய கட்சிகள் மட்டும் தங்கள் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடவில்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் 17 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. உதகமண்டலம், விளவங்கோடு, தளி ஆகிய 3 தொகுதி வேட்பாளர்களை பாஜக இன்று அறிவிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி முறையில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிடுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பிரதமர் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 26 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Live Updates
21:33 (IST) 16 Mar 2021
இரீடியம் விற்பனை மோசடி : நடிகர் ஜெயச்சந்திரனின் மகன் கைது

இரீடியம் விற்பனை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் ஜெயச்சந்திரனின் மகனும் இசையமைப்பாளருமான அம்ரீஷ், கைது செய்யப்பட்டுள்ளார்.

21:04 (IST) 16 Mar 2021
பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ரூப்நகர் மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

20:59 (IST) 16 Mar 2021
3-வது டி20 போட்டி : இந்திய அணி 156 ரன்கள் குவிப்பு

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 77 ரன்கள் குவித்தார்.

19:55 (IST) 16 Mar 2021
ஏப்ரல் 6-ந் தேதி பொதுவிடுமுறை – தமிழக அரசு

இந்தியாவில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6-ந்தேதி பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாக்களிக்கு ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு்ளளதாக கூறப்படுகிறது.

18:12 (IST) 16 Mar 2021
அதிமுகவின் தேர்தல் அறிக்கை காமெடி வில்லன் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சேலத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அதிமுகவின் தேர்தல் அறிக்கை வில்லன் கூட கிடையாது; அது காமெடி வில்லன். திமுகவின் தேர்தல் அறிக்கையை எல்லாரும் கதாநாயகன் என்று சொல்கிறார்கள்; கதாநாயகியும் அதுதான்” என்று கூறினார்.

17:49 (IST) 16 Mar 2021
நத்தம் விஸ்வநாதன் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

ஆரத்தி எடுப்பதற்கு பணம் வழங்கியதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

17:43 (IST) 16 Mar 2021
24 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

17:41 (IST) 16 Mar 2021
ஆர். கே. நகர் பக்கம் டிடிவி தினகரன் திரும்பி போக முடியாது – அமைச்சர் கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர்ராஜ்: “ஆர். கே. நகர் பக்கம் டிடிவி தினகரன் திரும்பி போக முடியாது; காரணம் 20 ரூபாய் நோட்டுகளை மக்கள் கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

16:45 (IST) 16 Mar 2021
மக்கள் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க கூடிய அரசு, அதிமுக அரசு – முதல்வர் பழனிசாமி பிரசாரம்

தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் பழனிசாமி, “மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க கூடிய அரசு, அதிமுக அரசு. காவிரி குண்டாறு திட்டத்தை நடைமுறைப்படுத்த அடிக்கல் நாட்டியுள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாட்டிலேயே அதிக இழப்பீடு பெற்றுத்தந்த அரசு அதிமுக அரசு” என்று கூறினார்.

15:28 (IST) 16 Mar 2021
விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைகழகத்திற்கு முதல் துணைவேந்தர் நியமனம்

விழுப்புரத்தில் புதிதாக தொடங்கப்படுகிற ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்திற்கு முதல் துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த அன்பழகன் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

15:23 (IST) 16 Mar 2021
பிரசாரங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு

கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் 1.2% உயர்ந்துள்ளது. பிரசாரங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மற்றும் கோவையில் கொரோனாவின் தாக்கம் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

15:09 (IST) 16 Mar 2021
பாதாள சாக்கடை மரணங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு – ஐகோர்ட் உத்தரவு

பாதாள சாக்கடை மரணங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஆணையர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவர் என தெளிவுபடுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14:18 (IST) 16 Mar 2021
ரயில்வே துறையில் தனியார் முதலீட்டை வரவேற்க வேண்டும் – பியூஷ் கோயல்

ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவது குறித்து குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் சாலைகளில் அரசு வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் ஒரு போதும் கூறவே மாட்டார்கள். பொருளாதார மேம்பாட்டுக்கு தனியார் மற்றும் அரசு வாகனங்கள் என இரண்டுமே உதவும் என்று நாடாளுமன்ற மக்களவையில் பியூஷ் கோயம் பேச்சு.

14:13 (IST) 16 Mar 2021
பாதாள சாக்கடை மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட ஆணையர்களே பொறுப்பு

பாதாள சாக்கடையால் ஏற்படும் விபத்தினால் நிகழும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு. ஆணையர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

13:38 (IST) 16 Mar 2021
அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க அனுமதி இல்லை

அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க அனுமதி தர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இம்முடிவு.

13:33 (IST) 16 Mar 2021
வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் முதல்வர், எதிர்கட்சி தலைவர்

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக புதுக்கோட்டை தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக முக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

10:52 (IST) 16 Mar 2021
ஏப்ரில் 1-ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் இயங்கும்

ஏப்ரல் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்றும் ஏப்ரில் 1-ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

10:44 (IST) 16 Mar 2021
வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது என்றும் நஷ்டத்தை அரசுடைமையாக்குகிறது என்றும் கூறி வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆதரவளித்திருக்கிறார்.

10:41 (IST) 16 Mar 2021
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

Web Title: Tamil nadu assembly election live updates modi bjp congress admk dmk corona cases tamil news