Advertisment

Tamil Nadu Assembly Election Updates : வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Assembly Election Live Updates 21 ஆயிரத்திற்கும் அதிகமான ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Assembly Election Updates : வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Assembly Election Live Updates : தென் மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் டாக்டர் எஸ். முருகனை தேர்தல் தொடர்பான பதவிக்கு மாற்ற கடந்த புதன்கிழமை இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. முருகனுக்கு பதிலாகத் தென் மண்டல ஐ.ஜி.,-யாக நியமிக்க ஒரு குழுவை அனுப்புமாறும் தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. பணப் பரிமாற்றம் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் முருகன் முன்னிலையிலேயே நடந்திருப்பதுதான் இந்த மாற்றத்திற்கான காரணம். மேலும், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சி சீட்டு விநியோகத்தில், பெண்களுக்கு மோசமான பிரதிநிதித்துவம் குறித்து தமிழக மகிலா காங்கிரஸ் தலைவர் ஆர்.சுதா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆறரை மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016-ல் அவருடைய பெயரில் அசையும் சொத்துக்கள் மதிப்பு 3.52 கோடி ரூபாயும், அவருடைய மனைவியின் பெயரில் ரூ.2.71 கோடியும் மட்டுமே இருந்தன. அதுமட்டுமின்றி, அவருடைய பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.1.55 கோடியும், தன் மனைவியின் பெயரில் ரூ.1.2 கோடியும் 2016 வாக்கெடுப்பு வாக்குமூலத்தில் இருந்தன. ஆனால், இப்போது விஜயபாஸ்கர் பெயரில் ரூ.29.77 கோடியும் மற்றும் அவருடைய மனைவியின் பெயரில் ரூ.6.95 கோடி சொத்துக்களையும் வைத்திருக்கிறார். இதற்கிடையில், இந்த ஜோடியின் மொத்த கடன் 68% மட்டுமே அதிகரித்துள்ளது. இது 2016 மற்றும் 2021-க்கு இடையில் ரூ.9.91 கோடியிலிருந்து 16.71 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரித்திர பதிவேடு ரவுடிகளை கண்டறிந்து, 21 ஆயிரத்திற்கும் அதிகமான ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிடியாணை குற்றவாளிகள் 14 ஆயிரத்து 343 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 732 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"


  • 20:39 (IST) 18 Mar 2021
    மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு கொரோனா தொற்று

    மக்கள் நீதி மய்யம் சார்பில் வேளச்சேரி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சந்தோஷ்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 19:09 (IST) 18 Mar 2021
    அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் விளக்கம்

    பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக தரப்பில் வாய்ப்பு வழங்கப்படாததால், தான் சுயேச்சையாக போட்டியிடுவதாக அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.


  • 17:48 (IST) 18 Mar 2021
    மக்களின் துயரங்களை போக்கியது அதிமுக அரசு - முதல்வர் பழனிச்சாமி

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிச்சாமி, மக்களின் துயரங்களை போக்கியது அதிமுக அரசு தான் என்று தெரிவித்துள்ளார்.


  • 17:18 (IST) 18 Mar 2021
    உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம்

    புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் ஆண்டுகளில் கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று அனில் சகஸ்புரத்தே தெரிவத்துள்ளார்.


  • 17:16 (IST) 18 Mar 2021
    சுயேட்சை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

    பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ஜெயக்குமார் என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் அத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.


  • 16:57 (IST) 18 Mar 2021
    கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார்

    கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆற்று மணல் அள்ளுவது குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


  • 14:51 (IST) 18 Mar 2021
    கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை

    கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்களின் வீடுகளில் சென்னையில் இருந்து வந்த வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


  • 14:04 (IST) 18 Mar 2021
    சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கம்

    சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன், தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரனை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததால் அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.


  • 12:49 (IST) 18 Mar 2021
    பிரேமலதா விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல்

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


  • 12:45 (IST) 18 Mar 2021
    தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு

    இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான 'பண்டாரத்தி' பாடல் வரிகள் குறிப்பிட்ட சமூகத்தினரை பாதிப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


  • 12:43 (IST) 18 Mar 2021
    சாத்தான்குளம் கொலை வழக்கு 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று விசாரணை நடைபெற்று வரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


  • 11:58 (IST) 18 Mar 2021
    பாஜக வேட்பாளர் குஷ்பு இன்று வேட்பு மனு தாக்கல்

    ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு, ஆதரவாளர்களுடன் பேரணியாகச் சென்று நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


  • 11:33 (IST) 18 Mar 2021
    மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மாவட்ட ஆட்சியர் இவ்வாறு அறிவித்திருக்கிறார்.


  • 11:31 (IST) 18 Mar 2021
    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தோற்று பரவல்

    இந்தியாவில் மேலும் 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 172 பேர் உயிரிழந்துள்ளனர்.


  • 11:29 (IST) 18 Mar 2021
    கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு தோல்வி - ப.சிதம்பரம்

    இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது என்றும் இந்தியாவில் 3 கோடி தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


  • 10:57 (IST) 18 Mar 2021
    தங்கம் விலை உயர்வு!

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.34,064-க்கு விற்பனை; செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,258-க்கு விற்பனை.


  • 10:56 (IST) 18 Mar 2021
    அசாம், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி

    அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.


Tamil Nadu Politics Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment