ஓபிஎஸ் இழுபறியில் முன்னிலை, இபிஎஸ்- ஸ்டாலின் வெற்றிமுகம்

தமிழகத்தின் இரு பெரும் துருவத் தலைவர்கள் கருணாநிதி – ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெற்றுள்ள சட்டமன்றத் தேர்தல் இது என்பதால் நட்சத்திர வேட்பாளர்களும் விஐபி வேட்பாளர்களும் அதிக அளவில் போட்டியிட்டுள்ள தேர்தலாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.

tamil nadu assembly election results, தேர்தல் முடிவுகள், விஐபி தொகுதிகள், விஐபி வேட்பாளர்கள், ஓபிஎஸ், கமல்ஹாசன், சீமான், எல் முருகன், டிடிவி தினகரன், vip cadidates, ops, kamal haasan, seeman, l murugan, ttv dhinakaran, திமுக, அமமுக, அதிமுக, மநீம, நாதக, dmk, aiadmk, ammk, mnm, ntk

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தின் இரு பெரும் துருவத் தலைவர்கள் கருணாநிதி – ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெற்றுள்ள சட்டமன்றத் தேர்தல் இது என்பதால் நட்சத்திர வேட்பாளர்களும் விஐபி வேட்பாளர்களும் அதிக அளவில் போட்டியிட்டுள்ள தேர்தலாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.

விஐபி வேட்பாளர்கள்:

2021 சட்டமன்றத் தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. திமுகவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோர் விஐபி வேட்பாளர்களாக உள்ளனர். அதே போல அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவில் அக்கட்சியின் தலைவர் எல்.முருகன், நடிகை குஷ்பு, ஆகியோர் விஐபி வேட்பாளர்களாக உள்ளனர். அமமுகவில் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் விஐபி வேட்பாளர்களாக உள்ளனர்.

ஸ்டாலின் – ஆதிராஜாராம் – கொளத்தூர்

சென்னை கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முன்னிலை பெற்று வருகிறார். தற்போது அந்த தொகுதியில் 11 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், ஸ்டாலின், 39840 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம், 14674 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். தற்போதுவரை ஸ்டாலின் 25166 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி – சம்பத்குமார் – எடப்பாடி

வழங்கம் போல தனது சொந்த தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனால் அந்த தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், தற்போது அந்த தொகுதியில் 13 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமி 74234 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத் குமார் 27592 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். தற்போதுவரை எடப்பாடி பழனிச்சாமி 46,642 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

ஓ.பி.எஸ் vs தங்க தமிழ்ச்செல்வன் – போடிநாயக்கனூர்

அதிமுக கட்சியிலும் நிர்வாகத்திலும் தனது பிடியை சற்று தளரவிட்டுள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி போல, இந்த தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் போடிநாயக்கனூரில் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்பது அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக திமுகவின் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் களம் இறங்கியுள்ளார். ஓ.பி.எஸ் – தங்க தமிழ்ச்செல்வனுக்கு எதிரான மோதல் இந்த தேர்தலிலும் எதிரொலிகிறது.

ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ-வாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரன் ஆதரவாளராக மாறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியு அளிக்கப்பட்டது.

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இருந்த காலத்திலேயே ஓ.பன்னீர் செல்வத்துக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது. இப்போது தங்க தமிழ்ச்செல்வன் எதிர்க்கட்சியில் உள்ளதால் இன்னும் உக்கிரமாக எதிர்க்கிறார்.

2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தங்க தமிழ்ச்செல்வன் 6538 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் 6414 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து பின்னடைவு சந்தித்து வருகிறார்.

4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், ஓ.பன்னீர்செல்வம் 10,411வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். தங்க தமிழ்ச்செல்வன் 10061 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், ஓ.பன்னீர்செல்வம் 17,828 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். தங்க தமிழ்ச்செல்வன் 15,341 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், ஓ.பன்னீர்செல்வம் 24,772 வாக்குகள் பெற்று 4,699 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். தங்க தமிழ்ச்செல்வன் 20703 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாள சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறினாலும் முடிவை மாற்றிக்கொண்டு திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், வடசென்னையில் உள்ள திருவொற்றியூர் தொகுதியில் அதிக அளவில் வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில், சென்னையில் நாம் தமிழர் கட்சி வலுவாக இருப்பதாக திருவொற்றியூர் தொகுதி கருதப்படுகிறது. அதனால்தான் சீமான் திருவொற்றியூரில் களம் இறங்கியுள்ளார் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

அதே போல, தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் சீமானுக்கு பெரும் நெருக்கடியாக உள்ளனர். திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் கே.பி.சங்கர், அதிமுக சார்பில் க.குப்பன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோட்டீஸ்வரன், அமமுக சார்பில் சௌந்தர பாண்டியன், மக்கள் நீதி மய்யம் சார்பில் மோகன் உள்பட 20 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

திமுக, அதிமுக, மநீம, அமமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களின் கடும் போட்டியைத் தாண்டி ஒரு கட்சியின் தலைவராக சீமான் திருவொற்றியூரில் வெல்வாரா என்பதை பார்ப்போம்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு பின்னடைவை சந்தித்து வருகிறார். தற்போதுவரை சீமான், 11969 வாக்குகள் பெற்றுள்ளார்.

துரைமுருகன் – ராமு – காட்பாடி

13-வது முறையாக தனது சொந்த தொகுதியான காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அந்த தொகுதியில், தற்போது 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் ராமு, 48189 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 45640 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். தற்போது 2549 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக களம் காண்கிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரி வேந்தரின் ஐஜேகே கட்சிகள் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

கமல்ஹாசன் முதலில் சென்னை மைலாப்பூர், ஆலந்தூரில் போட்டியிடுவார் என்று பேசப்பட்ட நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயகுமார் இரண்டாவது முறையாக களம் இறங்கியுள்ளார்.

எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்த பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கும் பெரிய போட்டியாளராக வந்திருக்கிறார் கமல்ஹாசன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மநீம கோவையில் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதால் கமல்ஹாசன் இங்கே களம் இறங்கியுள்ளார். கோவை தெற்கு தொகுதியை வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் மயூரா ஜெயக்குமாரை தாண்டி கமல்ஹாசன் கைப்பற்றுவாரா? என்பதைப் பார்ப்போம்.

3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மநீம தலைவர் கமல்ஹாசன் 4293 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் 4409 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். வானதி ஸ்ரீனிவாசன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

5 வது சுற்று முடிவு – கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் 2,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

6 வது சுற்று முடிவு – கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் 2,912 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

டிடிவி தினகரன்

அதிமுகவில் இருந்து சசிகலாவுடன் சேர்த்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேதலில் வெற்றி பெற்று அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்தினார். பிறகு, அமமுகவைத் தொடங்கி மக்களவைத் தேர்தலை சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றார்.

அதிமுகவை மீட்பேன் என்று கூறிவரும் டிடிவி தினகரன், தொடர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆ.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும் மீண்டும் அங்கே போடியிடாமல் ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் கோவில்பட்டியில் போட்டியிட முடிவு செய்து களம் இறங்கியுள்ளார்.

கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அதே போல, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சீனிவாசன் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக திமுகவுக்கே தண்ணீர் காட்டிய டிடிவி தினகரன் இந்த தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கடும் போட்டியை கொடுத்து வருகிறார்.

கோவில்பட்டி தொகுதியில் 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 9638 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜு 10,997 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவசன் 4,387 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தொடர்ந்து 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், கோவில்பட்டி தொகுதியில், அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜு 5,549 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவசன் 12,504 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

எல்.முருகன்

எல்.முருகன் பாஜக தலைவராக பதவியேற்றதில் இருந்து தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார். வேல் யாத்திரை, பொங்கல் திருவிழா என நடத்தி பாஜகவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். அதுமட்டுமில்லாமல், அவர் திமுகவில் இருந்தும் நிறைய சினிமா பிரபலங்களையும் பாஜகவுக்கு கொண்டுவந்தார்.

இந்த சூழலில்தான், சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு தாராபுரம் தொகுதியில் களம் காண பாஜக வாய்ப்பளித்தது. தாராபுரம் தொகுதியில் பெரும்பாலும் குண்டகம் பகுதியில் மட்டுமே பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள பகுதியாக கருதப்படுகிறது.

தாராபுரம் தொகுதி 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவில் கயல்விழி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார் எனபதே அவருடைய பலமாக இருக்கிறது.

இங்கே திமுக வேட்பாளர் கயல்விழிக்கும் பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
இவர்களுடன் தாராபுரம் தொகுதியில் பகுஜன் கட்சி சார்பில் ரங்கசாமி, அமமுகவில் கலாராணி, மநீம சார்பில் சார்லி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரஞ்சிதா ஆகியோர் களம் கண்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் எல்.முருகன் திமுக வேட்பாளர் கயல்விழியைவிட கிட்டத்தட்ட 2000 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார்.

5வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் 19,113 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் கயல்விழி 17,067 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக வேட்பாளர் எல்.முருகன் 2046 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

அண்ணாமலைபாஜக

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கர்நாடகாவின் சிங்கம் போலீஸ் என்று அழைக்கப்பட்டார். ஆனால், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து அனைவரையும் திகைக்க வைத்தார். நடிகர் ரஜினிகாந்த்தின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலைதான் என்று ஊடகங்களில் பேசப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் பாஜகவில் இணைந்தார். ரஜினிகாந்த்தும் கொரோனா தொற்றுநோயைக் காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டார்.

பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு பாஜக மாநில துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் களம் இறக்கப்பட்டார். அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை எதிர்த்து திமுக வேட்பாளர் இளங்கோ போட்டியிட்டுள்ளார். அண்ணாமலை கட்சியைத் தாண்டி தீவிரமாக பிரசாரம் செய்துள்ளதால் அண்ணாமலைக்கும் இளங்கோவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதில் 8-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ 3812 வாக்குகள் முன்னலை பெற்றுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu assembly election results vip cadidates ops kamal haasan seeman l murugan ttv dhinakaran

Next Story
விஐபி தொகுதி: எடப்பாடியில் 90,255 வாக்குகளுகள் வித்தியாசத்தில் முதல்வர் பழனிசாமி வெற்றிEdappadi K Palaniswami winning status, edappadi constituency, எடப்பாடி பழனிசாமி, vote எடப்பாடி தொகுதி நிலவவரம், வாக்கு எண்ணிகை, எடப்பாடி தொகுதி முன்னணி நிலவரம், counting,tamil nadu assembly election, aiadmk, cm edappai k palaniswami
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express