Tamil Nadu Assembly Election Live Updates : கடந்த 24-ம் தேதி கும்மிடிப்பூண்டியில் பரப்புரையைத் தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அடுத்த 2 நாட்கள் சென்னையில் சேத்துப்பட்டு, புளியந்தோப்பு, வில்லிவாக்கம், பல்லாவரம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சோழிங்கநல்லூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் முருகனை ஆதரித்து கோவிலம்பாக்கம், கண்ணகி நகர், சிறுசேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்துள்ளார் விஜயகாந்த்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி அமமுக வேட்பாளர் சண்முகவேலு மற்றும் உடுமலை வேட்பாளர் பழனிச்சாமி ஆகியோரை ஆதரித்துப் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளும் கட்சியினர் ரூபாய் நோட்டுகளை நம்பியே உள்ளதாகவும் அமமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழல் ஆட்சியை ஒழிக்க முடியும் என்றும் கூறினார்.
டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 124-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முழுமையான பொது முடக்கம் அறிவிக்கப்படும் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் விலை ரூ.92.77-க்கும், டீசல் விலை ரூ.86.10-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் பாலாஜி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை போல சட்டமன்றதேர்தலிலும் பாஜக வாஷ்அவுட் ஆகும் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி புதுச்சேரி வருகை முன்னிட்டு இன்றும் நாளையும், புதுச்சேரி வழித்தடத்தில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபபட்டுள்ளது. பிரதமரின் வருகை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு்ள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நிதி மய்யத்தின் கூட்டணி கட்சி வேட்பாளர் பி.டி செல்வக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை கஸ்தூரி, தேர்தல் முடிந்ததும் திமுக வேட்பாளர்கள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வந்துவிடுவார்கள் என்றும், அதிமுக வேட்பாளர்கள் முயற்சி மட்டுமே செய்து வருகிறார்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாய்க்கனூரில் பிரச்சாரம் மேற்கொண்ட துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் “திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு போன்றது என்று விமர்சித்துள்ளார்.
Mo is een with his on-the-field kin, namma #kadaikuttysingam! #whistlepodu #yellove 💛🦁 pic.twitter.com/akpVEBrihq
— Chennai Super Kings (@ChennaiIPL) March 29, 2021
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் 9ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் 10ம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. இதையடுத்து சென்னை அணி வீரர்கள் வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் சாம் கரண் மற்றும் மொயின் அலி அணியில் இன்று இணைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றும் இரு தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் பணியாற்றும் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கடந்தாண்டு கோயம்பேடு மார்கெட் கொரோனா பரவல் மையமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
கன்னியாகுமரி மாவட்டம் மந்தாரம்புதூர் எனும் இடத்தில உள்ள மனநல காப்பகத்தின் 46 நோயாளிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது ஆச்சாரிபள்ளம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“இனிமேல் என் அரசியல் பயணம், ஆன்மிக அரசியல் பயணமாக இருக்கும். ஓ.பி.எஸ் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், ஆனால் நான் என்னுடைய நிலைப்பாடை தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன். அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பலம் இருக்கிறது. இவைத்தவிர அவர்கள் பக்க பலத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளார்கள்.அதனையும் தாண்டி அவர்களிடம் பணபலம் உள்ளது. ஆகையால் அங்கு சென்று நான் என்ன செய்யப் போகிறேன். ” என்று கூறியுள்ளார். முன்னதாக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என டி.ராஜேந்தர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டம் மந்தாரம்புதூர் எனும் இடத்தில உள்ள மனநல காப்பகத்தின் 46 நோயாளிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் அதிமுக ,பாமக போன்ற கட்சிகள் இருக்காது எனவும், அக்கட்சிகள் பாஜக உடன் இணைந்து விடும் அல்லது தலைவர்கள் பாஜகவில் இணைந்து விடுவார்கள் எனவும், கும்பகோணத்தில் நடந்த பிரச்சாரத்தில் வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளர்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் உட்பட 8 பேர் மீது வடக்கிபாளையம் காவல்துறை 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. திமுகவை சேர்ந்த பிரவீன் என்பவருக்கு பொள்ளாச்சி ஜெயராமனின் தூண்டுதலின் பெயரில் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வருகிறார். தமிழகத்தில் மொத்தமாக 88,937 சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்று அவர் அறிவித்துள்ள்ளார்.
நெல்லை அருகே 12 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து எடுத்துச் சென்றதால் சிறப்பு வட்டாட்சியர் லட்சுமி நடவடிக்கை.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது விழுப்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு.
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, குமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எக்காரணம் கொண்டும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படமாட்டாது என்றும் நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை கொண்டு வர தமிழக ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளே துணை நின்றன என்று முக ஸ்டாலின் பிரச்சாரம்
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ஆதரவாக திருநங்கைகளிடம் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதனை தொடர்ந்து ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக 24 மணி நேரத்தில் மாற இருப்பதாகவும் மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு.
சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கியது. மேலும், கப்பலை சுயமாக இயங்க செய்யும் முயற்சியில் மீட்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.
என் பேச்சால் கலங்கியதால் முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் செய்ய போகிற வாக்குறுதிகளை, உறுதிமொழி பத்திரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டு வாக்கு சேகரித்தார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்.
முதல்வரின் தாயாரைப் பற்றி ஆ.ராசா இழிவாக பேசியது கண்டனத்திற்குரியது என்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஆ.ராசா தெரிவித்த கருத்து ஒட்டுமொத்த பெண் இனத்தையே இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் அவரை கட்சியிலிருந்தே விலக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.