Tamil Nadu Assembly Election Live Updates : மத்திய அரசு மக்களை வஞ்சிக்கும் அரசாகவே இருப்பதாகவும் முதலமைச்சர் பதவிக்காகத் தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் அரக்கோணம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
விருதுநகரில் நடிகை நமீதா பாஜகவிற்கு ஆதரவாகப் பரப்புரை செய்தபோது, ‘தாமரை மலராது’ என்று கோஷமிட்ட நபரை பாஜகவினர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மேலும் 15 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பூதலூர் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், தஞ்சையில் கொரோனா பாதித்த கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை 53ஆக உயர்ந்திருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று நாகூர் தர்கா, நாகநாத சுவாமி ஆலயம் மற்றும் வேளாங்கண்ணி மாதா ஆலயம் ஆகிய இடங்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபாடு செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. இதில் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முதல்வர் பழனிச்சாமி குறித்து அவதூறு பேசிய திமுக தலைவர்களில் ஒருவராக ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், என் தாயை பற்றி தரக்குறைவாக பேசிய அவருக்கு இறைவன் தக்க தண்டனை வழங்குவார் என்று முதல்வர் பழனிச்சாமி கண்கலங்கியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின்முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழ் மொழி மீது கலாச்சார தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உறவு சமநிலையில் இருக்க வேண்டும். தமிழகம் இல்லை என்றால் இந்தியா என்பதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை, ராயபுரம் கல்மண்டபம் சாலையில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ற்து திரு.வி.க. நகர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் கல்யாணியை ஆதரித்தும் வாக்குசேகரித்தார்.
மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் எனறும் மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு, எவ்வித வன்முறையும் இன்றி தேர்தல் நடைபெற்றுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
தமிழத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின், எந்த நிலையிலும் மக்களுடன் இருப்பவன் நான் என்றும், இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல.. தமிழகத்தின் உரிமையை மீட்பதற்கான தேர்தல்… மக்கள் மீது ரசாயனம், கலாச்சார தாக்குதலை மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக வழக்கறிஞர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “அன்பு காட்டினால் பேரன்பு காட்டக் கூடியவர்கள் தமிழர்கள். தமிழக பாரம்பரித்தை அழிக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசு முயற்சிக்கிறது. ஆனால், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது” என்று கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த முறை குடிசைப் பகுதிகளில் நோய் பரவல் குறைவு. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் தற்போது நோய் பரவல் அதிகரித்துள்ளது. நாம் கொரோனா வைரசை தடுப்பதால், உருமாற்றம் அடைகிறது.” என்று கூறினார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்
*அங்கன்வாடி ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும்
*மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
*ஆதி திராவிடர் வாரியத்தின் மூலம் வாங்கப்பட்ட கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்
உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையாகவ் வெளியிட்டுள்ளது.
தமிழக மக்கள் எல்லாம் வளமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என நட்டா தமிழில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சகோதர சகோதரிகளுக்கு புனித பண்டிகை பங்குனி உத்திரம் நன்னாளில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த திருவிழா தெய்வீக திருமணங்களின் புனித பவுர்ணமி. தமிழக மக்கள் எல்லாம் வலமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
— Jagat Prakash Nadda (@JPNadda) March 28, 2021
வேல் வேல் வெற்றி வேல்
மேற்கு வங்க மாநில நடிகையும், அம்மாநில பாஜகவின் பொதுச் செயலாளரும், ஹூக்ளி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான லாக்கெட் சாட்டர்ஜி முகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன வண்ணப் பொடி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சதி என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட சுக்கிரவார்பேட்டை, டி.கே.மார்க்கெட், சின்னஇலை தெரு, கிருஷ்ணப்பா குடியிருப்பு, பட்டுப்பூச்சி குடியிருப்பு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்ற சுஹாசினி, தனது சித்தப்பா கமல்ஹாசனுக்காக ஆதரவு திரட்டியுள்ளார். அப்போது அங்கிருந்த பெண்கள் நடிகை சுஹாசினிக்கு ஆசி வழங்கினர்.
டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெற்றி வேல்! வீர வேல்! என்ற முழக்கத்தோடு பங்குனி உத்திரத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்!
— Amit Shah (@AmitShah) March 28, 2021
இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான “பங்குனி உத்திரம்” திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி வேல்! வீர வேல்!
சென்னை மற்றும் தருமபுரியில் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை திமுகவின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சீனிவாச பெருமாளை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, தனது தந்தையை மருத்துவ கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
50 லட்சம் வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதாக கோவை தெற்கு தொகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ம.நீ.ம. வேட்பாளர் கமல்ஹாசன்.