Advertisment

அம்மாவின் விருப்ப தொகுதி; வெவ்வேறு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிமுக உறுப்பினர்கள்!

இந்த தொகுதியே ஜெயலலிதாவை சட்டமன்றத்திற்குள் நடைபோட வைத்தது. அப்போது அவரை எதிர்த்து திமுக சார்பில் முத்து மனோகரன் போட்டியிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Assembly Elections 2021 bodinayakanur assembly constituency candidates will have tough fight

Tamil Nadu Assembly Elections 2021 : சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் யார் என்று அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டு வந்த நிலையில் எந்த தொகுதியில் மும்முனை போட்டிகள் நிலவும், எந்த தொகுதியில் பல்முனை போட்டிகள் நிலவும் என்பது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் நாம் இன்று சந்திக்க இருக்கும் களம் போடி.

Advertisment

வேட்பாளர்களின் வரலாறு

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் இங்கு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அங்கே களம் காண இருக்கிறார் தங்கத்தமிழ்ச் செல்வன். ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்து பின்னர் அமமுகவிற்கு சென்று, அங்கே தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார் தங்கத்தமிழ்ச் செல்வன்.

2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அவர் அமமுக சார்பில் போட்டியிட்டார். திமுக சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். ஆனால் ரவீந்திரநாத் அந்த தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் ஓ. பன்னீர் செல்வம்.

அமமுக சார்பில் முத்துச்சாமி போட்டியிடுகிறார். 1982ம் ஆண்டு அதிமுகவில் கிளைச்செயலாளராகவும், சின்னமனூர் ஒன்றிய செயலாளராகவும், வேளாண் விற்பனைக் குழுவில் தலைவராகவும் பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இவர் அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். வேட்பாளர்களின் வரலாற்றினை தெரிந்து கொண்ட நாம் தற்போது போடி தொகுதியின் வரலாற்றையும், அங்கே மக்களின் ஆதரவைப் பெற்று சட்டப்பேரவை நுழைந்த தலைவர்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

போடி நாயக்கனூர் தொகுதி வரலாறு

இந்த சட்டமன்ற தொகுதியில் 4 முறை காங்கிரஸ் கட்சியும் ஏழு முறை அதிமுகவும் 3 முறை திமுகவும் கைப்பற்றியுள்ளது. உண்மையில் போடிநாயக்கனூர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சட்டமன்ற தொகுதியாகவே அமைந்திருக்கிறது. 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய சட்டமன்ற தொகுதி இதுவாகும். இந்த தொகுதியே ஜெயலலிதாவை சட்டமன்றத்திற்குள் நடைபோட வைத்தது. அப்போது அவரை எதிர்த்து திமுக சார்பில் முத்து மனோகரன் போட்டியிட்டார்.

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

ஓ. பன்னீர் செல்வம் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அங்கே திமுக சார்பில் எஸ். லெட்சுமணன் போட்டியிட்டார். ஓ. பன்னீர் செல்வம் 99 ஆயிரத்து 531 வாக்குகளை பெற்றிருந்தார். அவரின் வாக்கு விகிதம் 49.86% ஆகும். எஸ். லெட்சுமணன் அவருக்கு சற்றே குறைவான வாக்குகளையே பெற்றார். 15 ஆயிரத்து 608 வாக்குகள் வித்தியாசம் அவரை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. 42.04% வாக்குகள் அதாவது, 83, 923 வாக்குகளை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க தமிழ் செல்வனுக்கு இந்த பகுதியில் நல்ல வரவேற்பு இருக்கின்ற பட்சத்தினால் அவருக்கான வாக்குகள் அப்படியே திமுகவிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று முத்துசாமியின் போட்டி பன்னீர் செல்வத்திற்கான வாக்கினை பிரிக்கும் யுத்தியாக பலராலும் பார்க்கப்படுகிறது. இவர்கள் தவிர்த்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கணேஷ் குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் பிரேம் சந்தர் போட்டியிடுகிறார். இருப்பினும் மூன்று முன்னாள் அரசியல் நண்பர்களுக்கு இடையே நடக்கும் அதிகாரத்திற்கான போட்டியாகவே அமைந்திருக்கிறது போடியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment