Advertisment

News Highlights: இன்று தமிழக பாஜக தேர்தல் அறிக்கை

Tamil Nadu Assembly Election Live Updates திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் காலை 8 மணி முதல் சேப்பாக்கத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
News Highlights: இன்று தமிழக பாஜக தேர்தல் அறிக்கை

Tamil Nadu Assembly Election Live Updates : தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற நிலையில் பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட உள்ளது.

Advertisment

கரூரில் நேற்று இரவு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு காரில் சென்றுகொண்டிருந்த அதிமுக வேட்பாளர், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை திமுகவினர் வழி மறைத்து, இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இருகட்சியினரும் கற்களாலும், குச்சிகளாலும் தாக்கிக்கொண்டனர். இதனால், அமைச்சரின் உதவியாளர் உட்பட 10 பேருக்கும் மேற்பட்ட அதிமுகவினர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

விடுமுறை நாளையொட்டி மக்கள் பெரும்பாலும் வீட்டில் இருப்பார்கள் என்பதால் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் காலை 8 மணி முதல் சேப்பாக்கத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

தஞ்சையில் ஏற்கனவே 143 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு 168 ஆக உயர்ந்துள்ளது. கும்பகோணத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக் குறைந்தது 8 முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"


  • 22:33 (IST) 21 Mar 2021
    மக்களின் ஏழ்மையை இலவசங்கள் ஒழிக்காது - கமல்ஹாசன்

    கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் திமுக உருவானது காலத்தின் கட்டாயம், தற்போது அதை அகற்றுவதும் காலத்தின் கட்டாயதான் என்று கூறியள்ளார். மேலும் மக்களின் ஏழ்மையை இலவசங்கள் ஒழிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  • 20:12 (IST) 21 Mar 2021
    சென்னையில் மேலும் 466 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று 1289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மேலும் 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மூலம் சென்னையில் இதுவரை 2.41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு்ள்ள நிலையில், சென்னையில் 2,985 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை 4,197 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்


  • 18:54 (IST) 21 Mar 2021
    ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


  • 18:52 (IST) 21 Mar 2021
    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா

    இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடந்த 19-ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது உடல்நலத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.


  • 18:51 (IST) 21 Mar 2021
    ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மோடி வேறு மாநிலத்தில் தில்லு முள்ளு செய்யலாம் ஆனால் தமிழகத்தில் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.


  • 18:50 (IST) 21 Mar 2021
    முதல்வர் தேர்தல் பிரச்சாரம்

    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், முதல்வர் பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தில், "தமிழகத்தில் மதச்சண்டை, ஜாதி சண்டை கிடையாது " என்று தெரிவித்துள்ளார்.


  • 18:48 (IST) 21 Mar 2021
    தமிழகத்தில் மேலும் 1,289 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 3-வது நாளாக பாதிப்ப எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 17:31 (IST) 21 Mar 2021
    திமுக ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி - சி.டி.ரவி

    திமுக கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, திமுக ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி என்று குறிப்பிட்டுள்ளாார். மேலும் சிஏஏ சட்டசத்தை கைவிடுவது என்று பேச்சுக்கே இடமில்லைஎன்று கூறிய அவர், அனைத்து மாநிலங்களையும் சரி சமமாக நடத்துவதே எங்கள் நோக்கம் என்று கூறினார்.


  • 16:21 (IST) 21 Mar 2021
    அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக திமுக ஆர்.எஸ்.பாரதி புகார்

    அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.


  • 15:17 (IST) 21 Mar 2021
    ஸ்டாலின்தான் போலி விவசாயி - முதல்வர் பழனிசாமி விமர்சனம்

    தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, “நான் கட்சியில் படிப்படியாக வளர்ந்தவன். ஸ்டாலின் அப்படி அல்ல. என்னை போலி விவசாயி என்று சொல்லும் அவர் கரும்பு தோட்டத்தில் சிமெண்ட் சாலை போட்டு நடந்தார். அவர்தான் போலி விவசாயி” என்று விமர்சனம் செய்தார்.


  • 15:13 (IST) 21 Mar 2021
    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓம் பிர்லா உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


  • 14:03 (IST) 21 Mar 2021
    ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவு; மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

    ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஐ.நா மனித உரிமை மன்ற தீர்மானம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


  • 13:59 (IST) 21 Mar 2021
    துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்பு மனு ஏற்பு

    சென்னை, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்பு மனு, பெயர் பிரச்சினை காரணமாக வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.


  • 13:11 (IST) 21 Mar 2021
    நடிகர் கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

    நடிகர் கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  • 13:05 (IST) 21 Mar 2021
    மக்களை நம்பியே அதிமுக உள்ளது - முதல்வர் பழனிசாமி

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் பிரசாரம் செய்த முதல்வர் பழனிசாமி, மக்களை நம்பியே அதிமுக உள்ளது. மக்களால் தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும்” என்று கூறினார்.


  • 13:03 (IST) 21 Mar 2021
    தமிழக சட்டமன்ற தேர்தல்: நாளை வெளியாகிற பாஜக தேர்தல் அறிக்கை

    தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை நாளை மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிடுகிறார்.


  • 12:02 (IST) 21 Mar 2021
    முதல் முறையாக நஷ்ட ஈடு வழங்கியது அதிமுகதான் - முதல்வர் பழனிசாமி

    திருவண்ணாமலை, வந்தவாசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு முதன்முறையாக நஷ்டஈடு வழங்கியது அதிமுகதான் என்றும் இந்தியாவிலேயே, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் அளிப்பது தமிழக அரசு மட்டும்தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


  • 11:59 (IST) 21 Mar 2021
    மத்திய அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் - வைகோ கண்டனம்

    இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் மத்திய அரசை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் விடுத்துள்ளார்.


  • 11:58 (IST) 21 Mar 2021
    விவசாயிகளை சந்தித்து பேச முதல்வர் தயாரா? - ஸ்டாலின் கேள்வி

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, 'எங்கு போனாலும், விவசாயி விவசாயி என்று முதல்வர் பேசி வருகிறார். டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேச முதல்வர் தயாரா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


  • 11:56 (IST) 21 Mar 2021
    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

    தேர்தல் நடத்தை விதிகளை மீறி நேற்று இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் நடத்தியதாகக் கூறி விருதுநகரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


Udhayanidhi Stalin Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment