வாக்குகள் வித்தியாசம்: தமிழகத்தில் டாப் 5 வெற்றியாளர்கள் யார், யார்?

இந்த சட்டமன்றத் தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த சட்டமன்றத் தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
tamil nadu assembly election result, top 5 marginal vote winning candidates, dmk I Periyasamy, EV Velu, Edappadi K palaniswami, KN Nehru, MK Stalinm, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் , ஐ பெரியசாமி, எவ வேலு, எடப்பாடி பழனிசாமி, கேஎன் நேரு, முக ஸ்டாலின், dmk, aiadmk, dmk winning candidates

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 160 இடங்கள் வரை பிடித்து ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

Advertisment

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

இவருக்கு அடுத்த படியாக, தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக திமுக வேட்பாளர் எ.வ.வேலு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். .

இவர்களை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை இழந்தாலும் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 93,802 வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisment
Advertisements

இவர்களை அடுத்து திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கேன்.என்.நேரு 1,12,515 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பத்மநாபனைவிட 81,283 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவர்களை அடுத்து, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

1.ஐ பெரியசாமி, 2. எ.வ.வேலு, 3.எடப்பாடி பழனிசாமி, 4.கே.என்.நேரு, 5.மு.க.ஸ்டாலின் என இந்த 5 பேர்தான் இந்த தேர்தலில் தமிழகத்திலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Aiadmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: